Madhu Vanthi

Comedy Drama Children

4.7  

Madhu Vanthi

Comedy Drama Children

2K KIDS - 2

2K KIDS - 2

8 mins
310


தினமும் காலை 11.15 முதல் 11.30 வரையில் ப்ரேக் டைம்..... இந்த பிரேக் நேரம் என்பது, நம் பள்ளி மாணவர்களுக்கு தாத்தா கடையில் டீ காபி குடிக்கும் நேரம் மற்றும் சைட் அடிக்கும் நேரமாகவும், மாணவிகளுக்கு போண்டா சமோசாவை உள்ளேதள்ளும் நேரம் மற்றும் காலையில் பாதியில் விட்ட உறக்கத்தை தொடரும் நேரமாகவும் நகரும்.. இந்த நேரம் தான் நம் 10A 10B.. ஆகிய இரு வகுப்பு பட்டாளமும் ஒன்று சேரும் நேரம்... 


அந்த பள்ளியில் நட்ட நடு கிரவுண்டில் ஒரு சாய்வான வேப்ப மரம் உண்டு, வழக்கமாக இவர்கள் அங்கு தான் தங்கள் கூட்டணியை கூட்டுவார்கள்..., அன்று A கிளாஸ்க்கு சீக்கிரமாகவே வகுப்பு முடிந்ததால், B கிளாஸ் அந்த இடத்தை அடையும் முன்பே அவர்கள் அங்கு இருந்தார்கள்.


இவர்கள் அங்கு சென்றதும்..., "ஏய்... என் கிட்கேட் எங்க டி...", என பில்கியை பார்த்து சபீ கத்த... அப்போதே அவர்கள் வந்துவிட்டதை மற்றவர்கள் பார்த்தார்கள்..., சபியை தொடர்ந்து ஒவ்வொருவரும், பில்கியுடன் தாராவையும் சேர்த்து ஆளுக்கு ஒரு கம்பெனியை விலைக்கு வாங்கி கொண்டு தத்தம் சாக்லெட்டை கேட்க..., "இப்போ நாங்க போனா, நீங்க சொன்ன லிஸ்ட வாங்கிட்டு திரும்ப வரதுகுள்ள ப்ரேக் முடிஞ்சுரும்.... சோ லஞ்ச்ல வாங்கி தரோம்.... ", என கூறிவிட்டு, வழக்கமாக அளக்கும் கதையை அளக்க தொடங்கினார்கள்...


அப்போது பேச்சுவாக்கில் காலையில் பிரெயர் முடிந்ததும் நந்தினி மிஸ் அனைவருக்கும் கை கொடுத்ததை மதி சீரியஸாக கூற, அவரின் ஏறுக்கு மாறான குணத்தை எண்ணி அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தார்கள்.


சில நிமிடங்கள் இவர்கள் இப்படியே கதையடித்து கொண்டிருக்க... அப்பொழுது எதெர்சையாக வேருபுறமாக திரும்பிய சபியின் விழிகள் அவளுக்கு நேரெதிரில் இருந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் ஆர்வமாக சிக்கி கொள்ள... மெய்மறந்து ஆனந்த அதித்சியில் உறைந்து போய் நின்றது அவள் பார்வை.... 


அதே நிலை சில நொடிகள் தொடர...., "வாயில ஈ போறதுகூட தெரியாத மாதிரி இந்த லூசு என்னத்த இப்டி பாத்துட்டு இருக்கு??..", என மதியின் காதில் கிசுகிசுத்த ஜீனத் அவளுடன் சேர்ந்தே பின்னால் திரும்பி நோக்க... சபி எதை இவ்வளவு தீவிரமாக பார்க்கிறாள் என்பதை இவர்கள் இருவராலும் சரியாக கணிக்க முடியாததால் சுஜியின் உதவியை நாடினார்கள்.... 


