saravanan Periannan

Comedy Drama Classics

4.7  

saravanan Periannan

Comedy Drama Classics

கிரிக்கெட் மேட்ச்

கிரிக்கெட் மேட்ச்

4 mins
395


அட்டைப்படத்தில் இருக்கும் பென்சில் ஸ்கெட்ச்சிங் செய்தது ச.கபிலன்


"வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது


       குளு குளு தென்றல் காற்றும் வீசுது


சில நேரம் சிலுசிலு சிலுவென சிறகுகள் பட பட


       துடிக்குது எங்கும் தேகம் கூசுது


 சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்


கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்..."


சத்யா திரைப்படம் பாடல் ஓடி கொண்டிருக்கும் போது

 வீட்டிற்கு வெளியே இருந்து ஒரு குரல் ஒலித்தது.


சரவணன் சீக்கிரம் வாடா கிரிக்கெட் விளையாட பாலாஜி வீட்டுக்கு போயிடு என‌ ஜாபர் சொல்லிவிட்டு வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றான்.


சரவணன் சைக்கிளில் மெதுவாக பாலாஜி வீட்டிற்கு சென்றான்.


கவுசிக் அங்கு பந்தை வைத்து கெட்ச் போட்டு விளையாடினான்.


சரவணன் சைக்கிளை நிப்பாட்டி விட்டு பாலாஜி வீட்டின் முன் நின்றான்.


வெங்கடேஷ் ஜாபருடன் அங்கு வந்தான்.


கவுதம்,ஜெபி ஆகியோரும் அங்கு வரவே ஒருவருக்கு ஒருவர் பேசி கொண்டு இடமே கலகலப்பு ஆனது.


பாலாஜி அங்கு வந்து இன்னும் 5 பேர் அங்கே நேரா கரவுண்டுக்கு வந்துருவாங்க என சொல்லி கொண்டுருக்கும் போதே பந்தை தூக்கி போட்டு கெட்ச் பிடித்து கொண்டிருந்த கவுதம் பந்தை தூக்கி பாலாஜி வீட்டு மொட்டை மாடியில் போட்டான்.


பாலாஜி அய்யயோ என கத்த, கவுதம் மாடில தானே விழுந்துச்சு மேல போய் எடுத்துக்கலாம் என சொல்ல.


ஏன்டா கொலுகொலு பையா, என் அம்மா மொட்டை மாடி கெட்டை பூட்டிட்டு சாவிய‌ கையோட கொண்டு போய்டாங்க என சொல்ல ,வெங்கடேஷ் சரி புது பந்து வாங்கலாம் ஏனா பழைய பந்து அங்க தான் இருக்கும் அப்பறம் போய் எடுத்துக்கலாம் என சொல்ல எல்லோரும் ஒன்னா காசு போட்டு கவுசிக்கும் ஜாபரும் பந்து வாங்க செல்கின்றனர்.


சரவணன்,வெங்கடேஷ்,பாலாஜி,ஜெபி,கவுதம் ஆகியோர் கிளம்ப யோசிக்கும் போது கவுசிக் போன் செய்து அங்கேயே வெயிட் பண்ணுங்கடா நாங்க அங்க வந்த உடனே ஒன்னா கரவுண்ட்டுக்கு போலாம் என‌ சொல்கிறான்.


கவுசிக்,ஜாபர் அங்கு பந்துடன் லேட்டாக வரவும் மற்ற அனைவரும் பேட்,ஸ்டெம்ப் ,தண்ணீர் பாட்டில்கள் என சைக்கிளில் வைத்து விட்டு ஸ்டெண்ட் எடுத்து பெடலில் காலை வைக்கவும் மழை சடசடவென வரவும் சரியாக வந்தது.


அனைவரும் பாலாஜி வீட்டிற்குள் எல்லாவற்றையும் தூக்கி கொண்டு ஓடினர்.


கரண்ட் போனது.


சுத்தம் என சரவணன் சொல்லி கொண்டே ச்சே என சொல்லி காலை தரையில் மிதிக்க அய்யோ என சத்தம்.


