நிலா காதலன்
நிலா காதலன்


பால் போன்ற குளிர்ந்த கதிர்களால்
என்னை காதல் நீராட்டும்
நிலவு எனும் காதலிக்கு
இந்த காதலனின்
கவிதை முத்தம் இது.
கண் சிமிட்டும் நட்சத்திரங்களின்
வெள்ளை நிற பிரதிபலிப்புகள்
இரவு என்னும் காரிருள் போர்வையில்
தினமும் என்னை பார்த்திட
உன் பார்வை மட்டும் ஏனோ
என் மீது என்றும் இல்லை.
தேடுவது என்றும் கைகளிலிருந்து
நெடு தூரம் செல்வது தான்
காலம் எனக்குத் தந்த தண்டனையா?
பிரிவுகளின் இயக்கத்தினில்
துடிக்க மறந்த இதயத்தின்
எங்கோ ஒரு மூலையினில்
உன் பெயர் ஒலித்திட வேண்டும்.
மெல்ல துயில் கலைந்திட
விடிந்திடும் இரவிற்காக
காத்திருக்கும் இந்த நிலவின்
காதலனாய் நான்
இருளில் மறைந்து கண்சிமிட்டும்
நட்சத்திரக் குவியலுக்குள்
மறைந்து சிரிக்கும் பாவையாய் நீ