STORYMIRROR

Delphiya Nancy

Comedy Drama

4  

Delphiya Nancy

Comedy Drama

எங்க வீட்ட காணோம்

எங்க வீட்ட காணோம்

2 mins
843

நான் UKG படித்தபோது குடும்பத்துடன் எங்க சின்ன அம்மாச்சி வீட்டுக்கு சென்றிருந்தோம்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த நானும் என் சித்தி பையன் சேவியரும் சேர்ந்து பலூன் வாங்க காசு வாங்கிக் கொண்டு கடைக்கு சென்றோம்.


அருகில் உள்ள கடைக்கு சென்று பலூன் கேட்டோம் ,கடைக்காரர் இல்லை என்று சொல்லிவிட்டார். சரினு அந்த காசுல இலந்தப்பழம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே நடந்து சென்றோம்.


போய்கிட்டே இருக்கோம் எங்க அம்மாச்சி வீடே காணோம்.

அங்க போறவங்க வரவங்ககிட்ட எல்லாம் எங்க அம்மாச்சி வீடு எங்கனு கேட்டோம். அந்த பக்கம் போங்க இந்த பக்கம் போங்கனு சொல்ல , எந்த பக்கம் போறதுனு தெரியாம ரோட்ல நடந்தோம்.


 ரோட்டு ஓரத்துல காய் வித்த ஒருத்தவங்க எங்கல கூப்பிட்டு உட்காரவச்சு பேசுனாங்க, அந்த வயசுல அம்மா, அப்பா பேர், ஸ்கூல் பேர் மட்டும் தான் சொல்லிருப்போம். எங்க அம்மாச்சி பேரு தெரியல.


பக்கத்துல இருந்த டீக்கடைல எங்கல உட்கார வச்சு வடையோ பஜ்ஜியோ சாப்பிட குடுத்தாங்க. அவங்க பேர் என்ன? எங்க படிக்கிறிங்கனு கேட்டாங்க. என் பேரு டெல்பியா, அன்வாருல் முஸ்லீம் ஷ்கூல்னு சொன்னேன். அவன் என் பேரு சேவியர், அப்பா பேரு ஆரோக்கிய சாமி னு சொன்னான்.


சரி எங்க வந்திங்க?

பலூன் வாங்க...

சரி பயப்படாம இருங்க ,உங்க அப்பா,அம்மா வருவாங்க...


நாங்க தொலஞ்சு போய்டோம்னு தெரிஞ்சா தானே பயப்பட... எங்கள பொறுத்தவரை அம்மாச்சி வீடு தானே காணோம் ஹாஹா.


கொஞ்ச நேரத்துல எங்க பெரியம்மாவும், பெரியப்பாவும் சைக்கில்ல வந்தாங்க, எங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.


வளர்ந்த அப்பறம் தான் இதெல்லாம் எங்களுக்கு சொன்னாங்க.

எங்க சித்தி கல்யாணத்துக்காக அங்க போனோம், நாங்க பலூன் வாங்கிட்டு திரும்பி வராம நேரா போய்டோம் ,கல்யாண வீட்டுக்கு வந்த பிள்ளைங்களா இருக்கும்னு யூகிச்சுதான் வீட்டுக்கு சொல்லியனுப்பி இருக்காங்க. அப்பறம் அம்மாச்சி பேரு ஆரோக்கிய மேரி, ஆரோக்கிய சாமினு சேவியர் சொன்னது சின்க் ஆகிருக்கும் போல.


கல்யாணத்துக்கு வந்த எல்லோரும் பதறி அடிச்சுட்டு ஆளுக்கு ஒரு பக்கமா போயி, ஆற்றங்கரை, ரோடு, சர்ச்னு அழுதுட்டு தேடுறோம், இந்த குட்டி பிசாசு இரண்டும் ஹாயா கடைல வடை சாப்டுட்டு இருந்துச்சுனு கிண்டலா சொல்வாங்க.


அம்மா, பெரியம்மா,சித்தினு எல்லோரும் அந்த அம்மாச்சி வீடு காணா போனத பத்தி அடிக்கடி சொல்லி எங்கள திட்டுவாங்க.

வீடு காணா போனதுக்கு எங்கள திட்டுனா நாங்க என்ன பன்றது? நீங்களே சொல்லுங்க... பச்ச புள்ளைங்க எங்களுக்கு என்ன தெரியும்?...



Rate this content
Log in

Similar tamil story from Comedy