STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

தாலாட்டுப் பாடல்

தாலாட்டுப் பாடல்

1 min
365

கண்ணுறங்கு………. கண்ணுறங்கு…………

கண்மணியே நீ உறங்கு

பொன்மகளே நீ உறங்கு

பூமகளே நீ உறங்கு….. பூமகளே நீ உறங்கு.

செல்லச்சிட்டு நீ உறங்கு

செல்லமணி நீ உறங்கு

சுட்டிப் பெண்ணே நீ உறங்கு

சுட்டித்தனம் ஓய்ந்துறங்கு…. உன்

சுட்டித்தனம் ஓய்ந்துறங்கு

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ 


கையில் சிலம்பு கொண்டு கண்ணகியும் வந்தாளே

 தமிழ் சீவகசிந்தாமணி சீருடன் வந்தாளே

தங்க கைகளுக்கு வளையாபதி உண்டு

கொடி யிடை மாட்டத்தான் மணிமேகலை உண்டே 

மணிமேகலை உண்டே

மொட்டை அடித்து காது குத்த தாய்மொமன் வந்தாரே

தரணிபுகழ் குண்டலகேசி மாட்டி மகிழ்ந்தாரே…. மாட்டி மகிழ்ந்தாரே

செந்தமிழே நீ உறங்கு

வண்டமிழே நீ உறங்கு

முத்தமிழே நீ உறங்கு

பைந்தமிழே நீ உறங்கு…..பைந்தமிழே நீஉறங்கு 

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ.



Rate this content
Log in

Similar tamil poem from Classics