அம்மா
அம்மா


பொங்கல் லீவெல்லாம் நாளைக்கு முடியுதா அம்மா!
ஆமாம்டா!
அப்ப நீ நாளையிலிருந்து வேலைக்கு போய்டுவியா?
ஆமாம்! உனக்கு சாக்லேட் வாங்க,பிஸ்கட் வாங்க,புதுத்துணி வாங்க எல்லாவற்றிற்கும் பணம் வேண்டுமே!
அப்ப நான் எதுவுமே கேட்கலைன்னா நீங்க ஆபிஸ் போக வேண்டாமா அம்மா!
ஸ்கூல் ஃபீஸ் யார் கட்டுவா?
எல்கேஜி கிரண் ஆழ்ந்து தூங்குவதுபோல நடிக்கத் தொடங்கினான்.
அருகில் அவன் அம்மா உட்கார்ந்திருப்பதை திருட்டுத்தனமாக பாதி கண்களைத் திறந்தபடி இருந்தான்.
இந்த பையனுக்கு அப்பா இல்லை. நான்தான் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்.. அம்மா! இவனை நல்லபடியாக கவனியுங்கள். இப்போதே இப்படி கேட்கிறானே!
ஏழு வயது வரைக்கும் நீ கூடவே இருந்திருக்கலாம். அதற்குள் வேலை! வேலை! என பறக்கிறாய்? தாய் ஸ்தானத்தை யாராலும் பங்கு போட முடியாதும்மா..புரிஞ்சுக்கோஎன்றாள் அவள் அம்மா
அதுக்குத்தான் நான் இலவச பள்ளியில் படிக்கிறேன்னு சொன்னேன் என எழுந்து உட்கார்ந்தான் எல்கேஜிகிரண்.
நாளைக்கு அந்த பள்ளியில் உன்னை சேர்த்துடறேன். இப்ப தூங்கு என்றாள் அவன் அம்மா.