பாட்டியின் பாதுர்ஷா
பாட்டியின் பாதுர்ஷா
குகனுக்கு விடுமுறை இம்முறை இல்லவே இல்லை.
இங்கு( அமேரிக்கா) வந்து வருடங்கள் பல ஆகிவிட்டது. இன்னும் குகன், தனது பழைய நினைவுகளை மறக்காமல் இருப்பது ஒரு ஆச்சரியமும் இல்லை.
அவன் தனது பழய நினைவுகள் அனைத்தையும் எண்ணி பார்க்க ஆரம்பித்தான். சிறு வயதில் அவன் தாத்தா பாட்டி வீட்டில் அவன் கொண்டாடிய அனைத்து பண்டிகைகள். என ஒவ்வொன்றாக எண்ணி பார்க்க ஆரம்பித்தான்.
அந்த ஞாபகங்களில் அவன் மனதுக்கு பிடித்த இரண்டு விஷயங்கள் உண்டு ஒன்று அவன் பாட்டியின் கையால் செய்த பாதுர்ஷா மற்றம் பாதுர்ஷா காதலி.
ஆமாம், அவன் பாட்டி செய்யும் பாபாதுர்ஷா அவ்வளவு சுவையாகவும் பதமாகமும் இருக்கும். அதை சாப்பிட அவ்வூரல் உள்ள அனைவரும் ஆசைப்படுவது வழக்கம். ஆனால் பாட்டி தன் வீட்டு பிள்ளைகளுக்கு செய்ய வே சரியாக இருக்கும். அவ்வளவு பெரிய குடும்பம்.
அப்பட்ட சுழலில், குகன் தன் மனம் கவர்ந்த பள்ளி தோழி ககமலாவிற்கு மட்டும், யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
அந்த பாதுர்ஷாவின் மேல் குகனுக்கும் கமலாவுக்கும் அதிக காதல். ஒரு நாள் பாட்டி எப்படி பாதுர்ஷாவின் அளவு குறைகிறது என யோசித்துக்கொண்டே இருந்தாள். அப்போது குகன் அந்த பாதுர்ஷா வைத்திருந்த பாத்திரத்தில் ஒரு சின்னஞ்சிறு கை திறந்து முடுவதை பார்த்தாள்.
அவள் மேல்ல தொடர்ந்து பேளாள், குகன் கமலாவுக்கு இரண்டு பாதுர்ஷாவை கொடுப்பதை பார்த்தாள்.
அடேய் பயலே, நீதானட இப்படி பாதுர்ஷாவை திருடுவது என்ன செய்கிறேன் பார் என்றாள். அதை பற்றி எண்ணி சிரித்துக்கொண்டே இருந்தபோது, அலைப்பேசி ஒலித்தது.
குகன், மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வாங்க என்றால் அவனின் மனைவி. அப்படிய வருகிறேன் என கூறிய குகன் வீட்டிற்க்கு சென்றான்.
வீட்டின் உள்ளே சென்று, தயாராகி பின் உணவு பரிமாறும் மேசைக்கு சென்று அமர்ந்தான். முக்கை துளைக்கும் பாதுர்ஷாவின் மனம், பாத்திரத்தை திறந்து உண்ண துவங்கினான். அதே சுவை, பாட்டியின் கை மனம் மாறாது இருக்கிறது என எண்ணுகையில் "கமால, பாட்டியின் கைப்பக்குவம் அப்படியே உள்ளது என்றான். " அதற்க்கு, இல்லையாபின்ன, பாட்டியின் பாதுர்ஷா பக்குவத்தை அவரே எனக்கு கத்துகொடுத்தில்லவா. " அப்படி தான் இருக்கும்.
ஆமாம் இந்த பாதுர்ஷாவால் நமக்குள் காதல் பிறந்து மலர்ந்து இப்படி இருவது வருடங்கள் ஓடிவிட்டன, என குகன் கூற அலைப்பேசியில் பாட்டி அலைப்பதைக்கண்டு மகிழ்ந்தனர் இருவரும் கையில் பாட்டியின் பாதுர்ஷாவை வைத்து.
