நுரையாய் மரித்த சமத்துவம்
நுரையாய் மரித்த சமத்துவம்
ஏடெடுத்துப் படிக்கவுமே
சமத்துவம் வேண்டித் தான்
போராடி நின்ன காலமெலாம்
மலையேறிப் போச்சுதம்மா !
கலாச்சார சீரழிவுலயுந்தான்
எங்களுக்கும் பங்குண்டு என்றே
மது குடிக்கும் உரிமையெடுத்தே
சமத்துவம் நிலைநாட்டிய களிப்பிலே
மது புட்டி திறக்க - ஆங்கே
சமத்துவமும் நுரையாய் பொங்கியே
அடங்கி வழிந்தோடியதம்மா !