வாயில் ஒட்டிய அல்வா
வாயில் ஒட்டிய அல்வா


அப்பா எங்கேடா?
வீட்டுல நீங்க ரொம்ப வேலை கொடுக்கறீங்கன்னு கட்டிலுக்கு அடியில் தூங்கறாரும்மா!
ஏண்டா! நானே வேலைக்காரி வரலைன்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன். இதுல முகமூடி வேற போட்டு வேலை செய்ய வேண்டி இருக்கு!
குண்டு உடம்பு இளைக்க ஜிம் போவீங்க! வீட்டுல வேலை செய்தா குறைஞ்சிடுமாக்கும்!
குரல் வந்த திசையைத் தோராயமாக உத்தேசித்து சன்னலின் ஓரம் எட்டிப் பார்த்தாள் கௌரி.
மகள் சந்தியா தனது தோழியிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டாள்.
நம்மைச் சொல்லலை என னதிற்குள் புன்னகை பூத்தபடி சந்தியா! உள்
ளே வா!
அம்மா! நீங்க கிண்டிய அல்வா உங்க மாதர்சங்கம்வரை பரவியிருக்கும்மா!
உன்னைத் தொணப்பி கேள்வி கேட்டுட்டே இருப்பான்னு சொல்வீங்களே! குண்டு பரிமளா..அவங்க அல்வா தின்ன நேரத்திலிருந்து இதுவரை பத்துமுறை டாய்லட் போய்ட்டு வந்துட்டாங்களாம்!
சட்டியை விட“்டு எடுக்க வரலைன்னு நினைத்தபோதே சந்தேகப்பட்டேன். இரும்பு சட்டி இல்லையா! அதான் கொஞ்சம் சீனி போடவும் ரொமப ஒட்டிக்கிச்சு...
அதுக்கு பேதியாகாதே அம்மா! எந்த டப்பா அம்மா சீனி?
பச்சை கலர்தான்...
ஹைய்யோ..அது பேதி மருந்தும்மா....