இரவு
இரவு
Sence - 01
Location - கல்யாண், and tv.நல்லூர்.
Character - 1
Things - bike, phone
Creative - music and camara Angel
ஸ்டீபன் இரவு காட்சி சினிமா பார்த்து விட்டு அவன் பைக்கில் வீடு திரும்பினான்.. வரும் வழியில் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் அவந்து பைக் கோளார் ஆனது.. செய்வதறியாது பதற்றமாய் சற்று டென்ஷனாக அவனுக்கே தெரியாதா வேலையல்லாம் வண்டியில் பார்த்து கொண்டு இருந்தான்.. அப்போது அவன் போனை எடுத்தான் அதுவும் சார்ஜர் இல்லாமல் ஆப் ஆகி இருந்தது.. முகத்தில் கடுமையான கோபம்.. வண்டியை தள்ளிக்கொண்டே செல்ல ஆரம்பித்தான்..
இரவின் அமைதியை மெதுவாக தன் காலடி ஓசையால் கலைத்து அடி எடுத்து வைத்து சென்றான் ஸ்டீபன்.. செல்லும் வழியில் சில சத்தங்கள் அவன் மனதை வேறெங்கோ கூட்டி சென்றது.. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருந்தான்.. அவனுடன் சேர்ந்து பின்னால் யாரோ நடப்பதை போன்று சத்தம் கேட்டு சற்று இல்ல இல்ல அதிகமாகவே பயந்து போய் நின்றான்..
Sence - 02
Location - Tv. நல்லூர் சாலை
Character - 3
Things - horror toys, blood
Creative - music and camara Angel
திரும்பி பார்த்த அவன் பின்னாடி யாரும் இல்லாததை நினைத்து ஸ்டீபனின் கோலி குண்டு கண்கள் அங்குமிங்கும் நடனமாட தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கியவன் திகில் கலந்த பார்வையை சுற்றி சுழல விட்டு ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்தான்.. சிறிது தூரம் சென்றதும் அவன் பின் முன்பை போலவே மீண்டும் ஒரு காலடி ஓசை தெளிவாய் கேட்க ஸ்டீபனின் இதயத்தில் பயம் மெதுவாய் தொடங்கியது.. அப்போவே அம்மா சொன்னாங்க night show வேண்டாம் morning show போ என்று கேட்டேனா ஏன் புத்திய ஹா, இப்போது புலம்பி பிரயோஜனம் இல்லை என மனம் சத்தமிட வேறு வழி தேடி கண்கள் அலைபாய்ந்த நேரம் அவனின் செவி அருகில் அதிக சத்தத்துடன் அவன் கழுத்தை தீண்டியது அந்த மூச்சு காற்று.. ஒரு நொடி கண்களை நான்கு மீட்டர் அகல விரித்த ஸ்டீபன் மெதுவாய் தலையை மட்டும் திருப்பி பார்க்க கோரமாய் கத்தி கொண்டு அவன் மீது பாய்ந்தது ஒரு திகில் முகம்..
அம்மா என அலரி கொண்டே கீழே விழுந்த ஸ்டீபன் பதறி போய் கண்களை திறக்கவும் அவன் முன் இருந்த அந்த பயமுறுத்தும் முகம் எங்கோ காணாமல் போயிருந்தது...
சில நொடிகளில் வேர்த்து விருவிருத்து போயிருந்த ஸ்டீபனின் இதயம் நூறு மீட்டர் வேகத்திற்கு செல்லும் இன்ஞினை போல் வேகமெடுத்து துடித்து கொண்டிருக்க... அதை அமைதிப்படுத்த இயலாத நேரம் சட்டென அவன் முன் ஒரு உருவம் பயங்கரமாய் கத்தி கொண்டே தலை விரித்து ஓடி வந்தது.. அதை கண்ட ஸ்டீபன் வாயடைத்து உறைந்து நிற்க அவன் நகரும் முன் அவனை நெருங்கியிருந்த அந்த பயங்கரமான பேய் அவன் கழுத்தை பிடித்து அந்தரத்தில் தூக்க " அய்யோ பேய் " என அலரிய அமர் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தான்..
Sence - 03
Location - continue
Character - continue
Things - horror things and leg bangale
Creative - continue
உடனே ஏதோ ஒரு சக்தி அவனை தூக்கி அருகில் உள்ள மரத்தில் மிக வேகமாக ஓங்கி அடித்தது.. கீழே விழுந்த ஸ்டீபன் கர்த்தரே, மாரியம்மா , முருகா, அல்லா என்ன எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் கடவுளே என்று வேண்ட தொடங்கினான்.. மீண்டும் இப்போது அவ்விடம் முழுவதிலும் நிசப்தம் கூடியிருக்க உடலில் எழுந்த நடுக்கத்தை மறைக்க எண்ணாத ஸ்டீபன் மெல்ல பின்னோக்கி நகர்ந்தவாறே.. " வேண்டாம் நா எங்க வீட்டுக்கு ஒரே பையன்..
என்ன எதுவும் செஞ்சிடாதீங்க பேய் மேடம் நா..நா.. அப்டி.. யே போய்டுறேன் " என கூற வந்தவன் அதற்கு மேல் தொடர இயலாமல் திக்கி தினற அவன் முன்னோ பத்தடி தூரத்தில் இருளில் இருந்த மரத்தின் பின்னிருந்து தலையை மட்டும் எட்டி பார்த்தது அந்த பேய்..
