ஆழ்துளை அற்புதம்
ஆழ்துளை அற்புதம்


நடுக்காட்டுப்பட்டி திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது.
என்னடா! ஒரே சத்தம்?
பையன் போர் குழாயில் விழுந்துட்டானாம்…….
நம்ம சர்க்கஸ்காரபயலுக அங்கதானே இருக்காங்க!
அண்ணாச்சி! போர் நாலரை இன்ச்தான்………..
என்னடா செய்யலாம் என சுவரில் மாட்டியிருந்த ஆஞ்சநேயர் படத்தினருகில் இருந்த சவுக்கைப் பார்த்தபடி இருந்தார்.
சவுக்கை எடுத்துக்கொண்டு ஊர்மக்கள் நின்ற இடத்திற்கு அருகில் சென்றார்.
அண்ணாச்சி! அதோ! தூரத்தில் பாருங்க!
அண்ணாச்சி கண்ணிற்குக் கண்ணாடியை மாட்டினார். தூரத்தில் நிறைய குரங்குகள் வருவதைப் பார்த்தவுடன் மக்களை அங்கிருந்து போகுமாறு சைகை காட்டினார்.
மக்களும் அங்கிருந்து நகர்ந்தனர்.
அண்ணாச்சியும் தனது கேமராவையும்,சவுக்கையும் அங்கு வைத்துவிட்டு கிளம்பினார்.
ஆழ்துளைகிணற்றின் அருகில் வந்திருந்த குரங்குகள் கூட்டம் இருப்பதிலேயே மிகவும் சிறிய குரங்கை உள்ளே அனுப்பி ஒன்றுடன் ஒன்று வாலால் சங்கிலிபோல நெருக்கமாக நின்று அமைத்து நின்றன.
பத்தே நிமிடத்தில் பையன் மேலே வந்தான்.
அம்மா! அம்மா! என்ற தனது பையன்குரல் கேட்ட அந்த தாய் தனது பையனைத் தேடி ஓடி வரவும் குரங்குகள் ஓடி மறைந்துகொண்டு தாய் தனது மகனைக் கட்டிப் பிடித்து அழுவதை வேடிக்கை பார்த்தன. அந்த தாயின் அருகில் பிவிசி எண்ட்கேப்பை தொப் எனப் போட்டது.
பார்டா!பார்டா!
என்னத்தைப் பார்க்க! பொழுது விடிஞ்சு ரொம்பநேரமாச்சு!அந்த பையன் நியுஸ் பார்த்துட்டே தூங்கிட்டீங்க என்று சொன்ன மனைவி வாணியை எல்லாம் கனவா! என உச் கொட்டினார்.