ஏலியன் அட்டாக் - 3
ஏலியன் அட்டாக் - 3
பெங்களூர்,
விண்வெளி ஆராய்ச்சி மையம்
டாக்டர். வில்சென் தன் புதிய ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார். அவர் ஆய்வில் இருக்கும் போது தன்னையே மறந்து விட்டு பணியில் ஈடுபடுவது வழக்கம்.அன்றும் அப்படித்தான்.ஒரு புதிய கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்தார்.
அந்த கிரகத்தின் மாதிரி படத்தை பார்ப்பதும், அதை குறிப்பு எடுப்பதும், சில சொற்கள் தனக்குத்தானே பேசுவதும் இப்படியே பலமணிநேரம் போய்க்கொண்டிருந்தது . அப்போது ஒரு குரல் அவரின் கவனத்தை சிதரச்செய்தது. " மே ஐ கம் இன் டாக்டர்", டாக்டர். வில்சன் தன்னுடன் பணியமர்த்தி இருக்கும் உதவியாளர் மோகனின் குரல் அது. "Mr. மோகன் உங்ககிட்ட நான் எத்தன தடவ சொல்லி இருக்கேன் ..? ரிசர்ச் பண்ணும்போது டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு " சலித்துக்கொண்டு அவர் கூரவந்த வார்த்தைகளை சொல்லுமாறு சைகை செய்தார். "டாக்டர்.... உங்களது பாக்க சில காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அப்பாய்மெண்ட் கேக்குறாங்க. ஏதோ அர்ஜன்ட் டாம்", தான் கூறவந்த தகவலை சுருக்கமாக கூறி முடித்தார். "நான் ரிசர்ச்-ல இருக்கும் போது யாருக்கும் அப்பாய்மெண்ட் குடுக்க வேணாம்னு சொல்லி இருக்கேன்...அப்பறம் எதுக்காக டைம் வேஸ்ட் பண்ணுறீங்க...? இப்போதைக்கு எனக்கு டைம் இல்ல மோகன்". "ஐ நோ டாக்டர்...ஆனா அந்த ஸ்டூடண்ட்ஸ் எடுத்ததும் டாக்டர். கண்ணனோட பெற சொன்னாங்க . அதனால் தான் உங்ககிட்ட சொன்னேன்". டாக்டர்.கண்ணனா..!!?" , ஆவரின் பெயரை கேட்டதும் வில்சனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சற்று நேரம் அமைதியாய் இருந்தார்."ஓகே மோகன்... நாளைக்கு மார்னிங் 10 ஓ கிலாக் அப்பாய்மெண்ட் சொல்லிறுங்க " , திடீரென தன் முன்னாள் நண்பனின் பெயரை கேட்டதும் வில்சனின் கவனம் ஆராய்ச்சியில் இருந்து விலகி பழைய நினைவுகளுக்கு சென்றது.... மோகன், மெல்ல கதவை அடைத்துவிட்டு தான் பாதியில் விட்டுச்சென்ற அழைப்பை பேச தொடங்கினார்... "டுமார்ரோ மார்னிங் 10 ஓ கிளாக் அப்பாய்மெண்ட் பிக்ஸ் மேடம்" என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
அதே சமயம் அணுவின் விட்டில் .....போனை கட் செய்தபடியே அனு, "அப்பாய்மெண்ட் நாளைக்குத்தான் கேடசுருக்கு....அதுவரை இத என்ன பண்ண..? " அணுவின் பார்வை விண்ணில் இருந்து விழுந்த அந்த பொருளின் மீது விழுந்தது.
இது எங்கேயும் போகாது... நம்மலோட இன்னிக்கி பிளான் என்ன..?" முகிலன் ஆர்வமாக கேட்டான்.
பிளான் எதுவும் இல்ல தம்பி... இத அந்த ரிசர்ச் டாக்டர் கிட்ட குடுக்குற வரைக்கும் நாம எங்கேயும் போகல.....அணுவின் பதில் இருவருக்கும் திருப்தி அளிக்கவில்லை .என்ன அனு..... இந்த மெஷின்ன பாக்கவா நான் தஞ்சாவூர் ல இருந்து பெங்களூர் வந்தேன்... ?, லீவ்- அ என்ஜாய் பண்ண வந்தா வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைகிரியே...ரொம்ப மோசம்.." முகிலன் சலித்துக்கொண்டான் . மாயா முகிலனின் பக்கம் நின்றாள் "ஆமா.. இந்த பொருள் எங்கேயும் போகாது... சோ நாம இன்னிக்கி பீச்சுக்கு பொறோம் என்றாள் ..அனுவும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டால்
_ தொடரும்......