"ஓய் சுஜி... உன் உடன்பிறப்பு எத இப்புடி பாத்துட்டு இருக்கா? ", என மதி கேட்ட பின்னரே சுஜியின் பார்வை சபி நோக்கும் அந்த இடத்தை காண..., கண்ட வேகத்தில் அவள் கண்களும் மின்ன துவங்கியது...., "ஹே.... மை ஹீரோ.... இவரு இங்க எப்போ வந்தாரு.... வாவ்.. இந்த ஸ்கூல்லயே ஜாய்ன் பண்ணிடாரா.... செம்ம செம்ம..... சூஊஊஊஊப்பர்...... ", என வாய்விட்டே தனது இன்ப அதிர்ச்சியை வெளிக்காட்டிட... அவளின் ஹீரோ என்ற சொல்லில் இருவரும் யாரை குறிப்பிட்டு இப்படி ரியாக்ஷன் கொடுக்கிறார் என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.. 


எட்டாம் வகுப்பு படிக்கையில் இருந்து பக்கத்து வீட்டு ஹீரோவான அவனை பற்றி சபியும் சுஜியும் கதையலக்காத நாளே கிடையாது..., "ஸ்மார்ட் பாய்.. கியூட் பாய்... ஹாண்ட்சம்...", என சபியும் சுஜியும் மற்ற ஆறுபேரின் காதை தினம் தினம் பஞ்சராக்கி விடுவார்கள்... ஆனால் அவனை இதுவரை மற்ற யாரும் பார்த்ததில்லை.... இத்தனை நாட்கள் அவன் வேறு ஒரு பள்ளியில் படித்திருக்க... இன்று தங்கள் பள்ளி சீருடையில் தங்களின் கண் முன்னேயே நிற்பதை கண்டு சிலைத்து போய் விட்டார்கள் இருவரும்.


அந்த ஹீரோவை காணும் ஆர்வத்தில் அனைவரும் கொரசாக அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியை நோக்க... அங்கே நிர்ப்பவர்களில் இவர்களின் பார்வைக்கு நான்கைந்து பேர் ஹீரோ போல தான் தோன்றினார்கள்...


"யாரும்பா அது.... கரெக்ட்டா சொல்லு... எங்க இக்காரு அவரு?", என ஆர்வமாக ஹரிணி கேட்க..., "அந்தாஆஆஆ.. பிங்க் கலர் ட்ரெஸ் போட்ட அக்கா கிட்ட பேசிட்டு இருக்காரே.... அவரு தா...", என சுஜி சுட்டி காட்டினாள்...


"ஹே.. ஆமா'ம்பா... செம்ம ஹாண்ட்சம்மா இருக்காரு.... ஒரு இன்றோ குடுக்குறது....", என அவர்களிடம் நக்கலாக கேட்டாள் ஶ்ரீ.... 

இன்ட்ரோ தானே... குடுத்துட்டா போச்சு...", என கூறி சபி மாடியை நோக்கி நடக்க..., "இதெல்லாம் ஒரு போலப்பா?... போங்க லூசுகளா...", என தலையில் அடித்துகொண்டு தன் வகுப்பை நோக்கி நடந்தாள் பில்கி...


பில்கி தனியாக செல்வதை பார்த்துக்கொண்டே மாடியேர வலித்து கொண்டு மதியும் ஜீனத்தை இழுத்துகொண்டு வகுப்பறைக்கு செல்ல..., "போம்பா.... நா போய் மை டார்லிங் கூட பேசனும்...", என மதியின் கரத்தை உதறி விட்டு மற்றவர்களுடன் ஓடி சென்று இணைந்தது கொண்டாள் ஜீனத்...


இவை எதையுமே அறியாத அந்த ஹீரோவான நம் அர்ஜுன், அங்கே இரண்டாவது மாடியில் சாய்மானத்திர்க்காக ஒரு கையை திண்டில் முட்டுகொடுத்தவாறு தனக்கு ஜூனியராக பதினொன்றாம் வகுப்பு பயோ-மாக்ஸ் பிரிவில் இன்றே சேர்ந்திருக்கும் புதிய மாணவியை ராகிங் செய்கிறேன் என்ற பெயரில் அவளிடம் செம்மையாக மொக்கை வாங்கி கொண்டிருந்தான்...


