காதல் உலகம் .... இரண்டாம் உலகம்
காதல் உலகம் .... இரண்டாம் உலகம்
அன்பின் விசையால் மட்டுமே இயங்கிடும் காதல் உலகம்
கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த இரண்டாம் உலகம்
காதலர்கள் மட்டுமே இணைந்து படைத்திடும் தனி உலகம்..
மற்றோரின் புரிதலுக்கு வாய்ப்பே இல்லாத உன்னத உலகம்..
காதலர்கள் மட்டுமே கைகோர்த்து தோளோடு தோள் உரசி
உல்லாச உலகத்தில் காதல்வானில் தொட்டில் கட்டி ஊஞ்சலாடி
மணிக்கணக்கில் காதலர்க்ள் பேசிய மறைபொருள் வெள்ளைத்தாளில்
வெள்ளையுள்ளங்கள் வரைந்த வெள்ளை ஓவியம் காதல் காவியம்..
இருவிழிகள் காதல் மொழி பேசிட..அவை பரப்பும் ஒளிவழி செய்தியை
மறு இருவிழிகளும் புரிந்திடும் திறமே காதலில் புரிதலின் அழகு..
காதலில் இதுவரையிலும் நாவரிந்த அறுசுவைகளையும் தாண்டி
ஏழாம் சுவையை இரு இதழ்கள் பறிமாற இரு இதழ்கள் புசிக்கும்..
எதிர்பார்ப்பு எதுவுமின்றி காதலிக்க வாய்ப்பே இல்லை..
எதிர்பார்த்து காதலித்தல் காதல் உறவில் அறமுமில்லை..
இதனை புரிந்து ஏற்று மலரும் காதல் என்றும் வீழ்வதில்லை..
காதலை காதலிப்போம்.. காதல் நம்மை காதலிக்கும்..

