சுற்றுலா வந்தோம்
சுற்றுலா வந்தோம்
புவியென்னும் சுற்றுலா தளத்தை
கண்டு ரசிக்க விசா பெற்று
வந்த பயணியர் நாம்!
செல்ல வேண்டிய இடம்...
செய்ய வேண்டிய வேலை....
ஒப்பார் குழுவை தப்பாமல் கணித்து...
விசா கொடுத்தவன் இறைவன்!
நம்மை இங்கு கொண்டு வந்த ஏஜெண்டுகள் தாய் தந்தையர்!
விசா முடிவடையும் நேரம்
ஓலை கொண்டு வருபவன் யமன்!
அதுவரை இட்ட பணியை....
தட்டாமல்.... தப்பில்லாமல் செய்வோம்!