வல்லன் (Vallan)

Horror Tragedy

2  

வல்லன் (Vallan)

Horror Tragedy

அதற்கும் ஆசை உண்டு

அதற்கும் ஆசை உண்டு

10 mins
222


    ஜனனி இன்னைக்கு ஆபீஸ்ல பர்மிஷன் போட்டு சீக்கிரம் வந்துடு, ஈவ்னிங் நாம வெளிய போரோம் ஓகேவா என்றான் சபரி. என்னடா திடீர் பிளான் போட்டிருக்க என்ன விஷேசம் ம்ம்... என்றாள் ஜனனி. அப்படிலாம் ஒன்னும் இல்ல, ஈவ்னிங் சீக்கிரம் வா, நாம போனா உனக்கே தெரியும் என்ன விஷயம்னு என்று சொல்லிட்டு அவனும் வேளைக்குக் கிளம்பிவிட்டான். ஜனனி சபரி சொன்னது போல ஆபீஸ்ல பர்மிஷன் போட்டு கொஞ்சம் முன்னமே வந்துட்டா, வெளிய போரதுன்னா இந்த பொண்ணுங்க கிளம்பறத பத்தி சொல்லவா வேணும், அதுவும் திடீர் அவுட்டிங்னு புருசன் கூப்பிட்டா அப்படியே உச்சில இருந்து உள்ளங்கால் வரை பரபரப்பாகிடுவாங்க. இதோ சபரியும் வந்துட்டான். மீண்டும் ஜனனி... எங்கடா போரோம் இப்பவாது சொல்லேன் என்று கேட்க இவ்வளோ நேரம் வெயிட் பண்ணீட்ட கொஞ்சநேரம் பொறுத்துக்கோ ஜனா என்றான். போடா ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கற நீ எரும என்று செல்லக் கோபத்தோடு ஒரு அடி வைத்தாள்.‌

        சபரிக்குமே தெரியாது தான் இன்று எந்தமாதிரியான பிரச்சினையில் போய் விழப்போகிறோம் என்று.

        ஜனா கார்ல போலாமா இல்ல பைக்ல போலாம? பைக்லயே போவோம்டா அப்போ தான் நல்லா இருக்கும். பைக்கை ஸ்டார்ட் செய்தான், பின்னால் ஏறி அமர்ந்தாள் ஜனனி. விருட்டென ஆக்ஸிலேட்டரை முறுக்க வண்டி சருட்டென பறந்தது காற்றைக் கிழித்து. பேசிக்கொண்டே வந்தாள் ஜனனி, சபரி உணக்கு இந்த கனவுகள் மேல நம்பிக்கை இருக்காடா? அதெல்லாம் சும்மா லூசு ஒன்னும் நடக்காது, நாம எதாவது நினைச்சுகிட்டே தூங்கிட்டா அதுதான் கனவுல வரும் வேற எதுவும் இல்ல. இந்த கனவு எல்லாம் சும்மா என்றான் சபரி. அப்படி இல்லடா எனக்கு ரொம்ப நாளா ஒரே கனவு அடிக்கடி வருது, அது கனவா இல்ல வேற எதாவதா என்றும் தெரியவில்லை அதோட அர்த்தம் என்னனு ஒன்னும் புரியல, ரொம்ப கன்ஃபியூஸா இருக்கு என்றாள். கனவுக்கு எல்லாம் என்ன அர்த்தம் இருக்க போகுது சும்மா மனச போட்டு குழப்பிக்காத கம்முனு வா என்று சமாதானப்படுத்தினான்.

         அதன் பிறகு அவளும் ஏதும் பேசவில்லை, அமைதியாக அந்த கனவை மீண்டும் மனதுக்குள் அசைபோட்டவாறே வண்டியில் போய்க்கொண்டிருந்தாள். ஆனால் மனது முழுவதும் அந்த கனவிலேயே லயித்திருந்தது. அது கனவா இல்லை ஏதேனும் ஒரு உணர்வா என்று தெரியவில்லை. இந்த இண்டர்நெட் கலத்துல போயி பேய் கனவு வருது பயமா இருக்குன்னு சொன்னா எல்லாம் என்னைய லூசு மாதிரி பார்ப்பாங்க அப்படினே இதை யார்கிட்டயும் சொல்லல, இன்னைக்கு இவன்கிட்ட கனவுனு சொன்னாலே அதுக்கே இப்படி கிளாஸ் எடுக்க ஸ்டார்ட் பண்ணீட்டான் . நான் என்ன பண்ண என்று யோசனையிலேயே போய்க் கொண்டிருந்தாள் அவனுடன் வண்டியில்.