"ஓய் பொண்ணு... பெரியவங்கள மதிக்க தெரியாதா உனக்கு... பேரு கேட்டா பேர சொல்லுனும்.....", அர்ஜுன் அப்பெண்ணிடம் எப்படியாவது பெயரை அறிந்தே ஆகவேண்டும் என மல்லுக்கு நிற்க...., "மரியாத தானே அண்ணா.... ஓகே அண்ணா... மரியாத குடுத்துடுறேன் அண்ணா...... ஆனா பேர தெரிஞ்சுட்டு நீங்க என்ன செய்ய போறீங்க அண்ணா...", என அவள் வார்த்தைக்கு வார்த்தை அண்ணனை அழுத்தமாக உச்சரிக்க.... அவளின் ஒவ்வொரு அண்ணா'விலும் முகம் கடுகடுக்க நின்றான் அர்ஜுன்.


ஓய்... ஒன்னு சீனியர்ன்னு சொல்லு.. இல்ல அர்ஜுன்னு பேரு சொல்லு.... இப்டி ஒரு அழகான பையன அண்ணான்னு சொல்லி இன்சல்ட் பன்ன கூடாது...", என அவன் அதே கடுகடுப்பில் கூற..., "எந்த கேனையன் சொன்னது அப்புடி...", என அவளும் சளைக்காமல் பதிலளித்தாள்... 


"மச்சான் நீ கேனையன்னு அந்த பொண்ணு கரெக்டா கெஸ் பண்ணிட்டா டா...", என அர்ஜுனுக்கு நேரெதிரில் இருந்த டேபிலில் அமர்ந்திருந்த ரக்ஷவன் அவனை கலாய்க்க... அவனுக்கு இரு புறத்திலும் அமர்ந்து கொண்டு வாயை மூடி சிரித்தது கொண்டிருந்தார்கள் தீரா மற்றும் மயூரி..


"மச்சான்... புது புள்ளைங்க கிட்ட இப்டி தா பிரன்ட்ஷிப் வளத்துக்குரணும்.... என்ன பாத்துகத்துக்கோ", என கூறி இவனும் ஐந்து நிமிடமாக அவளின் பெயரை அறிந்து கொள்ள போராடுகிறான்..... அவளோ சிறிதும் வளைந்து கொடுக்காமல் மிடுக்குடன் இவனை வேண்டுமென்றே கலாய்க்கிறாள்.. இதை பார்க்கும் வேடிக்கையாளராக டேபிலில் அமர்ந்தது கொண்டு இருந்தார்கள் அம்மூவரும்... 


"இப்போ பேர சொல்ல முடியுமா முடியாதா??...", என இவன் இறுதியாக கேட்பது போல் கேட்க..., "பேரு தானே ஈவ்னிங் என் அண்ணன் வருவான்... அவன் கிட்ட கேட்டுக்கோங்க... இப்போ எனக்கு ஸ்நாக்ஸ் பசிக்கிது... நா கெண்டீன் போகனும்.... சோ பிளீஸ் மூவ்....", என அவனை ஒதுக்கி விட்டு அவனை தாண்டி நடக்க... அப்பொழுதும் சொரணையே இல்லாமல் தன்னை தாண்டி சில அடி தூரம் சென்றவளை நோக்கி, "ஓய் பிங்கி... கேன்டீன விட தாத்தா கடைல எல்லா ஐட்டமும் நல்லா இருக்கும்... அங்க போ...", என கத்த... திரும்பிப் பார்த்து முறைப்புடன் சிறு சிரிப்பையும் அவனுக்கு கொடுத்து விட்டு சென்றாள் அவள்.... அந்த சிரிப்பிலும் முரைப்பிலும் நட்புக்கான அஸ்த்திவாரம் பொடப்பட்டுவிட்டது என்பது தெல்லந்தேலிவாக புலப்பட்டது.


