ஒரு மரத்தின் சோக காதல் கவிதை
ஒரு மரத்தின் சோக காதல் கவிதை


உமது காதலின் உன்னதம் சொல்ல
எம்மைக் காயப்படுத்தவும் வேண்டுமோ ?
கீறினீர் .... காயப்படுத்தினீர் ....
கூர் ஆயுதம் கொண்டே
எம் மேற் தோல் பட்டைகளை சிதைத்தீர் !
புண்பட்ட என் மேனியில்
இதயம் வரைந்து கூர் அம்பும் துளைத்தீர் !
உங்கள் காதலுக்கு அடையாளமாய்
நான் பச்சை குத்திக் கொண்டேன் !
உமது காதல் காலம் கடந்தும் நிலைத்ததோ -
யாமறியேன் பராபரமே !
ஆனால் -
நீவிர் ஏற்படுத்திய காயமும்
காயம் தந்த வடுக்களும்
என்மேல் நிலைத்து விட்டதே !
கண்ணீருடன் தன் சோகம் தனை
இயம்புகிறது - ஓர் மரம் !