மிதமாக....
மிதமாக....

1 min

23.6K
காதோர குழல்களைத் தழுவிடும்
காலை நேர குளிர் காற்றாக நீ!
என் கனவுகளில் மிதமான
வெம்மையுடன் படர்ந்திடும்
உன் எண்ணங்களின்
அரவணைப்பினிலிருந்து
மீண்டு வர இயலாத
சுகமான மாலை நேரத்தின்
மயக்கத்திலிருந்து விடுவிக்க
என்று நீ வருவாயோ என்னிடத்தில்!