STORYMIRROR

Saravanan P

Comedy Drama Romance

5  

Saravanan P

Comedy Drama Romance

ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 3

ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 3

2 mins
768

ஒரு கற்பனை தொடர்கதை.


இக்கதையை படிக்கும் முன் ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 1,2‌ படிக்கவும்.


மணி தன்னுடைய ஹோட்டலின் வரவு செலவு கணக்கை பார்க்கிறார்.


கடந்த சில மாதங்களில்‌ இந்த பகுதியில் திறக்கப்பட்ட ஹோட்டல்கள் மணியின் ஹோட்டல் வியாபாரத்தை படுக்க வைத்துவிட்டது.


மணி அண்ணன் இந்த தொழில் போட்டியை வென்றேடுக்க பல முயற்சிகளை செய்ய ஆரம்பித்தார்.


உணவின் விலையை சிறிது குறைத்தார்.


கடையின் செயல்பாடு நேரத்தை சிறிது அதிகப்படுத்தினார்.


அவர் ஹோட்டலின் உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழை அவரின் கல்லா பக்கத்தில் வைத்தார்.


பலன் சிறிதே கிடைத்தது.



செந்தில் மணியின் மனவருத்ததை புரிந்து கொண்டு இவருக்கு கொஞ்ச காலம் பிரச்சனை தர வேண்டாம் என முடிவு எடுத்தான்.



மணி அண்ணன் ஹோட்டலில் அன்று பெரிய கூட்டம்,


எதிர்பாராத மழையால் அவர் ஹோட்டலில் அடைக்கலம் புகுந்த மக்கள் தான் அந்த கூட்டம்.


அன்றுடன் பள்ளி‌ வாழ்க்கையை முடிக்க இருந்த மாணவர்கள்,பெர் வெல் பார்ட்டிகாக மணி‌ அண்ணன் ஹோட்டல் வந்தார்கள்.


மணி அண்ணன் அவர்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறி அவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்தார்.


அந்த மாணவர் கூட்டத்தில் மணி அண்ணனுக்கு தெரிந்த பையன் இருந்தான்.



அவன் மணி அண்ணன் முன் அந்த ஒரு சவால் வைக்கிறான்.


அறுசுவை வைத்து உங்கள் காதலை பற்றி ஒரு கவிதை சொல்லுங்கள் என்று,


மணி அண்ணன்‌ சிறிது நேரம் யோசித்துவிட்டு கண்களை மூடி அபிநயாவை நினைத்து கவிதையை சொல்ல ஆரம்பித்தார்.



"என் மனம் எனும் ஹோட்டலில் உள்ள அன்னபூரணி நீ, 


இனிப்பு போல் என் மனம் இனிக்க 

நீ கதைக்க,


கசப்பு போல் உள்ள உண்மைகளை சிலவற்றை நீ எனக்கு உணர்த்த,  


காரம் போல் இருக்கும் உன் கோபம் ,சமாதானத்திற்கு பின் உணவில் இட்ட உப்பு போல் கரைந்து போகும்,


உன் வளைபூட்டில் நான் சமைத்த புளிசோறு உன் பசி அகற்ற,


துவர்ப்பு உணவை சிறிதளவு உட்கொள்வது போல்,


சிறிதளவு வாழும் இந்த வாழ்க்கையை நம் இருவர் மனமும் மகிழ வாழ்வோம்."


அந்த பசங்கள் கைதட்டி அந்த கவிதையை பாராட்டினர்.


அப்பொழுது அபிநயாவின் அண்ணன் அங்கு வருகிறார்.


செந்தில் இதை கவனித்து விட்டு மணி மட்டும் அபிநயாவின் அண்ணன் பேசும் இடத்தின் மறைவில் நிற்கிறான்.


அபிநயாவின் அண்ணன்: மணி நீங்க அபிநயாவோட கல்யாண சமையல் ஆர்டரை எடுக்கனும்.


மணி அண்ணன்: தாரளாம மிஸ்டர் நவீன்,


அபிநயாவின் அண்ணன்: நாங்க அன்னைக்கு நீங்க அபிநயாவ காதலிக்கிறேன்னு பொண்ணு கேட்டு வந்தீங்க,நான் என் குடும்பம்கொஞ்சம் உங்களை அதிகமாவே அவமானபடுத்திட்டோம்.


மணி அண்ணன்: அத நான் மறக்க நினைக்கிறேன்.


அபிநயாவின் அண்ணன்: பண சமாச்சாரம் அப்பா கிட்ட பேசுங்க. போயிட்டு வரேன்.


மணி அண்ணன்: நல்லது‌ போய் வாங்க.


செந்தில் மறைவிலிருந்து வெளி வருவதை பார்க்கும் மணி அண்ணன்,என்னாட செந்தில் இருட்டிலிருந்து வர யாரை பயமுறுத்த போற நம்ம முருகனையா இல்லை என்னையா.


செந்தில் மணியிடம்,அண்ணே சொல்லுங்க அன்னைக்கு என்ன அவமானபடுத்துனாங்க,மனசுக்குள்ள வச்சு புழுங்காதீங்க.


மணி சிரித்து கொண்டே நான் நிலையான வியாபாரம் பண்ணலையாம்,சரியான படிப்பு இல்லையாம்,உன் மூஞ்சிக்கு அபிநயா கேட்குதா அப்படினு சொன்னாங்க,சொல்லிவிட்டு மணி அழுகிறார்.


செந்தில் உடனே இவ்வளவு சொல்லிட்டு என்ன மயிருக்கு இங்க வராங்க என்று.


மணி‌ உடனே இந்த ஆர்டரை முன்னாள் காதலிக்காக செய்றேனா இல்லை என்னோட வேலை பார்க்குறவங்களுக்காக செய்றேனா? தெரியல செந்தில்.


செந்தில் மணியின் கண்ணீரை துடைத்து விட,மணி செந்திலை ஆர தழுவுகிறார்.


தம்பி என மணி செந்திலை அழைக்க,


அண்ணா என செந்தில் மணியை அழைக்க,


சரி நாளைக்கு கிளம்பனும் மண்டபத்துக்கு அதுனால நீயும்,வரதகுட்டியும் கடைக்கு போய் சாமான் வாங்கிட்டு வாங்கோ.


மாமா காமு வந்தாச்சு என செந்தில் கூற,


சரி சரி நேத்து மைக்கேல் மதன காமராசன் பாக்குறப்பயே நினைச்சேன் என செந்தில் கூற.


மணி சிரிக்கிறார்.


ஆமாம் அந்த வரதகுட்டி யாரு‌ என செந்தில் கேட்க.


போய் வெளியே பார் என கூறுகிறார் மணி.


இல்லை வாசகர்களே மணி அண்ணன்.


ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 4 என தொடரும். 




Rate this content
Log in

Similar tamil story from Comedy