நீராக....
நீராக....


என் உயிருக்கு புத்துணர்வு
தந்திடும் நீராக நீ!
உணர்வுகளின் நீரோட்டத்தில்
சிவப்பு அணுக்களின்
அசைவுகளில் நம் காதல்!
நினைவுகளில் என்றும் நீயென
என் மூளைத் திசுக்களுக்கு
என்றும் ஞபாகப்படுத்திடும்
உயிரின் பிம்பமாக
உன் அன்பெனும் நீரினை
நான் தாகத்துடன் பருகிட
தேவை எனக்கு இன்று
உன் இதழ் மலர்ந்த
புன்னகையுடன வரும்
மனமொத்த சம்மதமே!