நாம்
நாம்


இந்த அதிகாலை மழை
பெரிதாக வேண்டும்
இன்னும் பெரிதாக
இந்த நாள் முழுக்கபெய்ய வேண்டும்
இந்த வாரம் முழுக்க பெய்ய வேண்டும்
இந்த மாதம் முழுக்க பெய்யவேண்டும்
இந்த மழைக்காலத்தையும் தாண்டி
பெய்யவேண்டும்
நாம் வேறு எதைப்பற்றியும்
சிந்திக்கக்கூடாது
மழையப்பற்றியே சிந்திக்கவேண்டும்
வேறு எந்த சப்தமும் காதில் விழக்கூடாது
மழைச்சத்தம் மட்டுமே கேட்கட்டும்
வேறு எந்தக் காதலும் தகிக்க வேண்டாம்
மழைநேரத்து காமம் மட்டுமே நிரம்பட்டும்
எவ்வளவு மழை பெய்தும்
நெஞ்சில் எரியும் துயரத்தின் தழல்
தணியவில்லையே என்கிறாய்
அன்பே
மழையில் நனைந்தபடி
கிளைகளில் அமர்ந்திருக்கும்
காகங்களெனெ நாமும் இருந்திருக்கலாம்
இப்போதுபார்
எவ்வளவு மழை பெய்தும்
நாம் கொஞ்சம்கூட நனையவே இல்லை