வருவாயா
வருவாயா
1 min
392
வருவாய் நீ என்று
தினமும் காத்திருந்து காத்திருந்து
ஒரு திங்கள் சென்றதே!
திங்கள் செவ்வாய் புதன் என்றும்
வியாழன் வெள்ளி சனி என்றும்
ஒவ்வொரு நாளாய் சென்றாலும்
நீ வரவில்லை
என் கைபேசிக்கு
வந்தாய் என்ற செய்தியும் இல்லை
கைகுத்திய அரிசிக்கு
சம்பளமாய் பிடி அரிசி வாங்கிய
காலம் கூட இத்தனை காத்திருத்தல்
நிச்சயமாய் இருந்தது இல்லை
கணினியும் கைபேசியும்
வாழ்க்கை முறையினை மாற்றினாலும்
மாறாமல் இருப்பது நம் தலைவிதி தானோ!