saravanan Periannan

Tragedy Classics Thriller

4.7  

saravanan Periannan

Tragedy Classics Thriller

செந்தில்நாதன் அத்தியாயம் 8

செந்தில்நாதன் அத்தியாயம் 8

3 mins
240


அட்டைப்படம்: பரத்.மு


இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1,2,3,4,5,6,7 படிக்கவும்.

இக்கதையில் வரும்‌ பெயர்கள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.

வராகன் மைதானத்தில் அன்று காலை முதல் வாள் பயிற்சி மேற்க்கொண்டிருந்தான்.

தளபதி அங்கு வந்து குழகன் அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டான்‌ என‌ கூறினான்.

வராகன் அவனை கொன்று விடு என்றான்.

தளபதி அதிர்ச்சியில் மன்னா தாங்கள் அவனை கொல்லாமல் படையில் சேர்த்துக் கொள்வதாக கூறியிருந்தீர்கள்.

வராகன் சிரித்தப்படி எதிரி நம்மிடம் திருத்தியது போல் நடித்தாலும் நாம் அவனை நம்ப‌ கூடாது.

அவன் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களை என்னால் சொல்ல இயலாது.

என் கண்களை மூடி நிம்மதியாக தூங்க முடியாது.

அவனை மது அருந்த வைத்து காட்டில் விட்டு விடுங்கள்.

தளபதி உத்தரவு மன்னா என கூறி வராகன் சொன்ன மாதிரியே செய்தான்.

செந்தில்நாதன் காட்டு வழியில் வேறு ஒரு நாட்டுக்கு சென்று கொண்டிருந்தான்.

குழகன் மது அருந்தி விட்டு அதே வழியே வந்து கொண்டிருந்தான்.

செந்தில்நாதனை காணும் குழகன் தள்ளாடியபடி அவனை நோக்கி சென்றான்.

டேய் செந்தில்நாதன் துரோகி ,உன்னால் நான் அந்த வராகனுடன் கைகோர்க்கும் நிலை வந்து விட்டது.

குழகன் விக்கியப்படி நான் நமது புரட்சி படை பற்றிய அனைத்து உண்மைகளையும் வராகனிடம் சொல்லி விட்டேன்.

நான் வராகனை சமயம் பார்த்து கொல்லாமல் என எண்ணும் போது என்னை மது அருந்த வைத்து காட்டில் விட்டு விட்டான்.

செந்தில்நாதன் அவன் சொன்னதை கேட்டு விட்டு வாளை உருவினான்.

அவன் கண்களில் உள்ள கருவிழிகள் சுற்றும் முற்றும் சுழன்றன.

தீடீரென ஆறு சிங்கங்கள் அங்கு வந்து நின்றன.

செந்தில்நாதன் குழகனை தூக்கி கொண்டு ஓடினான்.

ஆறு சிங்கங்களும் அவனை துரத்தின.

செந்தில்நாதன் தன் நாட்டினில் ஒடும் ஒரு நதியினை கண்டான்.

குழகனில் காலில் தன் கத்தியால் சிறிதாக இரண்டு மூன்று முறை வெவ்வேறு இடங்களில் கீறினான்.

அது வெயில் காலம் என்பதால் நதியில் தண்ணீர் குறைவாகவே இருந்தது.

குழகனை நதியில் தூக்கி போட்டான்.

செந்தில்நாதன் திரும்பிய போது அந்த ஆறு சிங்கங்கள் அங்கு நின்றன.

செந்தில்நாதன் தன் வாளை ஓங்கி கொண்டு அந்த சிங்கங்களை நோக்கி ஒடினான்.


அந்த சிங்கங்கள் இவன் மீது பாய்ந்து இவனை பிய்த்து உண்ண ஆரம்பித்தன.

ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த வள்ளயின் அண்ணன் ஒரு நபர் மிதந்து வருவதை கண்டான.

ஆற்றில் தன் நண்பனுடன் குதித்து அந்த நபரை அவன் படகில் இருந்த இன்னொரு நண்பனிடம் குடுத்தான்.

அவர்கள் படகில் அந்த நபரின் முகத்தை பார்த்தனர்.

இவன் நம் செந்தில்நாதன் நண்பன் குழகன் தான்.

உடனே அவன்‌ வயிற்றை அழுத்தி அவன் உடம்பில் இருந்த நீரை வெளியேற்றினர்.

அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வள்ளின் அண்ணனின் நண்பன்‌ குழகனின் வாயுடன் வாய் வைத்து ஊதினான்.

வள்ளியின் அண்ணன் பாலன் தன் தங்கையின் காதலன் செந்தில்நாதன் நண்பன்‌ தான் இவன், செந்தில்நாதன் புரட்சி படையை சேர்ந்தவன் ஒருவேளை இவனும் புரட்சி படையை சேர்ந்தவனாக இருக்கலாம் ஆனால் புரட்சி படையில் உள்ள அனைவரையும் வராகன் கைது செய்து விட்டனே என்று தன் மனதிற்குள் யோசனை செய்தான்.

புரட்சி படை வீரர்கள் அனைவரையும் தனித்தனியாக ஒவ்வொரு அறையில் சிறையில் அடைந்தான் வராகன்.

பாலன் குழகனை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

குழகன் சுயநினைவு அடைந்தவுடன் நடந்த அனைத்தையும் கூறினான்.

பாலன் தன் நண்பர்களுடன் அந்த காட்டில் ஈட்டிகள் மற்றும் நெருப்பு பந்தம் கொண்டு தேடினர்.

கழுதைப்புலிகள் சில ஒரு இடத்தில் உண்டுக்கொண்டு இருந்தன.

பாலன் தன் நண்பர்களுடன் அதை விரட்டி விட்டு அந்த இடத்தில் இருந்த உடலை பார்த்தான்.

பிய்த்து தின்றுவிட்டு சிங்கங்கள் விட்டு சென்ற செந்தில்நாதன் உடம்பை கழுதைப்புலிகளும் தின்று இருந்தன.

பாலன் அந்த நைய்ந்த உடலை தன் நண்பர்களுடன் தூக்கி சென்று படகில் ஏற்றினான்.

பாலனின் நண்பர்கள் சிலர் அந்த உடலை பார்த்து வாந்தி எடுத்தனர்.

அந்த உடலை பாலன் எடுத்து தன் வீட்டுக்கு கொண்டு வந்தான்.

பின்பு செந்தில்நாதன் குடும்பத்துக்கு தகவல் சொல்லப்பட்டது.

செந்தில்நாதனின் தாய் தெய்வபிரியாள் கண்ணீர் விட்டு கதறினார்.

செந்தில்நாதனின் அக்கா அமுதவள்ளி செந்தில்நாதனின் ரத்தம் படிந்த வாளை எடுத்து கண்ணீர் துளிர்த்த படி அதை சுத்தம் செய்ய எடுத்து சென்றார்.

குழகன் கதறி அழுதான்.

வள்ளி அந்த உடலை பார்த்து அழுதபடி பாட தொடங்கினாள்.

நண்பனுக்காக தியாகம் செய்த அன்பே 

உன் தன் காதலி இங்கு இருப்பதை மறந்தாயோ 

வீரம் நிறைந்த நீ ஒரு மிருகத்துக்கு உணவு ஆனாயோ 

வாழ்வின் அடுத்த கட்டம் 

ஆரம்பம் ஆகும் முன்னரே முடிந்து போனதே 

என வள்ளி கதறினாள்.

நந்தன் தன் மகன் செந்தில்நாதன் உடலை சிதையில் கண்டார்.

அமுதவள்ளி செந்தில்நாதன் உடலின் மேல் அவனது வாளை வைத்தாள்.

நந்தன் செந்தில்நாதன் சிதைக்கு தீ வைத்தார்.

அனைவரும் வருத்தமாக திரும்பினர்.

அடுத்த நாள் அமுதவள்ளி செந்தில்நாதன் சிதை எரிந்த இடத்துக்கு சென்று அவனது வாளை எடுத்தாள்.

அமுதவள்ளி தம்பி நீ உன் சுயநலத்தினால் நடந்த தவறை சரி செய்ய உன் உயிர் துறந்தாய்.

ஆனாலும் நீ செய்ய நினைத்த காரியம் அனைவருக்கும் நன்மை பயக்க கூடியது.

அதை இந்த வீரமங்கை அமுதவள்ளி உன் வாளை கொண்டு நிறைவேற்றுவாள்.

இது அந்த பரமசிவன் மீது செய்யும் சத்தியம்.


செந்தில்நாதன் அத்தியாயம் 9 என தொடரும்.

 





Rate this content
Log in

Similar tamil story from Tragedy