யாருக்கு என்ன ஆச்சு என‌ ஜாபர் கேட்க, சரவணா என் காலை மிதிச்சுட்டான் ஆ... என கவுதம் சொல்கிறான்.


சரி மழை விட்ற வரைக்கும் எல்லாம் இங்க இருங்க என சொல்லி பாலாஜி மெழுகுவர்த்தி கொண்டு வர போனான்.


ஏன்டா போன் டார்ச் இருக்குல என வெங்கடேஷ் சொல்ல,பாலாஜி உடனே போன்லாம் பத்திரமா இருக்கட்டும் உங்க வீட்டுக்கு அப்பறம் எப்புடி போன் பண்ணுவீங்க.


ஹால்ல பாத்ரூம்ல மெழுகுவர்த்தி வைச்சு இருக்கேன்,அடுப்படிக்கு மொபைல் டார்ச் யூஸ் பண்ணிகோங்க என சொல்ல சரவணன் வேகமாக பாத்ரூம்க்கு ஓடினான்.


சரவணன் வெளியே வந்ததும் நல்ல மழை செம்ம குளிரு அதான் என‌ சொல்ல அனைவரும் அவனை பார்க்கின்றனர்.


சரி எல்லாரும் அவரவர் வீட்டிற்கு போன் செய்து மழை விட்டதும் வரோம்னு சொல்லுங்க என பாலாஜி சொல்ல அனைவரும் போன் சொல்கின்றனர்


ஜெபி அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கவுசிக் மற்றும் ஜாபர் முகத்தை பார்க்க உதட்டை சுற்றி ஏதோ காய்ந்து போயிருந்தது.


ஜெபி அவங்க இரண்டு பேரையும் பார்த்து என்னடா சாப்பிட்டு வரீங்க என கேட்க கவுசிக்கும்,ஜாபாரும் ஒருவரையொருவர் பார்க்க ஜெபி எல்லாரையும் டேய் வாங்கடா எல்லாம் இங்க என கூப்பிட அனைவரிடமும் வெளிச்சத்தில் வாயை காட்டுங்கடா என கவுசிக்கையும் ஜாபரையும் சொல்ல.


ஆமான்டா ஆளுக்கு ஒரு கரும்பு ஜூஸ் குடிச்சோம்,கரும்பு ஜூஸ் கடையில கூட்டம் அதுனால வர லேட் ஆகிருச்சு என சொல்ல ஜெபியும் வெங்கடேஷும் கவுசிக் ஜாபருடன் சண்டை போட ஆரம்பிக்கின்றனர்.


பாலாஜி அவர்களை விலக்கி விட நட்பு ஒரு காரணம் என்றாலும் அவன் வீட்டில் எந்த பொருள் உடைந்தாலும் பூசை விழ போவது அவனுக்கு தான் என நன்றாக புரிந்து வைத்திருந்தான் பாலாஜி.


அனைவரும் விலகி ஆளுக்கொரு குரூப்பாக போக பாலாஜி எல்லாரையும் கூப்பிட்டு ஜாபர் உன் லேப்டாப் என் கிட்ட இருக்கு அதுல ஏதாவது படம் இருக்கா என கேட்க ,ஜாபர் லேப்டாப்ல இல்லை ஆனா இப்ப ஜூஸ் குடிச்சுட்டு வரப்ப என் தோஸ்ட் கிட்ட வாங்கிட்டு வந்தேன் என சொல்ல மறுபடியும் அனைவரும் கவுசிக் மற்றும் ஜாபரை முறைக்கின்றனர்.


பாலாஜி இது என்னடா ஓரமா போன ஓனான சட்டைக்குள்ள விட்டா கதையாச்சு என சொல்ல அங்கு சரவணன் பாட்டு போட்டு எல்லோரையும் டைவர்ட் பண்ண அவன் போட்டா பாடல்


"புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே

நல்ல யோகமடா பப்பப்பரே

அந்த மணமகள்தான் பப்பப்பரே

வந்த நேரமடா பப்பப்பரே


புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே

நல்ல யோகமடா பப்பப்பரே

அந்த மணமகள்தான் பப்பப்பரே

வந்த நேரமடா பப்பப்பரே


பொண்ணு ஓவியம் போல்

இருப்பா இருப்பா

குளிர் ஓடையை

போல் நடப்பா நடப்பா

கலகலப்பா அவ சிரிப்பா..."



என பாடல் ஓலிக்க எல்லோரும் சேர்ந்து சரவணனை பார்த்து இவர் தான் அந்த புது மாப்பிள்ளை என சொல்ல ஏன் என சரவணனை கேட்க ஸுகுல்ல பப்பப்ரே என ஜெபி சொல்ல‌ ஆமா இவர் தான் வந்து சேர்த்து வைச்சாரு என சரவணன் சொல்ல மீண்டும் இடம் கலகலப்பானது.


ஜாபர் லேப்டாபில் பென்டிரைவை கனெக்ட் செய்து பென்டிரைவில் இருந்த பஞ்சதந்திரம் படத்தை பிளே பண்ணினான்


பஞ்சதந்திரம் படம் லேப்டாப்பில் ஓட பாலாஜி மெதுவாக போய் அவங்க வீட்டு அடுப்படியில் அவன் ஒளித்து வைத்திருந்த வறுத்த வஞ்சர மீன்கள் நிறைந்த டிபன் பாக்ஸ் எடுக்கும் போது அவன் முகத்தில் வெளிச்சம் பட்டது.


அங்கு நின்று அவன் முகத்தில் டார்ச் அடித்து கொண்டிருந்த வெங்கடேஷ் என்ன பங்கு நம்மள கழட்டி விட்ட பார்த்தியா என சொல்ல இருவரும் மீனை பங்கு போட்டு சாப்பிட்டனர்.


பிறகு திரும்பியும் வந்து பாலாஜியும், வெங்கடேஷும் அனைவருடனும் உட்கார்ந்து படம் பார்க்கின்றனர்.


பஞ்சதந்திரம் படத்தில் பெங்களுர் டூர் போவதற்காக நண்பர்கள் செய்யும் செயல்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.


இந்த காட்சி ஓடும்போது வெங்கடேஷ் வாய் விட்டு சிரிக்கும் போது அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த கவுசிக்கிற்கு மீன் வாடை வரவே அவன் என்ன என வெங்கடேஷை கேட்க இப்பதான் பாலாஜி கூட அடுப்படியிலே‌ வறுத்த வஞ்சர மீன்கள் சாப்பிட்டு வரேன் என‌ சொல்லிவிட்டு கவுசிக்கிடம் உலறினோம் என உணர்ந்து தன் வாயில் கையை வைத்தே மூடி கொண்டான் வெங்கடேஷ்.



அப்பொழுது பாலாஜி அங்கு வந்து டீ போடவா,காபி போடவா என சொல்ல கவுசிக் எந்திரிச்சு முதல்ல உனக்கு நாலு அடிய போடுவோம் என அடிக்க போக மீண்டும் சரவணன் அந்த இருவரையும் டைவேர்ட் பண்ண ஒரு பாட்டு போட்டான்.



"தென்பாண்டி சீமையிலே

தேரோடும் வீதியிலே

மான் போல வந்தவனே

யார் அடிச்சாரோ

யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ

யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ..."

என‌ பாடல் ஓலிக்கும் போது நான்தான் அடிக்கிறேன்‌ அவனை மட்டும் இல்ல டைவேர்ட் பண்றேன்னு சாங் போடுற உன்னையும்தான் என அடிக்க போகும் நேரத்தில் கரண்ட் வருகிறது.


மழையும் அதே நேரத்தில் நிற்கின்றது.


சரவணன்,ஜாபர்,கவுகிக்,

வெங்கடேஷ்,கவுதம்,ஜெபி அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்ப பாலாஜி அவன் வீட்டு வாசலுக்கு வந்து அனைவரையும் கையசைத்து வழி அனுப்புகிறான்.







Rate this content
Log in

Similar tamil story from Comedy