KANNAN NATRAJAN

Tragedy Action Inspirational

4  

KANNAN NATRAJAN

Tragedy Action Inspirational

சிங்கமாய் சீறு

சிங்கமாய் சீறு

1 min
347


அவ எவடா நம்மைக் கேட்பது? தூக்கிட்டு வாடா அவளை!

பிள்ளையாருக்கு அந்தக் குரல் கேட்கவில்லை போலிருக்கிறது! இரவெல்லாம் சாதி நாய்களின் தோல்பசியில் அகப்பட்ட மயிலு உடையின்றி இறந்து கிடந்தாள். கிளியே! என்று அழைத்தவனை அண்ணா என்று கூப்பிட்டதற்கா ஆண்டவனே எனக்கு இந்த தண்டனை என மயிலின் ஆத்மா பிள்ளையாரிடம் சென்றது.


பிள்ளையாரோ உன் விதி அவ்வாறிருக்கிறதே நான் என்ன செய்வேன் என்று அம்மாவிடம் ஓடி தஞ்சமடைந்தார். அநீதி கண்டு நேரான வாழ்வு இல்லாதவர்களிடம் சிங்கமாய் சீறு என்று மட்டும் உனது நிழலில் படித்த எனக்கு விதி என்ற சொல்லை ஒட்டியது ஏனோ! என மயிலின் ஆத்மா அரற்றியது. பார்வதியின் பார்வை மயிலின் கண்களில் நீரைத் துடைக்க தனது நண்பன் எமனிடம் மயிலின் ஆத்மா குரலைக் கேட்டீரா! என்பிள்ளை கல்லுதான்! சுரணை இருந்தால் என்னைக்கோ சட்டம் எழுதியிருப்பானுங்களே! வர வர அரசமரத்தடி ஆக்சிஜன் அதிகமானதால் பெண்மக்களின் நலம் காக்க மறந்துவிட்டான்.


நீ சிங்கமாய் சீறி இனி புது சட்டங்கள் எழுதிவிடு! கெட்ட எண்ணத்துடன் பெண்ணைத் தொடும் எந்த ஆணும் உடனே இறந்துவிடுவான் என மந்திரஓலை எழுதி சித்திரகுப்தன் கணக்கில் சேர்த்துவிடு! என்றுகூறிவிட்டு பிள்ளையாரைக் கன்னத்தில் கிள்ளி அடிக்க பிரம்பைத் தேடியவுடன் பிள்ளையார் அரசமரத்தடியில் கட்டியிருந்த வண்ணக்குச்சிக் கொடிகளில் உடலை மறைத்து மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்க ஆரம்பித்தார்.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy