Dr.PadminiPhD Kumar

Tragedy

3.0  

Dr.PadminiPhD Kumar

Tragedy

ஆத்ம பலம்

ஆத்ம பலம்

1 min
271


      

ஒரு குளிர் இரவில், ஒரு கோடீஸ்வரர் ஒரு வயதான ஏழையை வெளியில் சந்தித்தார். அவர் அவனிடம், “உனக்கு வெளியில் குளிர் இல்லையா, நீ ஒரு கோட் கூட அணியவில்லையே?”

முதியவர் பதிலளித்தார், “என்னிடம் கோட் இல்லை, ஆனால் எனக்கு அது பழக்கமாகிவிட்டது.” கோடீஸ்வரர் பதிலளித்தார், “எனக்காக காத்திருங்கள், நான் இப்போது என் வீட்டிற்குச் சென்று உனக்காக ஒரு கோட் எடுத்துக்கொண்டுவருகிறேன்.”

ஏழை மகிழ்ச்சியில் ஆழ்ந்தான், அவருக்காக காத்திருப்பேன் என்று சொன்னான். கோடீஸ்வரர் வீட்டை அடைந்து அங்கே வேலை மும்முரத்தில் அந்த ஏழையை மறந்தார்.


மறுநாள் காலையில் எழுந்ததும் கோடீஸ்வரருக்கு ஏழையின் நினைவு வந்தது.உடனே ஒரு கோட்டை எடுத்துக் கொண்டு அந்த ஏழையைத் தேடிச் சென்றார்.அங்கு அந்த ஏழை இறந்திருந்தார்.பக்கத்தில் அவர் எழுதிய குறிப்பு ஒன்று இருந்தது.அதில்,”ஐயா! நான் தங்கள் வாக்குகளை நம்பியதால் இதுவரை குளிரைத் தாங்கிய என் ஆத்ம பலம் என்னை விட்டு அகன்று விட்டது.இரவெல்லாம் தங்கள் வாக்குகளை எண்ணியே காத்திருக்க குளிர் தாங்கும் நிலை இல்லாமல் சாய்ந்து விட்டேன்.”என்று எழுதப் பட்டிருந்தது.


                  வாக்கு கொடுத்தால் அது எத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் என்றும், கொடுத்த வாக்கை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் கோடீஸ்வரர் அப்போது உணர்ந்தார்.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy