சட்டம்
சட்டம்
Sence - 01
Place -
Character -
Things - 2d images
Creative - Voice over
1970-ல மாரியப்பன், சொடலமுத்து-னு ரெண்டு பேரு இருந்தானுங்க. காலத்தோட சாபமா என்னனு தெரியல இந்த ரெண்டு பேரும் ஒரே பொண்ணயே லவ் பண்ணானுங்க. ஒரு நாள் இவங்க மூணு பேரும் ஒரு எடத்துல தற்செயலா சந்திச்சிக்கிட்டாங்க. இதுதான் சரியான சமயமுனு மாரியும் சொடலயும் தங்களோட காதல சொன்னாங்க. அந்த பொண்ணு எதுவுமே பேசாம பயத்துல நின்னுகிட்டு இருந்தா. கடைசியாக இவர்கள் இருவரும் கூறியது ( மாரி ) என்ன விட்டுட்டு அவன கட்டுன அடுத்த நொடியே உங்க ரெண்டு பேரு தலையும் தரையில உருளும். ( சொடல ) நீ என்ன விட்டுட்டு மாரிய கட்டுன உங்களோட கல்யாண வீடு கருமாதி வீடா மாறிடும் மறந்துடாத. அந்த பொண்ணோ இந்த ரெண்டு போரம்போக்குகிட்டயும் மாட்டிகிட்டு முழிக்கிறதுக்கு நம்ம முடிவ நம்மலே தேடிக்கலாம் என்று அன்று இரவே பயத்தில் தூக்கு மாட்டிக்கொண்டால். அன்னைக்கு மாரியும், சொடலையும் பயங்கரமா அடிச்சிக்கிட்டானுங்க. எல்லாரும் சண்டைய மரிச்சி விட்டாங்க. அந்த வருடத்திலேயே இருவரும் ஐந்து முறை அடித்து கொண்டார்கள். காலப்போக்கில் இருவருக்குமான சண்டை ரெண்டு கூட்டத்திற்குமான சண்டையாக மாறி அது கால காலமா தாத்தன் பேரன் அப்பன் புள்ளனு இன்றைக்கு வரையும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
Sence - 02
Place - Mariyamman street
Character - 7
Things - bag, kolam, bike.
Creative - Focus and Defocus, Top angle camera, an straight view.
ராஜா சென்னையில் இருந்து தன்னோடா சொந்த ஊருக்கு 3 வருடங்கள் கழித்து வருகிறான். ஊருக்குள்ள வரும் போது முதல் வீட்டுலயே ஒரு அழகான பொண்ணு கோலம் போட்டுகிட்டு இருக்கா. அவள பார்த்ததும் அப்படியே சொக்கி போய்ட்டான். தூக்க கலக்கமுனு நினைக்காதீர்கள், அவன் அவ அழகுல தேகச்சி போய் நின்னுட்டு இருந்தான். அவ அவனை பார்த்துவிட்டாள். Hello கொஞ்சம் நகருங்க கோலம் போடனும் என்று சொன்னால். உடனே நம்ம ஆளுக்கு ஒத்த சொல்லால song ஓடுது அதுக்கு இவனும் ஆடிகிட்டு இருக்கான். இப்போ கேமரா டாப் ஆங்கில்ல இருக்கு. அவ இவன பார்த்து சிரிச்சா. என்ன இவ நம்ம இங்க இருக்கோம் நமக்கு பின்னாடியும் பார்த்து சிரிக்கிராளே யாரு இருக்கா பின்னாடி-னு திரும்பி பார்த்தான். கேமரா அப்படியே கீழ இறங்கி நேராக காமிக்குறோம். பின்னாடி ஒரு மூணு இளைஞர்களும் ஒரு குட்டி பையனும் அதே பாடலுக்கு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை பார்த்ததும் இவனுக்கு சோகம் கலந்த ஆத்திரம். டேய் வெண்ணைங்களா இந்த நேரத்துல இங்க என்னடா பண்றீங்க. டேய் மச்சான் மரியாதையா பேசூடா நாங்கல்லாம் உனக்கு சீனியர். நீங்க ஓகே டேய் நீ ஏண்டா ஆடுற. மாப்ள அவங்க உனக்கு சீனியர் நா அவங்களுக்கே சீனியர் ஹாஹாஹா.
Sence - 03
Place - House
Character - 2
Things - Bike
Creative -
அம்மா :-
டேய் வந்ததும் வராததும் அந்த பொண்ணு வீட்டு முன்னாடி நின்னுட்டு இருந்தியான். ஊரெல்லாம் ஒரே அசிங்கமா பேசிக்கிறாங்க.
ராஜா :-
அம்மா அம்மா
அம்மா :-
என்னடா
ராஜா :-
நீ எப்ப பார்த்தாலும் என்ன கல்யாணம் பண்ணிக்க சொள்ளுவள்ள, நா இப்போ பண்ணிக்குரமா.
அம்மா :-
அப்போ நா இப்போவே போய் யான் அண்ணன் பொண்ண பேசி முடுச்சிடுறன்.
ராஜா :-
அம்மா ஓ(ன்) அண்ணன் பொண்ண யாரு கேட்டா, நா சொல்றது அந்த மொதல் வீட்டுல இருக்காளே அந்த பொண்ண சொன்னேன்.
அம்மா :-
யாரு அந்த பொண்ணா டேய் மொதல்ல நீ ஊருக்கு கெளம்பு. நீ இங்க இருந்தா சரிவராது நீ கெளம்பு.
ராஜா :-
அம்மா நீதான மூணு வருஷமா வீட்டுக்கே வரல வாடா வாடானு கூப்ட, இப்போ என்னடான்னா கேலம்புனு சொல்ற.
அம்மா :-
ஆமாடா நான்தான் வர சொன்னன், ஆசையா புள்ளைய பாக்களாமுனு வர சொன்னா, நீ என்னடான்னா இனிமேல் உண்ண பாக்கவே முடியாத மாதிரி பண்ணிடவ போலயே.
ராஜா :-
என்னமா சொல்ற, நா அவல love பன்னா நீ ஏம்மா என்ன பாக்க முடியாது.
அம்மா :-
டேய் அவ யாரு தெரியுமடா, அந்த வரதராஜன் இருக்காங்-ல்ல அவனோட அண்ணன் பொண்ணு. அவங்க ஜின்ன வயசுல இருந்தே மும்பைல செட்லு ஆயிட்டாங்க. உன் விஷயம் அந்த வரதராஜனுக்கு தெரிஞ்சா உன்ன கொண்ணே போட்டுடுவாண்டா. அய்யா ராசா நமக்கு அந்த பொண்ணல்லாம் வேனாம்யா அம்மா சொல்றன்-ல்ல மறந்துடுப்பா. நீ இங்க இருந்தா அவல நெனச்சினுதான் இருப்ப. நீ போய் நம்ம நெலத்த பாத்துட்டுவா. அடுத்த வருஷமாச்சு ஏதாச்சி வேதைக்கலாமானு பாப்போம்.
ராஜா :-
சரி மா நா போய் கொஞ்ச நேரம் பசங்க கூட பேசிட்டு கழனிக்கு போய்ட்டு வாறன்.
Sence - 04
Place - Street
Character - 7
Things - Letter, Bike, ext.
Creative - Heroine focus and defocus,
அந்த பொண்ணுக்கு ஒரு ஷாட் வக்கிறோம், குழைந்தைங்களோட விளையாடு-ர மாதிரி. ராஜா அவன் கூட்டாலின்களிட்ட வரான். அவனுங்க எல்லாரும் லெட்டர் எழுதிகிட்டு இருக்கானுங்க. என்ன மச்சான் எல்லாரும் எதோ எழுதிட்டு இருக்கீங்க. டேய் சும்மா இருடா நாங்கல்லாம் அந்த பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதிட்டு இருக்கோம். அவளுக்கு பழைய மாதிரி லெட்டர்ல லவ் பன்றது பிடிக்குமாம். டேய் மச்சான் எனக்கும் ஒரு லெட்டர் கொடுங்கடா.
