saravanan Periannan

Tragedy Action Thriller

5.0  

saravanan Periannan

Tragedy Action Thriller

செந்தில்நாதன் அத்தியாயம் 7

செந்தில்நாதன் அத்தியாயம் 7

3 mins
388


அட்டைப்படம்:  பரத்.மு


இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1, 2, 3,4,5,6 படிக்கவும்.

இக்கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.

குழகனை நான்கு ஐந்து வராகனின் வீரர்கள் தரையுடன் சேர்த்து அவன் கால் கைகளை அழுத்தி பிடித்தனர்.

தளபதியுடன் வந்த வீரன் குழகனின் ஆயுதங்களை அவனிடம் இருந்து எடுத்தான்.

தளபதி தன் வீரர்களுக்கு அந்த பத்து புரட்சி படை வீரர்களில் யாராவது உயிரோடு இருக்கிறார்களா என கேட்டான்.

வீரர்கள் சென்று அந்த பத்து பேரின் உடலை சோதித்து விட்டு இல்லை என வந்து கூறினார்.

சரி இவனை கட்டி இழுத்து வாருங்கள் என‌ தளபதி உத்தரவிட்டான்.

வராகன் திருவேந்தன் குழகனை அடைத்து வைத்துருக்கும் இடத்துக்கு வந்தான்.

வராகன் குழகனை சிறையில் பார்த்து விட்டு யார் என கேட்டான்.

தளபதி புரட்சி படையில் உயிருடன் சிக்கிய ஒரே ஒருவன்.

வராகன் குழகனின் சிறை அறை கதவை திறந்து உள்ளே சென்றான்.

குழகன் பாய்ந்து வந்து வராகனை அடிக்க முற்பட வராகன் அவனை தடுத்து அவனை கீழே அமர வைத்து தானும் அவனுடன் அமர்ந்தான்.

வராகன் தன் வீரர்களை அழைத்து குழகனை வெளியே உள்ள கம்பத்தில் கட்ட உத்தரவிட்டான்.

வீரர்கள் குழகனை கட்டி விட்டு விலகி வந்தனர்.

வராகன் அங்கு வந்து குழகனை பார்த்து உண்மையை கூறும்படி சொன்னான்.

குழகன் முடியாது என்றான்.

வராகன் தன் வீரர்களிடம் குழகனுக்கு நான் சாப்பிடும் உணவை போல் அறுசுவை உணவை ஊட்டுங்கள்.

தாகத்துக்கு மட்டும் தண்ணீர் கொடுங்கள்.

குழகன் நீ இப்படி செய்தால் நான் உண்மையை சொல்லி விடுவேன்‌ என்று நினைத்தாயோ என கூறினான்.

வராகன் நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை.

இவனுடைய கட்டு எப்பொழுதும் அவிழ்க்க பட கூடாது இவன் உண்மையை சொல்வேன் என்று ஒத்து கொள்ளும் வரை.

மலம்,சிறுநீர் கழிக்கவும் இவன் கட்டு அவிழ்க்க பட கூடாது.

யாரும் இவனுடைய மலம்,சிறுநீரை சுத்தம் செய்ய கூடாது.

வராகன் உத்தரவிட்டு விட்டு சென்றான்.

குழகன் இரு வேளை பசி தாங்கினான்.

ஆனால் குழகனுக்கு பசி வந்து விட்டது.

வீரர்களிடம் உணவு மற்றும் தண்ணீர் வாங்கி குடித்தான்.

அவனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நேரம்.

வீரர்களிடம் கட்டை அவிழ்க்க சொன்னான் , வீரர்கள் அவிழ்க்க மறுத்தனர்.

அவன் தன் ஆடையிலேயே சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து மலம் கழிக்கவாது அவிழ்த்து விடுங்கள் என கெஞ்சினான்.

இப்பொழுதும் வீரர்கள் மறுக்க,குழகன் அடக்கி பார்த்தான் ஆனால் மலத்தையும் ஆடையிலேயே போய் விட்டான்.

துர்நாற்றம் வந்தது , ஈக்கள் மொய்த்தன.

குழகனுக்கு அடுத்து பசித்தது,உணவு கேட்டால் வரும் ஆனால் உண்ண‌ முடியாது.

உண்டால் திருப்பி இந்த நரக வேதனை உண்டாகும் என எண்ணி எண்ணி அழுதான்.

வராகனிடம் ஒரு வீரன் கேட்டான் மன்னா இப்படியே சென்றால் குழகன் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவான்‌ என‌ சொன்னான்.

வராகன்‌ சிரித்தப்படி 

அவனை நாம் அடித்தாலும் சரி,இப்படி செய்தாலும் சரி அவன் உயிர் போக போகிறது.

ஆனால் சித்திரவதையின் அளவு இரண்டிலும் வேறு.

நாம் அவனை அடிக்காமல் கட்டி போட்டு இவ்வாறு செய்தால் உண்மை வெளி வர சாத்தியக்கூறு அதிகம் என‌ கூறி சிரித்தான்.

குழகனின் குடும்பத்தை அங்கு அழைத்து வந்து தளபதி அடிக்க முற்பட்டான்.

வராகன்‌ அங்கு வந்து தளபதி‌யாரே உண்மை தெரியாத ஒருத்தரை அடிப்பதை என்‌ மனசாட்சி ஏற்கவில்லை.

குழகனின் குடும்பத்தை அனுப்புங்கள் என‌ கூறினான்.

வராகன் குழகனிடம் வந்து இங்கு பார்,இந்த வராகன் உன் ‌குடும்பத்தை எதுவும் செய்யமாட்டான்.

அதற்கென நீ உண்மையை சொல்லவில்லை என்றால் உன்‌ குடும்பத்தை பற்றி 

கொடுரமான முடிவு எடுக்கவும் தயங்க மாட்டான்.

எனக்கும் பூங்குழலிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

என்‌ திருமண பரிசாக நீ உண்மையை கூறினால் உன்னை என் படையில் வீரனாக ஏற்று கொள்கிறேன்.

உன்‌ புரட்சி படை நீ செய்த தியாகத்தை சிறிது காலத்தில் மறந்து விடுவார்கள்.

ஆனால் நீ எனக்கு செய்ய போகும் உதவி என் பெயர் உள்ளவரை பாடும் என்று சொல்லி திரும்பினான்.

குழகன் இளவரசே நான் உண்மையை கூறுகிறேன் ஆனால் என்னை இந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுங்கள்.

வராகன் திரும்பி நான் உன்னை காப்பாற்றுகிறேன் ஆனால் கட்டு அவிழ்த்து விட்டவுடன் நீ என்னை கொல்ல முயன்றால் உன் குடும்பம் இறைவனிடம் நேரடியாக சென்று ஆசி பெற‌ வேண்டி வரும்.

வராகன் தன் வீரர்களுக்கு குழகனின் கட்டை அவிழ்த்து அவன் உடம்பை சுத்தம் செய்ய தண்ணீர் மற்றும் மருத்துவம் பார்க்க அரண்மனை வைத்தியரை அழைத்து வர‌ உத்தரவிட்டான்.

செந்தில்நாதன் தன்‌ புரட்சி படையுன் தப்பி சென்றான்.

அவன்‌ தன்‌ புரட்சி படையை மீண்டும் தாக்க செல்ல வேண்டும் என‌ கூறினான்.

ஆனால் அவனது புரட்சிப்படை ‌வீரர்கள் சிலர் உன் அவசரத்தால் தான் இன்று நாம் ஒளிந்து கொண்டு அதுமட்டுமல்லாது நம்மில் சிலரை இழந்து விட்டோம்.

நீ எங்கள் தலைவன் அல்ல செந்தில்நாதா போய்விடு இங்கு இருந்து‌ என சில புரட்சிப்படை வீரர்கள் கூறினார்.

செந்தில்நாதன் தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்றான்.

செந்தில்நாதன் அத்தியாயம் 8 என தொடரும்.

 



Rate this content
Log in

Similar tamil story from Tragedy