saravanan Periannan

Tragedy Action Thriller

4.8  

saravanan Periannan

Tragedy Action Thriller

செந்தில்நாதன் அத்தியாயம் 6

செந்தில்நாதன் அத்தியாயம் 6

2 mins
326


அட்டைப்படம்:  பரத்.மு

இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1,2,3,4,5 படிக்கவும்.

இக்கதையில் வரும் காட்சிகள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.

செந்தில்நாதன் கோபமாக புரட்சி படையுடைய ரகசிய இடத்திற்கு வந்தான்.

குழகன் என்ன ஆயிற்று என்று கேட்டவுடன் 

எல்லாரையும் கூப்பிடு 

என கத்தினான்.

பின்பு அனைவரும் வந்தவுடன் செந்தில்நாதன் பேச ஆரம்பித்தான்.

அந்த வராகன் திருவேந்தன் நம்மை மறைமுகமாக முடிந்தால் தன்னுடன் நேருக்கு நேர் வந்து மோதும்படி சொல்கிறான்.

அவனுக்கு இந்த நொடி முதல் கஷ்ட காலம் ஆரம்பமாகிறது என கூறி முடித்தான்.

வராகன் திருவேந்தன் பூங்குழலி மற்றும் அவளது தந்தையை தான் வென்ற குறுநில நாட்டிற்கு அழைத்து சென்றான்.

பின்பு பூங்குழலி தந்தையை அந்த நாட்டிற்கு அரசன் ஆக்கினான்.

பின்பு பூங்குழலியிடம் இப்பொழுது நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என‌ கூறி அவள் தந்தையிடமும் அவர் விருப்பத்தை கேட்டான்.

பூங்குழலி தந்தை வராகனிடம் சம்மதம் என தெரிவித்தார்.

வராகன் நாட்டிற்கு திரும்பினான்.

செந்தில்நாதன் தனது இரும்பு முகமுடைய புரட்சி படையை நாடெங்கிலும் உள்ள மது கிடங்குகளை உடைத்தெறிய‌ உத்திரவிட்டான்.

அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் ,புரட்சி படை அனைத்து‌ மது கிடங்குகளையும் உடைத்தனர்.

இதை அறிந்த வராகன் எவ்வளவு ‌செலவு செய்தாவது அந்த மது கிடங்குகளை சீரமைக்க உத்திரவிட்டான்.

மந்திரி ஏன் என‌ கேட்க வராகன்‌‌ 

நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் தான்.

ஆனால் அவன்‌ ஆளும் மக்கள் கோடி பேர்.

எண்ணிக்கையில் மக்களே அதிகம்,அவர்கள் சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் நான் எப்படி என் இஷ்டப்படி செயல்படுவது.

மது அருந்தினால் அவன்‌ தன்னை மறப்பான் பின் எப்படி என்னை எதிர்ப்பான் என சிரித்தான்.

செந்தில்நாதன் தன் முகத்தை குளத்து நீரின் பிரதிபலிப்பால் கண்டான்.

அந்த பிரதிபலிப்பில் தான் மகுடம் மற்றும் செங்கோல் தாங்கி இருப்பது போல் கண்டான்.

அதை நினைத்து நினைத்து செந்தில்நாதன் சிரித்தான்.

தான் யார் என்பதை வள்ளியிடம் கூறி நினைத்தான் ஆனால் புரட்சி படையின் விதிகளின் படி ஒரு புரட்சி படை வீரன் தான் யார் என்பதை வெளியில் சொல்லக்கூடாது.

ஆனால் செந்தில் அதை வள்ளியிடம் தெரிவித்தான்.

அவள் உடனே அப்படியென்றால் பெண்களை அந்தப்புரத்தில் அடைத்து கொடுமை செய்யும் மந்திரி கலியன் என்பவனை கொன்று பெண்களை காக்கும்படி கூறினாள் ஏனெனில் மனம் உள்ள பெண்களை ஒரு பொருளாகக் கருதும் கயவன் மடிய வேண்டும்.

செந்தில்நாதன் உடனே தன் புரட்சி படையுடன் இனணந்து தீட்டம் தீட்டினான்.

குழகன் சற்று நிதானமாக திட்டம் தீட்டலாம் என கூற ,செந்தில்நாதன் உடனே செய்ய வேண்டும் என கூறினான்.

அந்த அந்தபுரத்தை சூழ்ந்த புரட்சி படை காவலுக்கு இருந்த வீரர்களை அடித்து மயக்கம் அடைய வைத்தனர்.

அந்தபுரத்தினுள் நுழைந்த புரட்சி படை அனைத்து பெண்களையும் பாதுகாப்பாக வாசல் வழியே வெளியேற்றினர்.

செந்தில்நாதன் கலியனுடன் போரிட்டு அவன் தலையை வெட்டி எடுத்தான்.

பாதி மயக்கம் தெளிந்த வீரன் அபாய மணியை ஒலித்து விட்டு விழுந்தான்.

இதை கேட்ட அந்த இடத்திற்கு அருகில் நின்ற வீரன் அரண்மனைக்கு தகவல் கூறினான்.

அரண்மனையிலிருந்து ஒரு பெரும் படை அனுப்பப்பட்டது.

குழகன் திரும்பிப் பார்த்தால் சில வீரர்கள் அனைத்து கதவுகளையும் மூடினர்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத செந்தில்நாதன் தொப்பென்று கீழே அமர்ந்தான்.

குழகன் தப்பிக்க வழி தேடினான்.

அப்பொழுது ஒரு ஆள் மட்டும் செல்லும் அளவுக்கு சதுர வடிவில் துவாரம் ஒன்று இருந்தது.

அதில் கீழே இருவர் இருந்து கொண்டு மேலே ஒவ்வொருவராக அனுப்ப முடியும்.

.அங்கு நூறு பேர் இருந்தனர்‌‌, மற்ற ஐம்பது புரட்சி வீரர்கள் அந்த பெண்களை வாசல் வழியே பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

செந்தில்நாதன் மற்றும் குழகன் ஒருத்தரின் மீது ஒருத்தர் அமர்ந்து கொண்டு எல்லோரையும் ஏற்றினர்.

கடைசியாக பத்து புரட்சி படை வீரர்கள் மற்றும் செந்தில்,குழகன் மட்டும் இருக்கும் போது வராகனின் படை அங்கு வந்து விட்டது.

அந்த பத்து புரட்சி படை வீரர்களில் ஒன்பது பேர் வரும் வராகனின் படையை எதிர்க்க சென்றுவிட்டனர்.

குழகன் மட்டும் அந்த இன்னொரு புரட்சி படை வீரரும் ஒருவரின் மீது ஒருவர் அமர்ந்து கொண்டு செந்தில்நாதனை அந்த சதுர வடிவ துவாரத்தில் வழியே மேல் அனுப்பினர்.

குழகன் மீது அமர்ந்திருந்த வீரன் அங்கு வந்த வராகனின் படையை எதிர்க்க வாளுடன் தோள் மேல் இருந்து தாவினான்.

குழகன் செந்தில்நாதனைப் அந்த சதுர வடிவ துவராத்தின் வழியே பார்த்து சிரித்தான்.

செந்தில்நாதன் குழகனுக்கு நன்றி கூறுவதற்குள் வராகனின் வீரர்கள் குழகன் மீது பாய்ந்தனர்.

செந்தில்நாதன் அங்கிருந்து தப்பி ஒடினான்.

செந்தில்நாதன் அத்தியாயம் 7 என தொடரும்.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy