Saravanan P

Comedy Drama Romance

4  

Saravanan P

Comedy Drama Romance

நீ என் மனைவியடி

நீ என் மனைவியடி

2 mins
247


குழந்தைகள் விளையாடி ஓடிக்கொண்டிருந்தனர் கல்யாணம் மண்டபத்தில் பின்பு அவர்கள் மேடையில் ஏறி மாப்பிள்ளையும் மணப்பெண்னையும் பார்த்தனர்.

மாப்பிள்ளை சரவணன் பெண் அம்ரிதாவும் மேடையில் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி அங்கு மேடையில் ஒ அமர்ந்திருந்தனர்.

 புகைப்பட கலைஞர் அங்கு வந்தவுடன் குழந்தைகளை அங்கிருந்து நகர சொல்ல அவர்கள் நகரவில்லை.

அந்த குழந்தைகளின் அம்மாக்கள் மேடையின் கீழே இருந்து முறைக்க அவர்கள் மெல்ல நகர ஆரம்பித்தனர்.

சரவணனையும் அம்ரிதாவையும் எழுந்து நின்று ஒருவரின் ஒருவர் கையை பிடித்து நிற்கச் சொல்ல இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்து விடுகின்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கு முன்,

மங்கள வாத்தியங்கள் ஒலிக்க,அட்சதை பல வயதினர் கையில் இருந்து வந்து விழுந்தது மணமக்கள் மேலே.

இரு வேறு குடும்பங்கள் ஒன்றாக இணைந்த நேரம் அதற்கு காரணம் இரு வேறு உள்ளங்கள் இணைய குடுத்த சம்மதம்.

சரவணன் அந்த மங்கல நாணை கையில் வாங்கிய தருணம் ஒரு புதிய உணர்வு அவன் உள்ளத்தில் தோன்றியது,இந்த வார்த்தைகள் அவன் மனதில் தோன்றியது "அவள் எனக்கு சொந்தமானவள் என்ற எண்ணம் கூடாது.

இந்த பந்தம் எனும் தராசின் ஒரு பக்கம் அவள் மறுபக்கம் நான்.

இந்த புதிய உறவின் பயணத்தில் இருவரும் முக்கியம்".

அந்த மங்கல் நாண் அம்ரிதாவின் கழுத்தில் ஏறியவுடன் அவள் மனதில் தோன்றியது 

"இப்பொழுது விட்டுக்கொடுப்பது பற்றி நான் யோசிக்க வேண்டும் எல்லா உறவிலும் இருப்பது போல்.

ஆனால் அது என்னையே விட்டுக்கொடுப்பது அல்ல."

அப்பொழுது இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் சரவணன் தன் உறவுகளை அமிர்தாவுக்கு அறிமுகப்படுத்த,அமிர்தா தன் உறவுகளை சரவணனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

இருவரும் அப்பொழுது சிறிது சிறிது தயங்கி ஒருவருடன் ஒருவர் பேசினர்.

16 வருடங்கள் கழித்து,

குந்தவை மற்றும் அருள்மொழி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்.

தூங்கி கொண்டிருந்த சரவணனை அடித்து எழுப்பிய அம்ரிதா வேன் போயிடுச்சு சீக்கிரம் போய் விட்டுட்டு ஸூகுல்ல விட்டுட்டு வாங்க.

ஏய் நீ ஆட்டோல போய் விட மாட்டியா என சரவணன் சோம்பல் முறித்தபடி கேட்டான்.

செல்லம் குடுத்து கெடுத்து வைச்சுட்டு பேசாத போ போய் விட்டுட்டு வா என அம்ரிதா சொல்லிவிட்டு என் நான் வேலைக்கு போக நேரம் ஆகலையா.

சரவணன் சரி காலையிலயே ஆரம்பிக்காத என சொல்லிட்டு பல் துலக்க சென்றான்.

குந்தவையும்,அருள்மொழியும் சிரிக்க சரவணன் இரு சாயங்காலம் வீட்டுக்கு தானே வரனும் என கூற,அருள்மொழி உடனே அம்மா,அப்பா என்னமோ சொல்றாரு என கத்த, சரவணன் யப்பா நான் இந்த பேச்சுக்கே வரல என வேகமாக அங்கிருந்து சென்றான்.

11 வருடங்கள் கழித்து,

இருமல் சத்தம் கேட்டு சரவணனும் அம்ரிதாவும் தண்ணீர் தம்ளரை எடுத்துக்கொண்டு ஒட காரணம் அவர்களது மகள்வழி பேரக்குழந்தை ஆதித்யா இருமியது.

அன்று சாயிங்காலம் ஒரு பூங்கொத்தை வாங்கிக்கொண்டு வந்த சரவணன் தங்களது திருமண ஆல்பத்தை எடுத்து அம்ரிதா ரூமிற்கு சென்றான்.

அங்கு படுத்திருந்த அம்ரிதாவின் தலை கோதிவிட்டுவிட்டு "அட்வான்ஸ் ஹேப்பி திருமண நாள்" என கூறினான்.

மெதுவாக எழுந்து அமர்ந்த அம்ரிதா கால் வலிக்குது தைலம் வாங்கிட்டு வாங்கனு சொன்னா இந்த வேலை எதுக்கு,இப்பதான் 30 வயசு ஆகுதா என கேட்டாள்.

அம்ரிதாவின் கையை பிடித்த சரவணன் பூங்கொத்தை உள்ள திணித்து விட்டு,தைலத்தை மேத்தையில் வைத்து விட்டு எழுந்து செல்ல.

இப்ப தைலம் தேய்ச்சு விட முடியுமா,முடியாதா என அம்ரிதா கேட்க,அதுக்கு தான் மா கை கழுவிட்டு வரலாம்னு போறேன் என சரவணன் சொல்ல அங்கு பேரன் ஆதித்யா சிரித்துக்கொண்டே நடந்து வந்தான்.

"என் மகளும் சரி,அவ மகனுக்கும் சரி,நம்மள பாத்தாலே ஒரே சிரிப்புதான்"

என சொல்லி சரவணன் அங்கிருந்து சென்றான்.



Rate this content
Log in

Similar tamil story from Comedy