            வண்டி சிட்டியைத் தாண்டி செல்வதை அப்போதுதான் கவனித்தாள், என்னடா சிட்டிய தாண்டி போற, எங்க போறோம்னு இப்பவாச்சும்‌ சொல்லுடா என்று கேட்க, வீக்என்ட் தானே இங்க பக்கத்துல ஒரு இடம் நெட்ல சர்ச் பண்ணி பார்த்தேன் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு அதான் அங்க போகலாம்னு ப்ளான் என்றான். சரி அது என்னடா அவ்ளோ இன்ட்ரஸ்டான இடம் அத பற்றி சொல்லுடா நானும் கேட்கறேன் என்றாள். சொன்னா பயப்படமாட்டயே? என்றான் சபரி... என்ன பேய் வீட்டுக்கா கூட்டீட்டு போகப்போற என்றாள் சிரித்துக்கொண்டே... எப்படி டி கரெக்ட்டா கண்டுபிடிச்ச என்று சொல்ல ஜனனி ரொம்ப படபடப்பாகியதை கவனிக்காமல் அவன் கேட்க, விளையாடாதடா சபரி பேசாம வீட்டுக்கு போயிடலாம் என்றாள். என்ன இப்படி பயப்படற? நான்‌தான் இருக்கேன்ல என்றான், அவள் மனசுககுள்ளே நீ இருப்படா ஆனால் நான்? என்று நினைத்துக்கொண்டு ஏதும் பேசவில்லை.

            அவள் கண்களில் அந்த வித்தியாசமான கனவு மீண்டும் வந்து வந்து சென்றது. அதை எப்படிச் சொல்வது, ஒரு அருவருப்பான கூச்சம், உடலில் கம்பளிப்புழு ஊர்வது போல அரித்தது, பசபசப்பாக, இன்னும் எப்படி அதைச் சொல்வது என்று வார்த்தைகள் கிடைக்கவில்லை. வீட்டில் தூங்கும் போது யாரோ என்னைத் தீண்டுவது போல இருக்கும், காதின் அருகில் வந்து பெருமூச்சு விடுவது போல இருக்கும், ஜன்னல் வழியே காற்று மெதுவாக வந்து மேனியில் விளையாடுவது போல ஆனால் அருவருப்பாக இருக்கும், அது என்ன என்றே தெரியவில்லை. எல்லா நாளும் இந்த உணர்வு வந்தது இல்லை, வீட்டுக்கு விலக்காக உள்ள நாட்களில் தான் இந்த உணர்வு அதிகம் ஏற்பட்டது, அந்த நாட்களில் தான் நான் பூஜை அறைக்குச் செல்வது இல்லை, என்னைத்தவிர யாரும் வீட்டில் பூஜை செய்ய ஆள் இல்லை. இதுவே ஒரு பெரிய மர்மமாக இருக்கிறது. இதை யாரிடமாவது சொன்னால் எனக்கு மண்டை குழம்பிட்டதுன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனாலேயே யார்கிட்டேயும் எதுவும் சொல்லல. இதே போல ஒரு நாள் மீண்டும் அந்த உணர்வு, அன்று வெளியே நல்ல காற்றுடன் மழை மரங்கள் வளைந்து வளைந்து முறிந்துவிடுவது போல சடசடவென ஆடின, ஜன்னல்கள் படபடவென படபடத்தன, ஸ்கிரீன் எல்லாம் கிழிந்துவிடுவது பொல அகோர காற்று கொஞ்ச நேரத்தில் அருகில் ஏதோ நெருங்குவது போல, மூச்சு காதுகளில் பட்டது, மூக்கில் கருகிய வாடை நுழைந்து குமட்டியது, மேலே கை வைப்பது‌ போன்றஉணர்ச்சி, உணர்ச்சி தென்பட்ட இடத்தில் ஒரு குருட்டு தைரியத்தில் யாராக இருக்கும் என்று பார்த்துவிட வேண்டும் என்று பிடித்துவிட்டேன்... முதலில் சபரியாகத்தான் இருக்கும் என நினைத்தேன், அதைத் திரும்பி பார்த்தால் தான் தெரிந்தது பாதி வெந்த உடல் வழவழப்பாக சீல் வடிந்து ஒரு அருவருப்பான தோற்றத்தில் இருந்தது, இதயம் அப்படியே படக்கென‌ ஒரு நொடி நின்று மீண்டும் டபக்கென உயிர் பெற்று துடித்தது. அந்த உருவத்தை முழுதும் பார்க்கவில்லை, அரைகுறையாக பார்த்ததில் கருப்பாக, தீப்புண்களுடன் ஒரு ஆண் போல தெரிந்து... அவன் ஏன் என்னைத் தொட வேண்டும் என்று இங்கே வரனும், யாரா இருக்கும் என கேள்விகளின் மாலையைத் தொடுத்துக் கொண்டு இருந்தாள் மனதுக்குள்.

