STORYMIRROR

Saravanan P

Comedy Drama Thriller

4  

Saravanan P

Comedy Drama Thriller

ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 1

ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 1

2 mins
330

ஒரு கற்பனை தொடர் கதை.


மணி அவசரமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.


அப்பொழுது அந்த வழியில் வந்த அற்புதம் மணியை வழி மறித்தான்.


என்ன மணி அண்ணே ஆளே கையில புடிக்கவே முடியல.


இப்ப என்ன காலில் புடுச்சிருக்கியாக்கும் என மணி அண்ணன் தன் வயிறை இறுக்கி கைகளால் அழுத்தினார்.


என் அண்ணே வயித்த கலக்குதோ என அற்புதம் கேக்க மணி அண்ணன் பேசாமல் அவனை கைகளால் விலக்கி விட்டு அவர் வீட்டிற்கு ஓடினார்.


பாத்ரூம்மில் மணி அண்ணன் புலம்பினார் "நம்ம ஆளுங்க பழி வாங்குறாங்களா இல்லை உண்மையிலேயே அப்பாவியானு தெரியல,எவனாவது அவசரமா வேலை செய்றப்ப தான் பாசத்தை பொழியுவாயங்க அய்யோ நானே டீ குடிச்சிட்டு வாக்கிங் போனேன் பாதி வழியிலே மாட்டிக்கிட்டு வாக்கிங் போறதா,வீட்டிற்கு வரதானு நொந்து போனா இவன் கையில புடிக்க முடியல ஆ..." என‌ மணி முனகினார்.


அவர் பாத்ரூம்மில் இருந்து வெளியே வந்த நேரம் அவர் ஹோட்டலில் வேலை பார்க்கும் அனைவரும் டீ அருந்திக் கொண்டிருந்தனர்.


என்னடா எல்லாரும் கொஞ்சம் முன்னாடியே எந்திரிச்சுடிங்க என கேட்க மாஸ்டர் சுப்பு இருக்காதா முதலாளி ஒரே சத்தம் முதலாளி எவன் வீட்டிலயோ கல்யாணம் என தாடியை சொரிந்து விட்டு சோம்பல் முறித்தார்.


மணிக்கு தெரியும் இந்த சின்ன வீட்டில் அவரும் அவர் ஹோட்டலில் வேலை செய்பவர்களும் ஒன்றாக தங்கினர்.


ஏனென்றால் கல்யாண ஆர்டர்களும் வருவதால் இவர்கள் அனைவரும் ஒன்றாக தங்கினர்.


மணி தன் ஹோட்டல் சென்று ஷெட்டரை திறந்து உள்ள செல்ல டீ போடும் மாஸ்டர் முருகன் உள்ளே வந்தான்.


மணி ஊதுபத்தி கொளுத்தி ரெடியோவை ஆன் செய்ய அது பக்தி பாடல்களை ஒலித்தது.


கடைக்கு முதலாக வரும் கரீம் பாய் அங்கு வந்து மேஜையில் அமர மணி அவரை வரவேற்றார்.


மக்கள் ஹோட்டல் வந்து டீ அருந்த,அந்த ஹோட்டலில் வேலை செய்யும் மாரி ஹோட்டலில் சுட்ட வடைகளை கொண்டு வந்து அங்கு இருந்த கண்ணாடி டப்பாவினுள் கொட்டினான்.


அந்த ஹோட்டலில் தினசரி பேப்பர்கள் வாழை இலை பார்சலை மடிக்கவே தேவை பட்டன.


மணி ஆக ஆக அடுத்தாக காலை உணவுகள் தயாராகின.


மணியை அவர் ஹோட்டலில் வேலை செய்யும் குணா மாஸ்டர் வந்து பார்த்தார்.


வா குணா அண்ணே, என்ன விஷயம் என கேட்க அதான் மணி என் பையன் என்னை டெய்லியும் சமைக்க போவாதேனு சொல்றான் அதான் நான் நல்ல வேலையிலே இருக்கேனே அப்பறம் எதுக்கு நீ அலையிறனு கேக்குறான்.


குடுத்து வைச்ச ஆளு என குணாவை மணி சொன்னான்.


மணி குணா அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை குடுத்தான்.


குணா அண்ணன் அதை வாங்கி கொண்டு தம்பி இன்னும் ஒரு உதவி நீ பண்ணனும் என சொல்ல ,குணா அண்ணன் தன் பூர்விக ஊரில் இருந்து செந்தில் எனும் வாலிபனை தன் வேலையில் அமர்த்தும் படி கேட்க,மணி என்ன அண்ணே நீங்க எவ்வளவு உழைச்சவரு உங்களுக்காக செய்றேன் என மணி சொல்கிறான்.


குணா வெளியே வந்து டேய் பொடி பயலே மணி என்னை எவ்வளவு கேவலமா உன் சொந்தக்காரங்க எல்லார் முன்னாடியும் ஹோட்டல்ல பேசுனாங்க அப்ப எல்லாம் பேசாம இருந்துட்டு அப்பறம் வந்து மன்னிப்பு கேட்டுக்குற இப்ப வரவன் உன்னை என்ன செய்ய போறான் பார்.


குணா மணியின் நலபாக ஹோட்டலை முறைத்துவிட்டு சென்றார்.


ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 2 என தொடரும்.



Rate this content
Log in

Similar tamil story from Comedy