ஏலியன் அட்டாக் - 5
ஏலியன் அட்டாக் - 5
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.... முகிலன் இன்னும் வரவில்லை. அணுவின் இதயம் பயத்தில் படபடத்தது. இருந்தாலும் தங்களால் முடிந்த வரையில் அணுவும் மாயாவும் மக்களை அந்த விசித்திர உயிரினத்தின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த மிருகமும் தொடர்ந்து தன் கண்ணில் படும் எல்லா உயிர்களையும் மயக்கமடயச்செய்தது .
அப்போது கடலினுள் ஒரு உருவம் ..... பெரிய அளவு கொண்ட பந்து போல இருந்தது. அது மெல்ல மிதந்து வந்து கரையை அடைந்தது. அதிலிருந்து ஒரு மெல்லிய கோடு...... அது பிரகாசமாக மின்னியது.... அந்த கோடு மெல்ல விரிந்து ஒரு பிரம்மாண்ட கதவாக மாறியது..... பட்ட பகல் பொழுதில் கூட ஜொலிக்கும் ஒரு வெளிச்சம், அந்த கதவில் இருந்து வந்தது... உடன் ஒரு பெரிய வால்..!!! அது கரிய நிறத்தில் கரடுமுரடான மேல்தோல் கொண்டு பார்க்கவே அச்சத்தை உண்டாக்கும் ஒரு தோற்றம் கொண்டதாக இருந்தது.
"மாயா.... அது என்ன ? பக்கவே ரொம்ப பயமா இருக்கு.... தம்பிய வெற இன்னும் காணோம் .... அவனுக்கு எதாச்சும் ஆயிருக்குமோ?" , நேரம் ஆக ஆக அணுவின் மனம் பலவிதமாக யோசிக்கத் தொடங்கியது. "அதெல்லாம் ஒன்னும் ஆயிருக்காது..... நீ தேவ இல்லாம பயப்படாத....", மாயா அணுவின் மனதை தேற்ற நினைத்தால், ஆனால் அது நடக்கவில்லை... மாறாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் அவள் கண்ணங்கள் வழியாக வழிந்தோடியது... மாயாவிற்கு அணுவை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று தெரியவில்லை. முதலில் அங்கு நடக்கும் பிரச்சினையை சமாளிக்கலாம் என்று நினைத்து , மக்களை அங்கிருந்த சிறுசிறு பெட்டி கடைகளில் மறைந்திருக்க உதவி செய்தாள். கையில் ஒரு கட்டையை வைத்துகொண்டு தன்னை நோக்கி வரும் விசித்திர உயிர்களை பந்தாடிகொண்டிருந்தாள். அவளுடன் அணுவும் மேலும் சில இளைஞர்களும் சேர்ந்துகொண்டனர். ஆனால் அணுவின் அழுது சிவந்த கண்கள் ஒருவரை தேடிக்கொண்டே இருந்தது.
அதே சமயம், அந்த பெரிய பயங்கரமான வால் வேகமாக வந்து அங்கே மயங்கி கிடந்த மக்களை மொத்தமாக வாரி சுருட்டியது.... பின் அப்படியே அந்த ஜொலிக்கும் கதவு வழியாக உள்ளே இழுத்துகொண்டு சென்றது. அப்பொழுது அணுவின் பார்வை அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நீலநிற ஆடை அணிந்த சிறுவனின் மீது விழுந்தது.
அவள் அதைப்பார்ததும் தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்று தெரியாதவலாய் அங்கேயே உடைந்துபொய் அமர்ந்தாள். மாயா அவளை பார்த்தாள். என்ன ஆச்சு அனு? அவள் கண்களின் சோகத்தை மாயா பார்த்தாள். அணுவின் கண்கள் அந்த பெரிய வால் இழுத்துக்கொண்டு செல்லும் அந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து, "முகிலன்......" அவளால் மரு வார்த்தைபேச முடியவில்லை. மாயாவும் அந்த கூட்டத்தை பார்த்தாள். முகிலன் காலை அணிந்திருந்த அதே நீலநிற ஆடையை அணிந்திருந்த உருவத்தை பார்த்தால். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அந்த சமயம் அந்தத் பெரிய வாலை நோக்கி ஒரு திரவம் பீச்சியடிக்கப்படது. ஒருவர் தன் கையில் இருந்த இயந்திரத்தை வைத்து அந்த திரவத்தை அதன்மீது தெளித்தார். அவரின் தோற்றமே சொன்னது அவர் ஒரு ஆய்வாளர் என்று. அந்த திரவம் பட்டதும் பெரிய வால் பொசுங்கியது. மக்கள் அனைவரும் அந்த வாலின் பிடியிலிருந்து விடுபட்டு கீழே விழுந்தனர். அந்த மனிதரை நோக்கி மாயா நடந்தாள். அணு தன் தம்பியை அந்த கூட்டத்தில் இருந்து கண்டுபிடிக்க ஓடினாள்."ஹாய்... ஐ அம் டாக்டர். வில்சன்... சயன்டிஸ்ட்" அந்த மனிதர் மாயாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
இருவரும் கை குழுக்கிவிட்டு அனுவிர்க்கு உதவ சென்றனர். அங்கே அனு நீல நிற ஆடையை தேடிக்கொண்டு இருந்தாள். அந்த நீல நிற ஆடை அவள் கண்ணுக்கு தெரிந்தது. மகி்ழ்ச்சியாக அவனை இழுத்தாள்.அவளுக்கு அந்த முகத்தை பார்த்ததும் பேரதிற்சியாக இருந்தது. அது முகிலனை பொல் ஆடை அணிந்த வேறு நபர். அணு அதிர்ச்சியில் உரைந்துவிட்டாள்.
_ தொடரும்.............