இவனின் பிங்கி என்ற வார்த்தையில் அவள் அதிர்ந்தாளோ இல்லையோ... எதிரில் இருந்த மூவரும் ஒரு நொடி அவளால் பிரளயம் வந்து விடுமோ என பயந்தது நிஜம் தான்... ஆனால் அவள் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சென்று விட்டாள். டேபிலில் அமர்ந்திருந்தவாரே, "ஏன்டா... இப்டி கூப்புட்ட அந்த புள்ள என்ன நெனப்பா....", என மயூரி கேட்க.., "பின்ன என்ன... பேர சொல்லாம போனா.., அதா அவ போட்டுருந்த ட்ரெஸ் கலர வச்சி கூப்புடேன்.... ரெட் கலர்ல போட்டிருந்தா ரோஸின்னு கூப்புட்டுறுப்பென்... வைட் கலர்ல போட்டிருந்தா ஏஞ்சல்ன்னு கூப்புட்டுறுப்பென்... ப்ளூ கலர்ல போட்டுருந்தா இன்கின்னு கூப்புட்டுறுப்பேன்.... ", என அவன் ஒரு ப்லோவில் போக, "அப்போ மஞ்ச கலர்ல போட்டுருந்தா மங்கின்னு கூப்புட்டுறுப்பியா?", என டைமிங்கில் கௌன்ட்டர் கொடுத்தாள் தீரா... 


அதில் மற்ற இருவரும் சிரிக்க... அர்ஜுன் அவளை முறைக்க... சரியா அதே நேரம், "சீனியர்ர்ர்ர்ர்ர்.... இங்க ஜாய்ன் பண்ணிருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே..?", என கத்தி கொண்டே சபியும் சுஜியும் ஓடி வர... அவளை பின்தொடர்ந்து நம் பத்தாம் வகுப்பு பட்டாளம் ஓடிவந்து இவன் முன் மூச்சிரைக்க நின்றது...


"ஹே... ஹாய் ஜூனியர்ஸ்... எப்டி இருக்கீங்க.... பாத்து ரொம்ப நாள் ஆச்சு... ஊருள இருந்து எப்போ வந்தீங்க... உங்கள நேத்து வர வீட்டு பக்கம் ஆளையே காணோம்....", என அவர்கள் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் இவன் மறு கேள்வி கேட்க..., மற்ற மூவரும் தான்..., "யாரு இந்த வானர கூட்டம்", என்ற ரெஞ்சிர்க்கு அவர்களை குறுகுருவென பார்த்து கொண்டிருந்தார்கள்.


"இன்னைக்கு ஸ்கூல் வரணும்ன்னு சொல்லி நேத்து நைட் எங்கள புடிச்சு இழுத்துட்டு வந்துட்டாங்க சீனியர்... நீங்க எப்போ ஊருள இருந்து வந்தீங்க... எப்போ இங்க ஜாயின் பண்ணீங்க...", என அர்ஜுனுக்கு பதிலளித்த சபி அவனிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்க, "நாங்க வந்து ஒரு வாரம் ஆச்சு மா... வந்ததும் இங்க ஜாயின் பண்ணது தா முதல் வேள..... அப்பரம்... மீட் மை கசின்ஸ்... ரக்ஷவ்.. அவன் தங்கச்சி மயூ... அப்பரம் என்னோட குட்டி பிசாசு தங்கச்சி தீரா...", என மற்ற இருவரையும் சாதாரணமாக அறிமுகம் செய்தவன் தீராவை மட்டும் முடியை பிடித்து இழுத்து அறிமுகம் செய்ய.. எக்கி கொண்டு அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள்.


அப்பொழுதே தொழிகள் கூட்டம் மற்ற மூவரை நோட்டமிட... ஜீனத்தின் மைண்ட் வாய்சில் , "ஹை... இவர விட அவரு அழகா இருக்காரே...", என அர்ஜுனை ரக்ஷவுடன் ஒப்பிட்டு கொண்டிருந்தாள்.