          ஜனனி... ஏய் ஜனனி... என்ன‌ பட்டப்பகலிலேயே மறுபடியும் கனவா? என‌ கிண்டலாக கேட்டான். சபரி கூப்பிடவும் தான் நிகழ் உலகுக்கு வந்தாள் ஜனனி, என்னடா என்று மீண்டும் கேட்டாள், ஒன்னுமில்ல இறங்கு காஃபி குடிச்சுட்டு போவோம் என்றான். இருவரும் ஒரு மோட்டலில் இறங்கி காஃபி ஆர்டர் செய்து காத்திருந்தனர். காஃபி வந்தது, ஒன்னும்‌ சொல்லற அளவுக்கு இல்ல, ஏதோ பச்சதண்ணீல லைட்டா பால் மிக்ஸ் பண்ணி காஃபி தூள் கொஞ்சம் போட்டு இருக்கு அவ்வளவுதான், ஆனால் இந்த காஃபி இருபது ரூபாய்... பெரும் பகல் கொள்ளை.

            மீண்டும் பயணம் தொடங்கியது, ஒரு ஏழு மணி போல சபரி சொன்ன இடத்துக்கு வந்தாச்சு. அந்த இடம் பார்க்க ஒன்றும் அவ்வளவு பயங்கரமாக இல்லை. ஆனால் பார்த்தால் உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு போகாதே என்று தடுக்கிறது, ஆனால் அந்த உணர்வு உள்ளுக்குள் சிறிது நேரத்தில் அடங்கிட, ஒரு தைரியத்துடன் உள்ளே போனேன். பக்கத்தில் அவ்வளவு நெருக்கத்தில் வீடுகள் ஏதும் இல்லை, அங்கு இருந்தது எல்லாம் பெரிய காம்பவுண்ட் உடன் பரந்த தோட்டம் கொண்ட தனித்தனி வில்லாக்கள். நடந்து செல்லும் பாதை தனியாக விளக்குகளுடன் இருந்தது, சுற்றி வேறு எங்கும் வெளிச்சம் இல்லை, வீட்டிலும் பாதையிலும் மட்டுமே வெளிச்சம்.‌ இவை எல்லாம் ஒரு வித அசாதாரண உணர்வைத் தந்தது. அவள் எவ்வளவு சொல்லியும் சபரி கேட்கவில்லை. விதி யாரை விதிவிலக்கா விட்டுவைத்துள்ளது ? வேறு வழி இல்லாமல் ஜனனி அவனுடன் உள்ளே சென்றாள். வீட்டுக்குள் சென்று சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது சிறிது நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டது. இப்போது தான்‌ அந்த அருவருப்பான தீண்டல் மீண்டும் நினைவுக்கு வந்தது..‌‌. அவள் மனதுக்குள் ஏதோ தவறாகவே நடப்பது போலத் தோன்றியது. அந்த தீண்டலும் இந்த நாட்களில் தான் வருகிறது. இன்று இங்கு வந்த பிறகு பீரியட்ஸ் வந்திருக்கிறது, ஏதோ சரியில்ல என‌ மனதில் நினைத்துக்கொண்டாள். எனக்கு இப்ப பீரியட்ஸ் ஆகிடுச்சு, பக்கத்துல எதாவது கடை இருந்தா நீ போயி நாப்கின் வாங்கிட்டு வா என்று அனுப்பினாள்.

