என் காதல்
என் காதல்
என் காதல்
கால் நனைக்க அஞ்சும்
பேரலைகளின் கடல்
நான் உனக்குக் காட்டுவது
ஒரு கண்ணாடி கிளாஸில்
பாதியளவு தண்ணீர்
இந்தப்பிரியத்தை
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி
உறவு கலவாமல்
இன்னும் எத்தனை காலம்
அழிவேன்?
தொலைபேசியில் அழைக்கவேண்டி அழைக்காமலே இருந்துவிடுகிறேன்
சொல்லவேண்டிய ஒன்றை சொல்லாமலேயே இருந்துவிடுகிறேன்
நிரூபிக்க வேண்டிய ஒன்றை நிரூபிக்கமலேயே இருந்துவிடுகிறேன்
காட்டவேண்டிய ஒரு காதலை காட்டாமலேயே இருந்துவிடுகிறேன்
சில பிரியங்கள்
வெறும் நினைப்புகளாகவே இருந்து அதன் மகத்துவம் கெடாமல்
மறைந்துபோகட்டும்