சொல்லடி என் மானே!
சொல்லடி என் மானே!


தேன் கூட்டிலும் தேன் தீர்ந்து போகும் உன் இதழில் தீராமல் இருப்பது ஏனோ..
உந்தன் திருமேனியில் திகட்டாதவை பல இருந்தும் உன் இடையில் என்னை துளைத்தது ஏனோ..
உன் கூந்தல் சூடிய ரோஜாவிடம் யாசித்தேன் வர்ணிக்க வார்த்தை வேண்டி ஆனால் உந்தன் கூந்தலின் அழகில் மயங்கி வாடி விழுந்தது ஏனோ..
உன் இதழில் இதழ் கோர்க்கும் நேரத்தில் எந்தன் இருதயத்தை இழந்தது ஏனோ...
சொல்லடி என் மானே....