அங்கே தன் தோழிகளை சபி அறிமுகம் செய்து கொண்டிருக்க.. நைசாக அங்கிருந்து நழுவி ரக்ஷவ் அருகே வந்த ஜீனத், "ஹலோ எக்ஸ்கியூஸ் மீ... உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்...", என்கவுமே அனைவரும் அவளை திரும்பிப்பார்க்க... ரக்ஷவ் "என்னா?... என்பது போல் அவளை நோக்க.., "உங்க ஐஸ நா ரொம்ப லவ் பண்ணுறேன்...", என பட்டென கூறிவிட்டாள் ஜீனத்.


பாவம் ரக்ஷவ் தான் திருதிருவென விழிக்க..., "ஏன்மா அவன மட்டும் விட்டுட்ட... அவனையும் லவ் பண்ண. வேண்டியது தானே...", என தீரா கலாய்க்கும் தோரணையில் கூற.. பட்டென இவள் புறமாக திரும்பிய ஜீனத், "தீராக்கா... உங்க ஹேர்ஸ்டைல கூட தா நா லவ் பண்ணுரேன்... அதுக்காக உங்கள லவ் பண்ண முடியுமா... முடியாதுல.... அந்த மாறி தா... நா ரக்ஷவ் சீனியர் கண்ண லவ் பண்ணுரேன்...", என கூறிட... அவள் தோழிகள் தான் தலையில் அடித்து கொண்டார்கள்.


"ஹே ஜீனத்து.... நீ அப்பப்ப இப்டியா இல்ல எப்பவுமே இப்டியா?... அப்டின்னு சீனியர்ஸ் அந்த அண்ணன் நெனச்சுக்க போறாங்க...", என ஶ்ரீ அவளை தலையில் தட்ட..., "அம்பா... இது மானுஃபக்சர் டிஃபேக்ட்... போறந்ததுல இருந்தே இப்டி தா இருக்கும்...", என அவள் நட்புகளே அவள் காலை வாரி விட்டார்கள்... 


அதற்க்கு அவள் பல்லை காட்ட..., "அண்ணா... நீங்க எதையும் நெனச்சுக்காதீங்க.... இவ அழகா இருக்குன்னு சொல்லுறதுக்கு பதிலா இப்டி தா சொல்லுவா..", என சுஜி அவனுக்கு விளக்கம் அளிக்க... நானும் உனக்கு சலச்சவன் இல்ல.. என்பது போல் , "ஹாஹா.. அப்போ நானும் ஒன்னு சொல்லணும் என ஜீனத்தை நோக்கியவன், "உன் வாய்ஸ நா ரொம்ப லவ் பண்ணுறேன்...", என கண்ணடித்து கூற..., "ஹையோ.. எனக்கு வெக்கம் வெக்கமா வருதே...", என முகத்தை மூடி கொண்டாள் அவள்... ஒரே சந்திப்பில் இவர்கள் அனைவரும் சகஜமாக நன்றாகவே பழகி விட்டார்கள்...


சற்று நேரத்திலேயே ப்ரேக் முடியும் மணி அடிக்க.... கூட்டத்தை கலைத்து அவரவர் வகுப்பை நோக்கி அனைவரும் நகர்ந்தார்கள்... மாடி படியை நோக்கி நடந்த சபி ஏதோ யோசனையில் மீண்டும் அர்ஜுனிடம் வந்து, "சீனியர்.. ஒன்னு சொல்லணும்... ரகசியம்....", என கூறி தாரா பில்க்கிக்காக தாங்கள் போட்ட திட்டத்தை அவனிடம் கூறி விட்டு ஓட... அடி கேடி... என்ற மைண்ட் வாய்சுடன் அவள் ஓடுவதை பார்த்து புன்னகைத்தவன் மற்ற மூவரையும் இழுத்து கொண்டு தத்தம் வகுப்பை நோக்கி சென்றான்.


             *******

விரைவாகவே மற்ற இரு வகுப்புகளும் முடிவடைய மீண்டும் உணவு வேளையில் இரு அணிகளும் அதே மரத்தடியில் ஒன்றிணைந்தது... இப்பொழுது நம் பன்னிரெண்டாம் வகுப்பு நட்புகளும் இவர்களுடன் இணைந்து கொள்ள... புதிதாக அர்ஜுனின் தோழன் நவீன் மற்றும் தீராவின் தோழி லாவண்யாவும் இணைந்தது கொண்டார்கள்.


அவர்கள் அரட்டை அடித்தபடியே உணவை உண்டு கொண்டிருக்க...., பரந்து விரிந்திருந்த அந்த பள்ளி மைதானத்தை நாலைந்து பேர் அளந்து கொண்டிருந்தார்கள்..., அதை முதன்முதலில் பார்த்த ஹரிணி ...., "என்ன'ம்பா... நம்ம கிரவுண்ட அலக்குறாங்க.... புது பில்டிங் ஏதாச்சு வரப்போகுதா....?" , என்று கேட்க.. "இருக்கலாம்... இருக்கலாம்..." , என்று கூறியவாரே உணவில் கவனத்தை பறித்தனர். அதுதானே அதி முக்கிய காரியம்.... உணவிற்கு பின்பு தான் அவர்களுக்கு மற்ற எந்த வேலையானாலும் நடக்கும்... 


உணவை உண்டு முடித்தபின்பு பில்கியும் தாராவும் , தன் தோழிகளால் பிரேக்கில் கொடுக்காப்பட்ட லிஸ்ட்டை பர்ச்சேஸ் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்..., மேலும் புதிதாக வந்திருக்கும் மூத்த நட்புகளிடம் அவர்களுக்கு பிடித்தமான மிட்டாய் வகையை லிஸ்ட் எடுக்க... ஆளாளுக்கு ஒவ்வொன்று கூறிய பொழுது எனக்கு ஒரு சரம் லாலிபாப் என தீரா கூறியதற்கு, "என்னக்கா நீங்க மட்டும் புது ரகமா இருக்கீங்க...", என சிரித்து விட்டு தங்களின் பர்ச்சேசுக்கு சென்றார்கள்.


அவர்கள் கேட்டை தாண்டும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ... கேட்டை தாண்டிய மருநோடி... சபியின் பக்கம் திரும்பியவள்..., "சபி... காலையில போட்ட பிளான் பக்கா தானே.... கரெக்டா முடிச்சுருவ தானே?", என்று சந்தேகமாய் கேட்க , "நோ பிராப்ளம்'ம்பா சிறப்பா செஞ்சிடலாம்... இன்னிக்கு ஈவினிங் அவங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டில பர்த்டே பார்ட்டி", என்று கூற... "ஆனாலும் மிஸ்ஸையே ஏமாத்த பாக்குறீங்க பாரு... யூ ஆர் கிரேட்..", என சீரியஸாக கைதட்டினான் அர்ஜுன். அதற்க்கு அவர்கள் பல்லை காட்டினார்கள்.


"ஏன்மா., கேக் வாங்கி சர்பிரைசா கிலாஸ்லயே வெட்டலாம்ல ... ஏன் இந்த ரிஸ்க்....", என அக்கறையுடன் லாவண்யா கேட்டதற்கு..., "கிலாஸ்லயா.... ஐயையோ....", என கொரசாக அபாய குரல் எழுப்பினார்கள் அவர்கள்... "ஏன்... அதுள என்ன பிரச்சன...." என குழப்பமாக நவீன் கேட்டதற்கு, அனைவரும் சேர்ந்து விளக்கம் கொடுத்தார்கள்.


"அய்யோஅண்ணா... அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க... எய்ட்த் படிக்கும் போது அப்டி தா செஞ்சோம்... ஆனா ஃபோர்ட் நாளே செம்ம ஆப்பு... யார கேட்டு கிளாஸ்ல கேக் கட் பண்ணீங்கன்னு மிஸ் பேரெண்ட்ஸ கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க... அதனால போன தடவ பீஸ் கேக் தா வாங்கி வெட்னோம் ... அதுஅந்த லீடர் பைத்தியத்துக்கு என்ன செஞ்சுச்சோ... போய் மிஸ் கிட்ட போட்டு குடுத்துறுச்சு.... அதனால தா இந்த தடவ வீட்டுல பிலான்", என சோகமாக கூறி முடிக்க.... அனைவரும் இவர்களின் கேடி தனத்தில் வாய்விட்டுச் சிரித்து கொண்டே அவர்களின் திட்டத்தை அமோதிப்பதாக தலையசைத்து வைத்தார்கள்...


