முதியோர் இல்லம்
முதியோர் இல்லம்
கண்முன்னே அந்த பாட்டியை அடித்த அந்த நடுத்தர வயது ஆளை யாரும் என்னவென்று கேட்கவில்லை.
நான் வரலைன்னா விட்டுடு…..
கழுத்து நிறைய நகை போட்டிருக்க……..
இத்தனை வயசுக்குமேலே என்ன பிடிவாதம்?
உனக்கும், உன் குடும்பத்துக்கும் வடிச்சுக்கொட்ட நான் என்ன வேலைக்காரியா?
இப்பவே எழுபது வயதாகிறது….எங்கே போவீங்க?
சாலையில் நடந்து கொண்டிருந்த பெரியவர் ஏம்மா! பிள்ளை பாசத்துடன் கூப்பிடறானே!
யோவ்! போய்யா இவன் பாசமெல்லாம் என் நகைமேலேயும்,என சொத்துமேலேயும்தான்.
எல்லா வீட்டுலயும் இருக்கிறதுதான். அதுக்குப்போய் வெளியே வருவாங்களா?
அதுக்காக கொட்டுற பனியில் தரையில் படுக்க வச்சு பழைய சோறு போட்டா எப்படி? வேலை செய்றவளுக்கு பசிக்காதா?
புருசன் செத்து இரண்டு வருஷம் ஆகுது……சொத்தை என்பேருல எழுதி வச்சுட்டு போய்த்தொலைய வேண்டியதுதானே! எனக்கூறி அடித்து இழுத்துச் செல்பவனை யாருமே என்னவென்று கேட்கவில்லை.
ஹூம்!..நாட்டுக்கு நாடு இதனாலதான் முதியோர் இல்லம் அதிகமாகியிடுச்சு என்றபடி நகர்ந்தனர் மக்கள்.