STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

கருப்பு மயில்

கருப்பு மயில்

1 min
244

கொல்லி மலை வெண்தாமரை குளத்தில்!
அல்லி மலர் மலர்ந்திருப்பதை!
சொல்லிச்சொல்லி ரசித்துக் கண்டிருக்கிறேன்!


ஆனால் இன்றோ கோயிலில் காண்கிறேன்!
அனல் வீசும் ஓர் அழகிய அல்லி மலரை!
அதிகமான மழைநீரில் நனைந்தபடி! 


இது என்ன ஆச்சரியம்?
இது யார் செய்த கோளம்?
இந்தச்சாலையில் மழை பெய்து கொண்டிருக்க!
இருட்டில் நனைந்தபடி வருகிறதே! அழகிய அல்லி மலர்!


அல்லி மலரை நீர் நெருங்காதே?
அந்தக் கருத்தில் என் சந்தேகம் உதிக்க!
அல்லி மலரின் அருகில் சென்று பார்க்கிறேன்! 
அமைதியாக அருகில் சென்றபோதுதான் தெரிந்தது! 
அடடே! இது கருப்பு மயிலல்லவா?


அந்தக் கருப்பு மயில் அமைதியாக!
அந்த மழைச் சாரலை ரசித்தபடி பார்த்திருக்க!
அந்தக் கருப்பு மயிலிடம் கேட்கிறேன்?
அந்தச் சாரல் மழையைக் கொண்டு வந்தது நீதனா?


இந்த மயிலின் மனம் வேண்டி வந்ததோ! இந்த மழை?
எந்தன் கேள்விக்குக்  கருப்பு மயிலிடம் பதிலில்லை! 
அந்தக் கேள்விக்குப் பதிலாகத் தன் புன்னகையில்!
செந்தமிழால் பதிலளித்தாள்!


அடடா ஆச்சரியம் அடைந்து போனேனே! 
விடாத மழையா அழகு! பாடாத மயிலோ அழகு! 
சொட்டச் சொட்ட மழையில் கருப்பு மயில் நனைவது அதைவிட அழகு!
தொடர்ச்சியான செயலுக்கு நான் யாருக்கு நன்றி சொல்ல! 


அடை மழைக்கா?
அடர்த்த கருங்கூந்தலைக் கொண்ட கருப்பு மயிலுக்கா?


Rate this content
Log in

Similar tamil poem from Romance