நினைவுகளாய்.....
நினைவுகளாய்.....


நினைவு கல்லறைக்குள்
புதையுண்ட என் மனதிற்கு
மீண்டும் உயிரூட்டிட
தேவை நீ தான்
இறுகிய எண்ணங்களின்
அழுத்தத்தில் இயங்க மறுக்கும்
என் இதயத்தின் ஓட்டத்தில்
லயம் மாறி ஒலிக்கும்
ஒவ்வொரு விநாடியும்
புதியதாய் பிறக்கின்றேன்
நடைப்பிணமாய் வாழுகின்ற
வாழ்க்கையில் தினமும்
மயான அமைதியே...