மாயம்
மாயம்
Sence - 01
Place - House
Character - 2
Things -
Creative - focus de focus
அம்மா :- சிவா சிவா
சிவா :- என்னம்மா
அம்மா :- டைம் ஆச்சி எழுந்து வாப்பா
சிவா :- ஏம்மா காலங்காத்தால இப்படி டார்ச்சர் பன்ற.
அம்மா :- டேய் மணி பத்தாச்சிடா இப்போ கெலம்புனாதான பேங்க்ல கூட்டம் இருக்காது.
சிவா :- எதுக்குமா பேங்குக்கு போகனும்
அம்மா :- என்னடா மறந்துட்டியா மணிகிட்ட வாங்குன ஒரு லட்சத்த இன்னைக்கு தரனு சொல்லிருந்தமே மறந்துட்டியா. போடா போய் குளிச்சிட்டு வா.
சிவா :- சரிம்மா.
Sence - 02
Place - house and bypass road
Character - 7
Things - mony, bike, extra.
Creative - Focus defocus and long shot
சிவா ரெடி ஆகிட்டு ரூம்ல இருந்து வெளியே வந்தான். அம்மா பணத்த கொடுமா.
அம்மா :- இந்தாடா இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு பத்ரோம். பார்த்து போ.
சிவா :- அம்மா நில்லுமா என்னோட பேட்டா எங்க.
அம்மா :- இத மறக்க மாட்டியே, இந்தா பிடி.
சிவா :- ஓகே பாய் மா.
சிவா பைபாஸ்ல போய்ட்டு இருக்கான் அப்போ அவன வேகமா ஒரு கார் கிராஸ் ஆகி போகுது. கொஞ்சதூரம் வந்ததும் தூரத்தில் ஒரு பைக் நொறுங்கி விழுந்தது கிடக்குது. அவன் மனசுக்குள்ள இப்போ போன கார்காரந்தான் தூக்கிட்டான் போலனு நெனைச்சிகிட்டு பைக்கை நிறுத்தி விட்டு. அந்த ஆக்சிடன்ட் ஆனா பைக்கை நோக்கி செல்கிறான். பைபாசில் ஒரு வண்டிகூட வரவில்லை. அப்பொழுது அவனுக்கு ஒரு போன் வருது. மணி போன் செய்தான். டேய் மச்சான் அமௌண்ட் வந்துடுச்சிடா தேங்க்ஸ்டா. இவனுக்கு ஒரே ஷாக்கு. என்னடா சொல்ற அமொண்ட் வந்துடுச்சா. ஆமாடா வாந்துடுச்சிடா சரிடா நா கொஞ்சம் வேலையா இருக்கன் அப்புறமா கால் பன்றண்டா bye. டேய் டேய் இருடா போன வக்கியாத. அப்போவும் அவன் அந்த ஆக்சிடன்ட் ஆன பைக்கை நோக்கியே சென்றான். அருகே செல்ல செல்ல அவனுக்கு ஒரு பதர்ட்டம் கலந்த பயம். போன் பண்ணி தன் நண்பர்களை கூப்பிடலாம் என்று பாக்கேட்க்குள் கை விட்டான். அப்போ அவனுக்கு பயங்கர அதிர்ச்சி. அவன் பாக்கேட்டில் போன் இல்லை. பிறகு அங்கு ரெண்டு பைக்கில் நான்கு பேர் வந்தார்கள். அவர்கள் தூக்குங்கப்பா, யாராச்சி ஆம்புலன்ஸ்-க்கு போன் பண்ணுங்கப்பா அப்படின்னு சொல்றாங்க. இவன் உடனே அந்த பைக்கை நோக்கி செல்கிறான். அந்த பைக்கின் நம்பர் பிளேட்டை தூக்கி பார்க்க சென்றான் அவனுக்கு பயங்கர அதிர்ச்சி. நம்பர் பிளேட் இல்ல அந்த பைக்கே அவனுடையதுதான். அந்த நான்கு பேரில் ஒருவர் அடிப்பட்டவரின் பாக்கெட்டில் இருந்து ஒரு போனையும் நூறு ரூபாய் பணமும் எடுத்தார். அந்த பணத்தையும் மொபைலையும் பார்த்ததும் அவனுக்கு தூக்கி வாரி பொட்டுடுச்சி. அந்த போன் அவனுடையது, உடனே அவன் பாக்கெட்டில் கை விட்டான் அவங்க அம்மா கொடுத்த நூறு ரூபாயும் இல்லை. அவனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஆர்வமும் தாங்க முடிய வில்லை. அந்த முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று மெல்ல மெல்ல அந்த ஆக்சிடன்ட் ஆனவரை நோக்கி சென்றான். அந்த முகத்தில் கை வைத்து மெதுவாக திருப்பினான். பயங்கர அதிர்ச்சி.
Sence - 03
Place - house
Character - 7
Things - bike
Creative -
டக் டக் டக்னு சவுண்ட் கேக்குது பாத்ரூமிலிருந்து நம்ம ஆளு அடிச்சி புடிச்சி எழுந்துறிக்குறான். அவன் அம்மா வெளியே இருந்து பாத்ரூம் கதவை வேகமாக தட்டினார். டே சிவா வெளியே வாடா இன்னும் என்னடா பன்ற. மணி பத்தரை ஆச்சுடா. டைம் ஆச்சா தோ வரம்மா.
கதையில் திருப்புமுனை
Sence - 04
Place - house and bypass road
Character - 7
Things - mony, bike, extra.
Creative - Focus defocus and long shot
சிவா ரெடி ஆகிட்டு ரூம்ல இருந்து வெளியே வந்தான். அம்மா பணத்த கொடுமா.
ight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; background-color: rgb(255, 255, 255); text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;">
அம்மா :- இந்தாடா இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு பத்ரோம். பார்த்து போ.
சிவா :- அம்மா நில்லுமா என்னோட பேட்டா எங்க.
அம்மா :- இத மறக்க மாட்டியே, இந்தா பிடி.
சிவா :- ஓகே பாய் மா. சிறிது நேரம் யோசித்து பிறகு அம்மா அந்த ஹெல்மட் எடுமா என்று சொல்லி ஹெல்மட்டை வாங்கினான்..
{ கதையின் கருத்து }
அனைவரும் ஹெல்மட் போட்டுகொண்டு வாகனம் ஓட்டுங்கள்
சிவகண்டன். த