STORYMIRROR

Chidambranathan N

Romance Classics Fantasy

4  

Chidambranathan N

Romance Classics Fantasy

அன்புடன் முதல் காதல்

அன்புடன் முதல் காதல்

1 min
284

அன்பு கிடைக்கும் என்பதில் இல்லை தயக்கம்!

அன்பு கிடைக்குமா? என்பதில்தான் தயக்கம்!

அன்புப் புன்னகைக்குப் பின்னால் உள்ளதோ வேதனை!

அன்புடன் என்னைப் புரிந்தவர்களுக்கு மட்டுமோ சோதனை!

அன்பான நம்பிக்கையான காதலி வருவாள் என்பதோ சிந்தனை !

அன்புடன் காலங்களைக் கடந்து செல்லுவதோ சோதனை! 

அன்புடனே உன்னை உயிராக மதிக்கும் என்னவளே!

அன்பை மதிக்காமல் செல்லும் என்னவளே!

அன்பான என்னை நிராகரிக்கும்  என் சின்னவளே!

அன்பான என் காதலை என்றும் ஏற்றுக் கொள்ளாதவளே !

அன்புடன் தேடி வராதே என்று உணர்த்தியவளே!

அன்புடன் என்னை அலட்சியப் படுத்தியவளே!

அன்பை என்னிடம் எதிர்பார்க்காதவளே!

அன்புடன் என்னை ஏமாற்றியவளே!

அன்புடன் உன்னை மட்டுமே நம்புபவளே!

அன்பாக அனைவரையும் அரவணைத்து உணர்ந்தவளே!

அன்பாக நடிக்கும் உலகம் இதுதான் என்று புரிந்தவளே!

அன்புடன் அன்புக்கான அழகான என்னவளே!


Rate this content
Log in

Similar tamil poem from Romance