          அனுப்பும் வரை ஒன்றும் தெரியவில்லை, அவன் போன பின்தான் தான் தனியாக இருப்பதை உணர்ந்தாள். அந்த உணர்வால் அட்ரீனல் அதிகமாக சுரக்க ஆரமித்தது, ஏதேனும் சிறு சத்தம் வந்தாலும் இதயம் அப்படியே நிற்பது போல் இருந்தது ஜனனிக்கு. உடல் எல்லாம் வியர்த்து பூத்து சபரி வருவதற்குள் ஒரு மாதிரியாக ஆகிவிட்டாள், அவன்‌ வந்து அவளைப் பார்த்ததும் என்ன ஆச்சு ஏன் இப்படி ஃபேன் கூட போடாம வேர்க்க விருவிருக்க உர்கார்ந்திருக்க என்று சொல்லிக்கொண்டு சுவிட்ச்சைத் தட்டினான். ஜனனி எதுவும்‌ பேசவில்லை, வாங்கிவந்த நாப்கின்னை எடுத்துச் சென்றவள் சிறிது நேரத்தில் வந்தாள், நாளை காலைல எழுந்ததும் வீட்டுக்கு போயிடலாம் சபரி எனக்கு பயமா இருக்கு என்று அவனைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். என்ன சொல்வது என்று தெரியாமல் சபரி, ஏன் லூசு இப்படி பயப்படற..‌‌. நான்தான் இருகேன்ல அப்பறம் என்ன என்று கொஞ்சம் சமாதானம் செய்து வாங்கி வந்த தோசையை அவனே அவளுக்கு ஊட்டிவிட்டான். இப்போது சபரிக்கே சிறிது பயம் வந்தது, எதற்குமே அலட்டிக்கொள்ளாதவள் ஏன் இன்று இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து இப்படி ரெஸ்ட்லஸா இருக்க என்று யோசித்துக்கொண்டு இருந்தான். திடீரென கரண்ட் கட், அதுவும் அவர்கள் இருந்த வில்லாவில் மட்டும், சபரி உடனே வில்லா மேனேஜ்மென்ட் க்கு போன் செய்து வந்து பார்க்கச்சொன்னான். சபரி இங்க வாயேன்... என் கூடவே இரு எங்கேயும் போகாத என்று அவனைப் பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டாள். மெல்ல அவனிடம் எனக்கு வந்தது கனவா இல்லை வேற ஏதாவது ஒன்றா எனக்குத் தெரியவில்லை சபரி, நெருப்பில் வெந்த ஒரு உடல் இந்த மாதிரி என்னோட பீரியட்ஸ் டைம்ல என்னை தொட முயற்சி பண்ணுது. மூனு டைம் இந்த மாதிரி நடந்திருக்கு. நான் இதை யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. ஆனால் இன்னைக்கு என்னவோ எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. கரெக்ட்டா இங்க வந்த உடனே பீரியட்ஸ் ஆகுது, ஆல்ரெடி இப்ப பத்து நாள் முன்ன தான் ஆச்சு, திடீர்னு இப்ப ஆகுறது ஏதோ மனசுக்கு தப்பா தோனுது... என்று நடுக்கத்துடனே அவன் மார்பில் சாய்ந்தபடியே சொன்னாள், அவனால் அவளது நடுக்கத்தை உணர முடிந்தது. இதுவரை அவன் ஜனா-வை இப்படி பார்த்ததில்லை நிலைகுலைந்தவளாக.

