கனவே கலையாதே!
கனவே கலையாதே!


அடுக்குமாடி குடியிருப்பில் சன்னலின் வழியே பால் பாக்கெட் வருவதை வேடிக்கை
பார்த்தபடி நின்றிருந்த கோமளா வியந்து பார்த்துக்கொண்டிருந்தாள். கிராமத்துபசும்பால் அவள் நாவில் இனித்துக்கொண்டிருந்தது. பிழைப்புக்காக இங்கு வந்து இந்த கலங்கலான சாம்பார் தண்ணீரிலும், அடைக்கப்ட்ட சத்தில்லாத கெமிகல் கலந்த பாலையும் குடிக்க வேண்டி இருக்கிறதே என வருந்தினாள்.
அம்மாவிடம் ஆயிரம் தடவை சொல்லியும் இங்கே உன்னை மாதிரி பெண்கள் தனியே போராட முடியாது. கெட்டபெண் அப்படின்னு ஈசியா முத்திரை குத்துவானுங்க! திருமணம் செய்த பிறகு வேணும்னா புருஷனோடு வந்து விவசாயம் செய்! என்று நேற்று கூட அம்மா சொல்லியது காதில் விழுந்தது. கனவாகவே போய்டுமோ! வந்து 3 வருஷம் ஆகுதே! என வருத்தப்பட்டபடி கட்டிடவேலைக்கு மேல் சட்டையைப்போட்டபடி எதிர் வீட்டு அடுக்ககத்திற்கு வேலைக்குச் சென்றாள்.