சிறிது நேரத்தில் கவர் நிறைய வித விதமான சாக்லேட்டுகளுடன் பில்கியும் தாராவும் வர, அடித்துப் பிடித்துக் கொண்டு தங்களுக்கான சாக்லேட்டை எடுத்து அதன் முதல் பீசை, பில்கிகும் தாராவிற்கும் ஊட்டிவிட்டு மற்ற பீசை ஒவ்வொருவருக்கும் ஊடிவிட்டு தாங்களும் உன்ன தொடங்கினார்கள்..


இப்படியே மாற்றி மாற்றி ஊட்டிவிட்டு, வகுப்பில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேசி விளையாடிக் கொண்டிருக்க... லஞ்ச் பிரேக் முடியும் பெல் அடித்தது... அதை செவிசாய்த்தவர்கள், தங்களின் சாப்பாட்டு பைகளை எடுத்துக் கொண்டு... ஒருவருக்கு ஒருவர் பாய் சொல்லிவிட்டு, அவரவர் வகுப்பை நோக்கி நடையை கட்டினார்கள்...


மதியம் முதல் பாட வேலை ஆரம்பித்தது... மதியவேளை அட்டெண்டன்ஸ் போட்டு அரை மணி நேரம் கடந்திருக்கும்... 10A கிளாஸில் இருந்து ஒரு மாணவி, 10B கிளாசுக்கு வந்து சுஜினாவை அவர்களின் வகுப்பு ஆசிரியர் அழைப்பதாக கூறி அழைத்துச் சென்றாள்.


அவளின் பின்னே சென்ற சுஜினா, 10A கிளாஸை அடைந்ததும் முகத்தில் பேரதிர்ச்சியை காட்ட.... அவளின் கண்கள் முன், அவனின் சகோதரியான சபீனா கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் முகத்துடன், வலியில் தரையில் படுத்து உருண்டு கொண்டிருந்தாள்.


A கிலாசிர்க்கு சென்ற சுஜினா, தன் சகோதரியின் அந்த நிலையை கண்டு பதறியவள், ஓடி சென்று அவளருகில் அமர்ந்தவள், "சபி.... சபி என்னாச்சு சபி.. ஏன் இப்டி உருண்டுகுட்டு கிடக்குற என அந்த நேரத்தில் கூட அவளை கலாய்க்க.... சற்று உருள்வதை நிறுத்தி விட்டு அவளை முறைக்க... "சபி கண்டின்யு... கண்டு புடிச்சுற போறாங்க... ", என சுஜி கண்ணாலேயே கூற... மீண்டும் உருள தொடங்கினாள் அவள்.


"சுஜினா... உன் சிஸ்டருக்கு எதாச்சும் பிராப்ளம் இருக்கா... வயிறு வலிக்குதுன்னு இப்டி உருளுறா... ", என கௌசல்யா மிஸ் முகத்தில் படபடப்புடன் கேட்க... மொத்த வகுப்புமே தன்னை கவனிப்பதை கூட பொருட்படுத்தாமல் அமோகமாக நடித்துக் கொண்டிருந்தாள் சபி.


"ஆமா மிஸ் அவளுக்கு அல்சர்... இப்டி அடிக்கடி ஆகும்..", என இவளும் அதே படபடப்புடன் கூற... "சரி மா... உங்க வீடு பக்கத்துல தா இருக்கு... இவள கூட்டிட்டு கிளம்பு... உங்க கிளாஸ்மிஸ் கிட்ட நா சொல்லிக்கிறேன்... ", என அவர்களை கிளப்பி விட.... "இதற்கு தானே ஆசை பட்டோம்...", என உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவர்கள் வெளியில் பாவமாக முகத்தை வைத்து கோண்டு தங்கள் வீட்டை நோக்கி உற்சாகமாக நடையை காட்டினார்கள்.


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪



Rate this content
Log in

Similar tamil story from Comedy