            வெளியே காற்று சுழி சுழியாக சுற்றிச் சுழன்று வீசிக்கொண்டு இருந்தது, நட்சத்திரங்கள் இல்லை வானில், கருமேகங்கள் படர்ந்து கரண்ட் இல்லாத வீட்டை இன்னும் இருட்டாக்கின. போன் பண்ணி எவ்வளவு நேரம் ஆகுது இன்னமும் வரல பாரு என்று திரட்டிக்கொண்டே மீண்டும் போன் செய்தான்... புஃல் ரிங் போய் கட் ஆனதுதான் மிச்சம். கொஞ்ச நேரத்தில் மழை பிடிக்க ஆரமித்துவிட்டது, ஜன்னல் கதவுகள் எல்லாம் தடதட தாளம் போட்டு இருட்டின் அமைதியில் ஸ்பீக்கர் வைத்து கத்தின. இதெல்லாம் மற்ற நேரமாக இருந்திருந்தால் நிலை வேறு. மரங்கள் ஆடி அசைந்தது பெரிய குன்று கால் முளைத்து நடந்து வருவது போல இருந்தது.

            இருவரும் அப்படியே வண்டியில் வந்த அசதியில் தூங்கிவிட்டனர். திடீரென அதே பெருமூச்சின் சத்தம் ஜனனியின் காதை துளைத்தது, அதே கருகிய வாடை மூக்கில் நுழைந்தது, அவள் கண்ணைத் திறக்காமலே அருகில் கை நீட்டிப் பார்ததாள் எதுவும் தட்டுப்படவில்லை, எல்லாம் நம் பிரமை என்று நினைத்து சபரி... சபரி... என்றாள் அவன் பதில் பேசவில்லை. கண்ணைத் திறந்ததும் ஜனனிக்கு உயிரே போயிவிட்டது போல இருந்தது... ஏனென்றால் அது வேறு‌ யாரும் இல்லை சபரிதான்... அவன் உடலில் வேறு ஒரு உயிர் தொற்றிக்கொண்டு இவளை இத்தனை பாடு படுத்தியுள்ளது. இன்று அதை அவள் கண்கூடாக கண்டு‌ம்விட்டாள்.

             அலறியடித்து வெளியில் எழுந்து ஓடுகிறாள் , நடுநிசியில் ஒரு ஜன‌நடமாட்டமும் இல்லை, இரண்டு வில்லாக்கள் தள்ளி ஒரு மாரியம்மன் கோவில் இருந்ததைப் பார்த்துவிட்டாள். அதனை நோக்கி ஓட குறுக்கே வந்து மறித்தான்‌ அவன். என்ன செய்ய என்று தெரியாமல் கத்தினாள் கூச்சலிட்டாள்... நீ என்னிடம் இருந்து தப்ப முடியாது, உன்னை நான் விடமாட்டேன்... நீ என்னை ஏமாற்றியவள் . நீ யாரு ? நா ஏன் உன்ன ஏமாத்தனும், எதுக்கு இப்படி என்ன கொடும செய்யற ? என கேள்விகளால் கனை தெடுத்தாள். அதற்கு பதில் அவனின் அனாயசிமான சிரிப்பே... என்ன‌செய்வது என்று‌ தெரியாமல் இருந்த நேரம், கீழே இருந்து மண்ணை அள்ளி அவன் கண்களில் தூவிவிட்டு அவனைத் தள்ளிவிட்டு விருட்டென கோவிலை நோக்கி ஓடினாள்.

            கோவில் கதவு சாத்தியிருந்தது, பூசாரி உள்ளே தான் இருந்தார், அவரை கத்தி கத்தி கூப்பிட்டாள்... ஒரு வழியாக அவன் வருவதற்குள் பூசாரி வந்து கதவைத் திறக்க இவள் உள்ளே நுழைந்துவிட்டாள்.

மாதவிலக்கில் கோவிலுக்குள் போகக்கூடாது என்பது இருந்தாலும் இங்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை, ஊரில் பெரியவங்க பழமொழி சொல்லுவாங்க மாரியம்மனுக்கு தீட்டு மட்டும் விலக்கு, அவளுக்கு அது ஒரு பொருட்டு இல்லனு சொல்ல கேட்டிருக்கேன்,

ஒரு வினாடி தாமதமாகி இருந்தாலும் அவன் என்னைப் பிடித்திருப்பான் . பூசாரி யாருமா நீ ? இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணற? என்று கேட்க, ஜனனி நடந்தவற்றை அவரிடம் ஒன்று விடாமல் கூறி முடித்தாள். இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க சாமி, சபரியை அந்த கெட்ட சக்திகிட்ட இருந்து காப்பாத்துங்க.