ராஜா :-
உலகம் மறந்து போகும் உன் கையில் சிறைபட்டால்.
உடல் சிலிர்த்து போகிறதே உன் கண்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால்..
ஒரு குட்டி பையங்கிட்ட எல்லா லட்டரையும் கொடுத்து அந்த பொண்ணுகிட்ட கொடுக்க சொண்ணானுங்க. அவன் பாதி தூரம் வந்து எல்லா லெட்டர்லையும் தன்னோட பேர போட்டுகிட்டான். அப்புறம் அவன் பைக்கை எடுத்துக்கொண்டு தன்னோட வயலுக்கு கெலம்பிட்டான்.
Sence - 05
Place - Rever main road.
Character - 1
Things - bike
Creative - This shot is pralece, voice over.
ராஜா பைக்க ஓட்டிட்டு பக்கத்துல இருக்குற ஆத்த பார்த்துகிட்டே போரான். ( ஆறு, மோட்டர், தண்ணீர், கோவில் எல்லாத்தையும் ஜின்ன ஜின்ன வீடியோ காட்சிகள் எடுத்துக்கணும். வாய்ஸ் ஓவர் ஸ்டார்ட் ) இதுதாங்க எங்க ஊறோட தென்பெண்ணை ஆறு, என்னடா இவன் ஆறு-னு சொல்லிட்டு ஏறிய காமிக்கிரானு நினைக்கிறீங்களா. 20 வருஷத்துக்கு முன்னாடி ஆறா தாங்க இருந்தது. இந்த ரோட்டுல நின்னு பார்
த்தா ஆரோட மட்டம் 2 ஆள் மட்டத்துக்கு மேல இருக்குங்க. ஆனா இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்குங்க ஆறு. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் நம்ம அரசுதாங்க. 20 வருஷமா தமிழ் நாட்ட மாத்தி மாத்தி ஆண்ட நம்ம அரசாங்கம் ஒரு நலம் முடிவு எடுத்தாங்க. வருங்காலத்தில் இந்த மக்களெல்லாம் நம்மள கேள்வி கேட்க கூடாது அதனால பக்கத்து மாநிலத்துக் காரன் நமக்கு தண்ணி தரலனாலும் அவங்களுக்கு நாம கரண்ட், மணல், காய்கறி, இன்னும் நம்மகிட்ட இருக்குற எல்லா வளங்களையும் சொரண்டி கொடுக்கணும்னு முடிவு செஞ்சாங்க. அப்போதான் தமிழ் நாட்டுல இருக்குற எல்லா ஆத்துளையும் மணல் குவாரிக்கு டெண்டர் விட்டாங்க. டெண்டர் எடுத்தவனுங்க நம்ம அரசாங்கத்துக்கே அப்பனா இருப்பானுங்க போல. அந்த நாய்ங்க மணல அளவுக்கு மீரி இல்ல இல்ல அளவே இல்லாம ஆத்துக்கு அடியில களிமண் கிடைக்கிற வரையிலும் மணல் அள்ளி இப்படி நல்லா இருந்த ஆத்தா ஏறியா மாத்திட்டானுங்க. ஆத்துல தண்ணி வந்து கிட்ட தட்ட 20 வருஷம் ஆகுதுங்க. இந்த ஆத்துல மண்ணு இருந்தாதான் அடிலயில ஊத்து தங்கும். விவசாய நிலமெல்லாம் அத வச்சிதான் செழிப்பா வளர்ந்தது. ஆனா இப்போ மோட்டர்ல தண்ணியே வரதுள்ள. அப்படியே வந்தாலும் இப்படி விட்டு விட்டு கொஞ்சமாகத்தான் வரும். இன்னும் பத்து வருஷத்துல இந்த ஊரோட தண்ணீர் கேள்வி குறிதாங்க. இந்த மக்களுக்கும் இது தேவதான் நினைக்கிறேன். ஏண்ணா மணல் குவாரி வரும்போது ஆத்து ஓரத்துல இருக்குற விவசாயிகளும், ஊர் மக்களும் அந்த குவாரிகாரங்கிட்ட தங்களோட நிலத்துக்கு பாதிப்பு வரும்னு, அப்புறம் தங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கும் ஒரு பெரிய தொகையை அவனிடம் இருந்து வாங்கினார்கள் என்று ஊருக்குள் ஒரு பேச்சி இருக்கு. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியல.