அதை கண்டு ஸ்டீபனின் இதயம் மீண்டும் வேகமெடுத்து துடிக்க தலைக்கு மேல் ஏதோ பாய்வதை போல் பிரம்மைகள் தோன்ற தலையை சிலிப்பி விட்டு பார்த்தவனுக்கு அவ்விடத்தில் இப்போது அந்த பேய் தெரியவில்லை..
ஸ்டீபன் " மாரியாத்தா காளியாத்தா செல்லாத்தா என்ன மட்டும் எப்டியாவது காப்பாத்தீடு ஆத்தா " என மனதுக்குள்ளே அனைத்து ஆத்தாக்களுக்கும் ஒரு விண்ணப்பத்தை போட்டவன் இப்போது மெதுவாய் அங்கிருந்து நகர பார்க்க சரியாக அவன் முன் மேலிருந்து ஏதோ ஒன்று தொபக்கடீரென குதித்தது..
மிரண்டடித்து பின் நகர்ந்த ஸ்டீபன் அவன் முன் ஏதுமில்லாததை கண்டு பயபந்தை மேலும் உருள விட்டு தயங்கி தயங்கி ஒரு கையை மட்டும் நீட்டி ஏதேனும் கண்ணிற்கு தெரியாத மனிதன் நிற்கிறானா என உணர முயற்சிக்க இரண்டு நிமிடங்களுக்கு ஒன்றும் அகப்படாத அவனின் கரத்தில் திடீரென ஏதோ ஒன்று சிக்கியது...
வளவளவெனவும் கொழகொழவென்ற எதையோ ஊற்றியதை போல் இருக்க " என்னாடா இது " என கண்களை திறந்து பார்த்த ஸ்டீபன் தன் கையில் பாதி வெட்டப்பட்ட ஒரு கால் மற்றும் அந்த காலில் அணிந்திருந்த ஒரு விதமான வளையம் மற்றும் இரத்தம் காயாது இருப்பதை கண்டு அந்த காடே அதிர அலரி கொண்டே அதை அப்படியே போட்டு விட்டு ஓடினான்.. அவன் வேகமாக ஓட ஆரம்பித்தான் திடீரென ஒரு பயங்கரமான பேய் அவன் முதுகில் ஏறி அமர அதில் கத்தி கொண்டே கீழே விழுந்தான் ஸ்டீபன்..
Sence - 04
Location - home and Shop
Character - 3
Things - leg bangale
Creative - comedy
" ஸ்டீபன் ஸ்டிபன் என்று ஒரு குரல்.. டேய் எழுந்திரி டா.. " என யாரோ முகத்தில் சட்டென தண்ணீரை தெளிக்கவும் கண்களை பட்டென திறந்த ஸ்டீபன் அவன் முன் அவனின் அம்மா முகத்தில் பாதி கலவரத்துடன் நிற்பதை கண்டு அனைத்தும் நினைவு பெற்று " யம்மோவ் என்ன காப்பாத்துமோவ்.. என்ன ஏதோ ஒரு பேய் காவு வாங்க பாக்குது.. சீச்கிரம் என்ன காப்பாத்தி நம்ம விட்டுக்கு கூட்டியாந்துடு ஆத்தா " என அவர் காலை கட்டி கொண்டு அழுது கதறினான்..
அம்மா " டேய் கூறுகெட்டவனே.. கணவு கண்டுட்டு ஒளறுறியா.. இதுக்கு தான் night show போவாதன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. இராத்திரி பித்து புடிச்ச மாரி வந்து படுத்துட்டு இப்போ என் உசுர வாங்கிகிட்டு கெடக்கான்.. போ போய் 10 முட்ட வாங்கிட்டு வா.. பணத்தை அவன் ஷர்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு இன்னும் கரித்து கொட்டியவாறு சென்றார்..
(ஸ்டீபன்) " கனவா " என தலையை சொறிந்தவாறு சுற்றி பார்த்தவன் அவனது அறையில் கீழே கிடப்பதை உணர்ந்து " அட ஆமா கனவு " என பெருமூச்சு விட்டான்..
இப்போதே தமிழ்நாட்டின் எலைக்கு சென்றிருந்த ஸ்டீபன் உயிர் அவனிடமே மீண்டு வந்தது.. ஏதோ எமதர்மனிடமிருந்தே தப்பியதாய் எண்ணி ஆழ பெருமூச்சை இழுத்து விட்டவன் தன் தாய் கூறியதை போலவே கடைக்கு சென்றான்.. கடையில் அந்த பெண் ஸ்டீபனை கண்டதும் புன்னகைக்க, அக்கா 10 முட்ட கொடுங்க என்றான், அவள் ஒரு நிமிடம் இருப்பா அந்த வீட்டில் இருக்கிறது நா போய் எடுத்துட்டு வந்துடுறேன் என்று சொல்லி கடையிலிருந்து வெளியே வந்தாள்.. உள்ளே போய் வந்து தம்பி இந்தா முட்டை என்று கூறினால்.. திரும்பி அந்த முட்டையையும் மீதம் உள்ள சிலரையும் வாங்கினான்.. அதிலிருந்து ஒரு காயின் கீழே விழ அதை குனிந்து எடுத்தான்.. அப்பொழுது அவள் காலையும், அதில் அவன் கனவில் பார்த்த ஒரு விதமான இரத்த கரை படிந்த வலையத்தையும் பார்த்து விட்டு உடல் சிலிர்த்து பயத்தில் முட்டையை கீழே போட்டு விட்டு ஆல விடுங்கடா சாமி என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினான்..
கடைக்கார அக்கா " டேய் தம்பி " நில்லுடா நில்லு என்றவாறு அவனை பிடிக்க ஓடி வர இரவு நடந்தது அவன் கண்முன் வந்தது..