           கொஞ்சம் யோசிச்ச பூசாரி, சரி இதோ நீ போய் அங்கே உக்காரும்மா, நான் அவன அழைச்சுட்டு வரேன்னு வெளிய போனார். அவன் பக்கமா வந்த உடனே கையில வச்சிருந்த திருநீற்றை எடுத்து அவன் மேல வீச கட்டுண்ட அவனை கோவிலுக்குள் அழைத்து வந்து ஒரு வட்டத்தை திருநீற்றில் போட்டு அதனுள் உக்காரவைத்தர், அவனால் அசைய முடியவில்லை. அந்த ஆத்திரத்துல அவன் போட்ட பெருங்கூச்சல் எல்லார் காதிலும் கம்பிய விட்டு குடையற‌மாதிரி இருந்துச்சு, சத்தம் தாளமுடியாமல் அவ கண்ணுல இருந்து தாரைதாரையா கண்ணீர் வழிய ஆரமிச்சுட்டது. அவன் சத்தத்தோட சேர்ந்து சூறைக்காற்று வேற சுழன்று‌ சுழன்று சுற்றி வளைத்து ஓஓஓ.... வென அவளோட நிலைய பாத்து அழத்தொடங்கியது போல இருந்தது. அவனை என்ன செஞ்சாலும் பூசாரியால கூட கன்ட்ரோல் பண்ண முடியல. ஒரு ஆன்மாவோட ஆசை எவ்வளவு ஆழமானதோ அந்த அளவுக்கு ஆத்திரமானதும், அழிவையும் ஏற்படுத்தும். பேச வைக்க எடுத்த அத்தனை‌ முயற்சிகளும் வீண், மனசுக்குள்ள ஏதோ நினைத்தவளா,

சாமி நா பேசி பாக்கறேன்...

வேணாம்மா அது ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு என்ன பண்ணும்னே தெரியாது போகாதம்மா.

இல்ல சாமி அதுக்கு தேவை நான் தான், அதனால என்ன எதும் பண்ணாது கவல படாதீங்க சாமி.

பாத்து ஜாக்கிரத ம்மா.

          அவன் பக்கமா மெதுவா போய் நின்னு,

நீ யாரு? நா உனக்கு என்ன பாவம் பண்ணேன்? எதுக்கு நல்லா இருக்க என் வாழ்க்கைய நாசமாக்க வந்த? கண்ணில் கண்ணீர் ஆறு ஓட வாயில் வார்த்தை அருவியாக வீழ்ந்தது.

ஒரு பார்வை அவளை மேலிருந்து கீழாக,‌ என்ன தெரியல யாருனு? நல்லா நினைச்சு பாரு, காலேஜ்ல உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தேனே? எத்தன முறை அசிங்கபட்டாலும் மறுபடி வந்து முன்னாடியே நிப்பேனே? என்ன தெரியலயா?...

நிசப்தம் சூழ்ந்த, இருட்டிலே ஒரே ஒரு தீப‌ஒளியில் கருவறை உள்ளிருந்து நடப்பவற்றை சிரித்துக் கொண்டே பார்க்கிறாள்...

மெல்ல நினைவுகளை‌ அசைபோட்டவள், துக்கம் தொண்டையை அடைக்க வீலென கத்தி அழத்தொடங்கிட்டாள்.

தெரியாம செஞ்ச பாவமானாலும் அதுக்கும் தண்டனை வேண்டுமல்லவா...

மிதுன்...

ஆமா இது நானே தான்...

".................", என்னடா சொல்ற, எப்படி ஆச்சு? நீ எப்படி.....‌?

உனக்கு எத்தன டைம் ப்ரொபோஸ் பண்ணிருப்பேன், அதுக்கு என்ன சொன்ன எங்க வீட்டுல என்னைய படிக்க தான்‌ அனுப்பிச்சாங்க, அவங்க நம்பிக்கைய தப்பாக்கிடகூடாது, அது... இதுனு சொன்னயே...