Sence - 06
Place - Rever main road.
Character - 4
Things - bike
Creative - villan inrutoction and voice over.
ராஜா தன்னோட இருக்கும் போது வரதராஜன் அங்க வந்தான். வாப்ப தம்பி இன்னைக்குதான் வந்தியா. ம் ஆமன்ன. என்ன விஷயம்ன. ஒன்னும் இல்லப்பா இந்த நெலத்துலதான் தண்ணியே இல்லயே இத வித்துட்டு கல்யாணம் பன்றதுக்குள்ள ஒரு பெரிய வீடா கட்டிடலாமல்லா. அது வந்துன அம்மாவதானன்ன கேட்கணும். அதுவும் சரிதான் ஆனா நா உங்க அம்மாகிட்ட ஒரு 3 டைம் பேசிட்டம்பா உங்க அம்மாதான் ஒத்துக்கமாற்றாங்க. நீ பேசிட்டு சொல்லு ஒரு நல்ல அமோவுண்டா போட்டுத்தரன். சரிங்கன்ன நா பேசிட்டு சொல்றேன். இவந்தாங்க வரதராஜன் மாரியோட வம்சம். இப்போ பார்த்தோமே ஒரு ஆறு அதுல தண்ணில்லாம விவசாய நிலமெல்லாம் மலட்டு தன்மையானத இவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு ஊர்ல இருக்குற எல்லா விவசாய நிலங்களையும் கம்மியான ரேட்டுக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றான். வரதராஜன எதுர்க்கனுமுனா அதுக்கு மார்த்தாண்டம்தாங்க சரியான ஆளு. இவன் சொடலையோட வம்சம். மார்த்தாண்டத்தோட தொழில் என்னன்னா கட்டப்பஞ்சாயத்து. அதுமட்டும் இல்லைங்க வி. எ. ஓ அப்புறம் மணியக்கரர்னு இருக்குற எல்லா அதிகாரியையும் தன்னோட பாக்கெட் குள்ள போட்டுகிட்டு ஊருக்கு உள்ளையும் வெளியையும் இருக்குற எல்லா புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்றதுதான் இவனோட முக்கியமான வேலையா பார்த்திட்டு இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஊருக்குள்ள கொடைச்சல் குடுத்துட்டு இருக்குற ஒரே ஒரு எதிரி நம்ம சகாயம்தாங்க. அவரு இல்லைங்க இவரு. இவனுங்க ரெண்டு பேரும் பன்ற எல்லா தப்புக்கும் ஒரு பொதுநல வழக்கு போட்டுகிட்டே இருப்பாருங்க. இப்போகூட வரதராஜன் மேல ஊர்ல இருக்குற எல்லா விவசாயிகிட்டயும் அவங்களோட நிலத்த அடிமாட்டு விலைக்கு வாங்கி அத அதிக விலைக்கு பிலாட்டாவும், ஆபத்தான கம்பணிகளுக்கும் இந்த இடத்த விக்கராருனும், மார்த்தாண்டம் மேல பொறம்போக்கு நிலங்களையல்லாம் அரசாங்க அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு பன்றாருனும் வழக்கு பதிவு செய்து இப்போ அந்த வழக்கு கோர்ட்ல நிலுவைல இருக்கு. இந்த ரெண்டு கேசுக்கும் தீர்ப்பு வந்ததுனா இவனுங்க ஆட்டமெல்லாம் அடங்கி போய்டும்.
Sence - 07
Place - Any place
Character - 5
Things -
Creative -
வரதராஜன் ராஜா ரெண்டு பேரும் பேசிக்கிராங்க என்னப்பா நெலத்த தரியா இல்லயா. அண்ண அம்மா விக்க வேனாமுனு சொல்றாங்க. அதனால நீங்க வேற எதயாச்சி வாங்கிக்குங்கன்ன. பலார்னு ஒரு அடி பரதேசி சொல்லிகிட்டே இருக்குறன் பெரிய மைரு மாதிரி பேசிட்டு இருக்குற. ஓன் அம்மாளுக்கு தான் சொன்னா புரியமாட்டுங்குதுனா. நீயும் அதே மாதிரி பேசிட்டு இருக்குற. இப்போ கூட உங்கள ஒதைச்சி என்னால கையெழுத்து வாங்க முடியும். அதெல்லாம் வேண்டாமெனு பாக்குரன். ஒங்களுக்கு ஒரு நாள் டைம் தரன் நாளைக்கு அந்த இடம் ஏன் பேருல ரிஜிஸ்ட்டர் ஆகனும். அப்படி பண்ணல நாளைக்கு நைட் உன் குடுமத்து பேர மேல ரிஜிஸ்டர் பண்ணிடுவன் ஜாக்கரத. டேய் ஒரு நிமிஷம் நில்லுடா உன் வயசுக்கு மரியாத கொடுத்துதான் இவ்வளவு நேரம் சும்மா இருந்தன். இப்போ கேட்டுக்கொடா நாளைக்கு நைட் நீ மேல போரியா இல்ல நா மேல போரனானு பாத்துக்குளாண்டா.
Sence - 08
Place - Any place
Character - 5
Things -
Creative -
மார்த்தாண்டம் சகாயம் ரெண்டு பேரும் பேசிக்குறாங்க. டேய் ங்கோத்தா ஊர்ல இருக்குற பொறம்போக்கு நெலத்த நா எடுத்துகிட்டா உனக்கு எங்கடா நோகுது. பொறம்போக்கு தான்டா பொறம்போக்கு நெலத்துமேல ஆச வரும். நீயெல்லாம் அந்த ரகம் தான். டேய் நாயே உனக்கு இருக்க இடம் இல்லனா அந்த இடத்த நானே உனக்கு வாங்கி தருவன். உனக்கு தான் நேரயா இடம் இருக்கே உனக்கு எதுக்குடா இதெல்லாம். ஏய்ய் ஓத்தா அதெல்லாம் எனக்கு தெரியாது நாளைக்குத்தான் நீ யான் மேல போட்ட கேசுக்கு தீர்ப்பு நாள். சோ நாளைக்கு நீ கோர்ட்டுக்கு வந்த உன்ன கோர்ட்டு வாசல்லே வச்சி வேட்டுவன். அப்போதான் மறுபடியும் இந்த ஊர்ல எந்த நாயும் யான் மேல கேஸ் போடாதுங்க. அதையும் பார்த்துடுவோண்டா நா நாளைக்கு கோர்ட்டுக்கு வருவன் உனக்கு தண்டன வாங்கி தருவான்டா.
Sence - 09
Place - Any place
Character - 5
Things -
Creative - voice over
திரு. சகாயம் என்பவரால் கடந்த ஆண்டு ஒரே பிரிவில் அதாவது நில ஆக்கரமிப்பு கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாலிகளின் மீது சுமத்தப்பட்ட புகார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளி மார்த்தாண்டம் அரசுக்கு சொந்தமான இடத்தை சில தவறான அரசு அதிகாரிகளின் உதவியோடு தவறான முறையில் ஆக்கிரமிப்பு செய்ததால் அவருக்கு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் அவரது அரசுக்கு சொந்தமான இடத்தின் பத்திரங்கள் செல்லாது என்றும் அவருக்கு உதவிய அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறும் இந்த நீதி மன்றம் உத்தரவு விடுகிறது. நில மோசடி குற்றம் சுமத்தப்பட்ட வரதராஜனுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-ன் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க சன்மானம் கொடுக்க உத்தரவு விடுகிறேன்.