STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

கொண்டாடுவோம் நவராத்திரி

கொண்டாடுவோம் நவராத்திரி

1 min
319

தொடரும் வாழ்க்கைப் பயணம்

மயில் அகவல் கேட்க விடிந்தது காலை

இன்று எனக்கு எழுபது

எண்ணி வியக்கும் வயது

உயிர் உடல் ஒப்பந்தம் முடியவில்லை

ஐம் பூதங்களும் பங்கைப் பிரிக்க வரவில்லை

படிப்பு, பட்டம், பதக்கம்

அன்பு, ஆசை, நிராசை

சுகம், துக்கம், என அனுபவங்கள் ஏராளம்

பெற்றோர் பெரியோர்கள் நல்லாசியாலும்,

இளையோர்கள் ஆதரவாலும்,

பெற்ற பிள்ளைகள் பாசத்தாலும்

தொடரும் வாழ்க்கைப் பயணம்

கறுப்பு வெள்ளை பார்ப்பதில்லை;

கல்விக் கடவுளை மறப்பதில்லை.

கனிவான பாடல்கள் பாடியே தான்

களிப்புற்று கொண்டாடலாம் நவராத்திரியே!


Rate this content
Log in

Similar tamil poem from Classics