நா அத மட்டுந்தா சொன்னேனா? எனக்கு உன்னய பாத்தா காதலிக்கனும்ன்ற ஃபீல் வரலனும் தானே சொன்னேன். உன்ன ஃப்ரண்டா பாத்துட்டு லவ்வரா பாக்க முடியல அதையும் தானே சொன்னேன்.

இப்ப நீ எப்படி‌ கல்யாணம் பண்ணிருக்க? லவ் மேரேஜ் தானே... என்ன மட்டும் ஏன் உனக்கு பிடிக்கல?

இதுல என்ன தப்பு, எனக்கு பிடிச்சா தான் பிடிச்சுருக்குனு சொல்ல முடியும், சபரிய எனக்கு காலேஜ்லயே பிடிக்கும், வேலையும் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல கிடச்சது, முதல்ல தான் ப்ரொபோஸ் பண்ணேன். அவனுக்கும் என்ன பிடிக்கும்னு அப்பதான் தெரியும். வீட்டுல சொன்னோம் ஒத்துகிட்டாங்க, கல்யாணம் பண்ணிகிட்டோம்... இதெல்லாம் உனக்கு ஏன் நா விளக்கனும்? எதுக்கு என்ன செத்தும் வந்து கொடும பண்ணற?

     நீ வேண்டானு சொன்னே நா விலகி தான் இருந்தேனே தவிர உன்ன தினமும் ஃபாலோ பண்ணுவேன், நீ எப்ப என்ன பண்ணுவ, யார் கூட பேசுவ, எப்ப படிப்ப, எப்ப தூங்குவனு உன்ன நான் அப்படி காதலிச்சேன். காலேஜ் முடிஞ்சதும் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. அப்பவும் நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவனு தான் யோசிச்சுட்டு இருப்பேன் ... நீ எப்ப சபரிக்கு ப்ரொபோஸ் பண்ணயோ அப்பவே என் மனசு உடைஞ்சுடுச்சு, நா தோத்துட்டேன், ஒரு பொண்ணுக்கு என்னைய பிடிக்காம போச்சு, அதுவும் நா உயிருக்கு உயிரா நினைச்ச நீ என்ன வேண்டாம்னு‌ சொல்லிட்ட... இன்னொருத்தன உனக்கு பிடிச்சுருக்கு இது எல்லாம் என்‌ மன்டய போட்டு குடைஞ்சு எடுத்து என்ன அணுஅணுவா கொண்ணுச்சு. அதனால்தான் என்னைய நானே எரிச்சுகிட்டு செத்து போயிட்டேன்...

காதல்ல வந்த இந்த தோல்விய‌ மறக்காமுடியாம இப்படி சுத்தி அலைஞ்சுட்டு இருக்கேன்...

            இதோ பாரு மிதுன், நா தெளிவா சொன்ன அப்புறமும் நீ மனசுல ஆசைய வளர்த்துகிட்டது உன்னோட தப்பு, தனக்கு கிடைக்காதுனு தெரிஞ்சும் அது மேல ஆசை வைக்கிறது முட்டாள்தனம். நீயே அந்த தப்ப பண்ணீட்டு என் மேல குத்தம் சொன்னா நீ நல்வனாகிடமாட்ட... இன்னைக்கு இந்த நாட்டுல எத்தன பொண்ணுங்க ஒன்சைட் லவ்வர்ஸால ஆசிட் அடிச்சு முகத்த இழந்து வாழ்க்கைய தொலைச்சுருக்காங்க. நீங்க லவ் பண்ணா அவளும் உங்கள லவ் பண்ணும்னு ஏதாச்சும் எழுதப்படாத சட்டம் ஏதும் இருக்கோ? எனக்கும் தெரியல இந்த மாதிரி மென்டாலிட்டியோட இருக்க ஆம்பளங்களாள தான் பொண்ணுங்க சுதந்திரம் இல்லாம இருக்கறோம். உங்களுக்கு அவள பிடிச்ச மாதிரி அவளுக்கு வேற யாரையாவது விரும்புவாங்கனு நினைச்சு பாக்கமாட்டிக்கறீங்க ஏன்டா இப்படி எங்க உயிர எடுக்கறீங்க? இருக்கும்போது தான் நிம்மதியா விடல, செத்தும் பேயா வந்து கொல்லறியே நீயெல்லாம் என்ன ஜென்மமோ? உனக்கு நான்‌தானே தேவை சபரிய விட்டுட்டு என்னைய என்ன வேணுமான பண்ணு...

