துயரம்
துயரம்


ஒருவருடனான
உறவு முறிந்தபிறகு
கொஞ்சகாலமாவது
துக்க காலம் தேவை
உறவு முறிந்த மறுநாளே
'ஒரு உறவில் இருக்கிறேன்' என
நிலைத்தகவலை மாற்றுகிறோம்
ஒரு உறவு இல்லாமல்போகும்போது ஏன் இவ்வளவு தாழ்வுணர்ச்சி அடைகிறோம்!!
தனக்கு எந்த இழப்பும் இல்லை என நம்பவைக்க
ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறோம்?
மேலும் யாருடன் முறித்துக்கொண்டோமோ அவர் காயப்படவேண்டும் என்பதற்காக மட்டுமே இன்னொருவரை நேசிக்கிறோம்
அல்லது
நேசிப்பதாக பாவனை செய்கிறோம் என்பது
அன்பைப் பற்றிய எத்தகைய துயரம்!!!