           நீ அவனோட சேரக்கூடாதுனு தான் நா இப்படி பண்ணிட்டு இருக்கேன்... எப்படி அவன விட்டு வருவேன்... ம்...

           ச்சீ நீ என்ன பிறவியா இருப்ப எவ்வளோ எடுத்து சொல்றேன், நாங்க இப்பதான் நிம்மதியா, சந்தோசமா நிறைய கனவுகளோட எங்க வாழ்க்கைய தொடங்குறோம் நீ வந்து அத கொடுக்க நினைக்குற... இவ்வளவு கேவலமான‌ புத்தி இருக்க ஒருத்தன எந்த பொண்ணுதான் விரும்புவா...

          இதோ பாரு ஜனனி எனக்கு உன்ன எவ்வளோ புடிக்கும்னு சொல்ல வார்த்த இல்ல... ஆனா இப்ப நீ கஷ்டபடுறத பாக்க முடியல என்னால... இதுலாம் என் தப்புதான்னு எனக்கு புரிய‌வச்சுட்ட... பொண்ணுங்களுக்கும் ப்ரைவசி தேவை, அத வெளிய பேசறவங்க நடைமுறைக்கு வச்சு பொருத்தி பாக்குறது இல்லன்றது இன்னைக்கு நீ சொல்லித்தான் புரிஞ்சுகிட்டேன். ஜனனி என்ன மன்னிச்சிடு... நா செஞ்சது தப்புதான், என் வாழ்க்க தான் என் கிறுக்குத்தனமான முடிவால போச்சு. இனிமேலும் உன் வாழ்க்கைய நா வீணடிக்க விரும்பல... நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும், நா போறேன்...

        '..................' சபரி அப்படியே மயங்கி சரிந்துவிட்டான். பூசாரி விபூதி பூசி முக்த்துல தண்ணீ தெளிச்சு எழுப்பிவிட்டார்.

        ஜனா உனக்கு எதும் ஆகல தானே நல்லாதானே இருக்க?

        அழுதுகிட்டே ஓடிவந்து இருக்கமாக கட்டிக்கொண்டு இன்னும் தேம்பி தேம்பி அழதுக்கொண்டே இருந்தாள்.

        பூசாரி நடந்ததை சபரிகிட்ட விவரமா சொல்ல அவனால எதுவும் பேசவும் முடியல நம்பவும் முடியல. நீ சொன்ன போது நா நம்பாம விட்டுட்டேனே ஜனா என நொந்துகொண்டான்.

        இனி அந்த ஆவி உங்கள நெருங்காது, அது சொன்ன வார்த்தைய‌ மீறாது. தைரியமா போங்கம்மா. நீங்க ரெண்டு பேரும் நினைச்ச மாதிரி நல்ல சந்தோஷமா நூறுவருசம் நிம்மதியா வாழுவிங்க, அந்த அம்மன் அருள் எப்பவுமே உங்களுக்கு இருக்கும்.

        அம்மாடி நீ அந்த ஆவிகூட அவ்வளவு தைரியமா பேசி அதுக்கு உண்மைய புரிய‌வைச்சதால தான் அது போச்சு. உண்மையிலேயே தன் தப்ப உணர்ந்த ஆன்மா இனிமேல் கெட்டது செய்யாது. உனக்கு நல்லதுதான் செய்யும். பயப்படாம சந்தோஷமா போயிட்டுவாங்க...

        ரொம்ப நன்றி சாமி, ஆதரவே இல்லாம ஓடி வந்த என்ன நீங்க காப்பாத்திட்டீங்க. இந்த உதவிய என்னைக்கும் நா மறக்கமாட்டேன்...

         இருவரும் கிளம்ப, கதவை சாத்திய பூசாரி உள்ளே சென்றவர் திடீர்னு மாயமா மறைஞ்சுட்டார்.


Rate this content
Log in

Similar tamil story from Horror