Siva Kumar

Tragedy Inspirational

5  

Siva Kumar

Tragedy Inspirational

உயிர்கொல்லி

உயிர்கொல்லி

4 mins
435


கரிசல் பட்டு ஒருசிரிய குக்கிராமம், அங்கு ஒரு அழகான விவசாய குடும்பத்தில் ராகவனுக்கும்,செண்பகத்திற்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன்,மூத்தவள் மலர்கொடி கல்யாணம் முடிந்து கணவனுடன் ஒரே ஊரில் அவர்களது தோட்டத்து வீட்டில் வசிக்கிறாள்,இளையவள் கண்மணி கல்யாணம் முடிந்து பக்கத்து ஊரில் கணவருடன் வசிக்கிறாள் ,மகன் குமரன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான் சரியாக படிப்பு வரவில்லை நான் ஸ்கூல் போகமாட்டேன் என பல முறை அடம்பிடித்தும்,ராகவன் இந்த பத்தாவது மட்டு்ம் போ பிறகு தோட்டத்தில் வந்து எனக்கு உதவியாக இரு என்றார்,சரி என்று அவனும் பல்லைக்கடித்து போய் கொண்டிருக்கிறான், இன்னும் இரண்டு நாளில் பத்தாவது பொதுத்தேர்வு அது முடிந்ததும் ஜாலிதான் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான்,பரீட்சையும் முடிந்தது,குமரன் தோட்டத்தில் போய் ராகவனுக்கு உதவாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்,வேண்டாத நண்பர்களுடன் சேர்ந்து சிகரட்பிடிப்பது போன்ற சின்ன சின்ன தவறுகளை செய்து கொண்டிருந்தான்,பரீட்சை முடிவு வந்தது இரண்டு சப்ஜக்ட்டில் பெயில் ஆகி இருந்தான் ராகவன் எவ்வளவோ சொல்லியும் டுடோரியல் போய் அந்த இரண்டு சப்ஜக்ட்டையும் எழுத மறுத்து விட்டான்,சும்மா சுற்றிக் கொண்டிருந்தால் கெட்டுவிடுவான் என்று சரி அப்பாக்கு உதவாட்டியும் பறவாயில்ல எதாவது வேலைக்கு போய் தொழில் கத்துக்க அப்பதான் நாலுகாசு சம்பாதித்து குடும்பம் குட்டினு வாழமுடியும் என்றார்,அவர் அப்படிச் சொன்னது தப்பாய் முடிந்து கேவலப்படுத்தும் என்று அப்போது தெரியவில்லை. வேறு வழியில்லாமல் குமரன் தன் நண்பன் ஒருவன் லாரியில் கிளீனராய் போவதாயும் ,அவன் முதலாளி தனக்குள்ள மற்றொரு வண்டிக்கு ஒரு பையன் வேண்டும் யாராவது தெரிந்த பையன் இருந்தா கூட்டிவரச்சொன்னார் என்று சொல்ல ,அவனுடன் சென்று லாரியில் கிளீனராக ஓடினான் .சென்னை டிரிப்பாதலால் வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவான்.சென்னை போய் வந்தவரை நன்றாகத்தான் இருந்தது,காலங்கள் ஓடின லாரியில் போய் போய் டிரைவிங்கும் பழகிக்கொண்டான்,லைசன்சும் கெவி எடுத்துவிட்டான்,இனி இந்த வண்டியிலேயே ஒடினால் சம்பளம் கிடைக்காது என்று பாம்பே டு சென்னை,கல்கத்தா டு சென்னை என்ற அதர் ஸ்டேட் வண்டியில் ஓட்ட கிடைத்த சான்சை கெட்டியாக பிடித்த குமரன் சம்பளம் கூடி கையில் காசு வந்ததும் குடிப்பது,கான்ஸ் போடுவது என கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானன் ,கெட்ட நண்பர்களின் வற்புறுத்தலால் பெண் சகவாசமும் ஏற்பட்டது அது அவன் வாழ்க்கையையே முடிக்கும் என அவன் அப்போது நினைக்க வில்லை லாரி ஓட்டுனர்,மற்றும் கிளீனர் நண்பர்களோடு மும்பையில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியான காமாத்திபுரா,கல்கத்தாவிலுள்ள சிகப்பு விளக்கு பகுதியான சோனாங்காட்சி போன்ற இடங்களுக்கும் சென்று தன் இளமையை கொட்டிய குமரன் தன் இளமையே முடிந்துவிடும் என அப்போது நினைக்க வில்லை ,பதினைந்து நாள் டிரிப்பாதலால் மாதம் ஒரு முறைதான் வீட்டுக்கு வந்தான் ,வீட்டுக்கு அக்காக்களின் குடும்பத்திக்கும் அப்பா,அம்மாவுக்கும் பரிசுப்பொருட்கள்,உடைகள் என வாங்கிவர தவறுவது இல்லை , மகன்கைநிறைய சம்பாதிக்கிறான் பொருப்பானவனாக மாறிவிட்டான் என நினைத்த ராகவன் செண்பகத்திடம் மகனுக்கு ஒரு நல்ல குடும்பத்தில் பெண் எடுத்து கட்டிவைக்கவேண்டும் அற்கான வேலையை தொடங்க வேண்டும் அதற்கு செண்பகம் எங்க தம்பி பொண்னையே பார்கலாம் அவளும் பத்தாவது முடித்து அவர்கள் தோட்டத்திலே விவசாய வேலைகளை கவனிக்கிறா இங்க வந்தா நமக்கும் உதவியாா இருக்கும் என்றாள்,ராகவனும் ஆகட்டும் எதுக்கும் குமரன ஒரு வார்த்தை கேட்கலாம் இந்தகால பயங்க மனசுல என்ன இருக்கோ தெரியாது என்றான் ,செண்பகமும் சரிதாங்க என ஆமோதித்தால் அதற்கிடையில் குமரனுக்கு உடம்பு அடிக்கடி சரியில்லாமல் போனது அருகில் உள்ள மருத்துவமணையில் டிரீட் மெண்ட் எடுத்தும் குணமாகவில்லை உடல்வேறு மெலிந்து கொண்டே வந்தது ,டாக்டரின் அறிவுருத்தலின் பேரில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு இரத்தபரிசோதனை செய்த போதுதான் அந்த இடி விழுந்தது,டாக்டர் ராகவனையும் செண்பகத்தையும் அழைத்து குமரனது இரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதாயும்,சென்னையில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இரத்த மாதிரியை கொடுத்து உறுதி படுத்தவும்,உறுதியானால் ஆதற்கான டிரீட்மெண்ட்டை இங்கேயே எடுத்துக்கலாம் எனவும் கூறி ஒரு கடித்தை கொடுத்தார் டாக்டர், இருவரும் வௌவௌத்து போனார்கள் இருக்கும் ஒரே பையனின் வாழ்வில் விதி விளையாடி விட்டதே ,என புலம்பினர்,அவர்களுக்கு தெரியாது விதி விளையாடவில்லை குமரன்தான் கூடா நட்பு கூட சேர்ந்து விளையாடினான் அது விதியாக விடிந்திருக்கிறது இப்போது என்று அவனைத்திட்டவும் முடியவில்லை வெளியில் தெரிந்தால் மானமே போய்விடுமே ,உலகமே இருண்டது போல் தோன்றியது அவர்களுக்கு, சரி குமரனிடம் கூறவேண்டாம் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்று டெஸ்ட் முடிவு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றான் ராகவன்,ஒருவாரு குமரனைசமாளித்து சென்னை அழைத்துச் சென்றனர் குமரனுக்கு அப்போதே புரிய ஆரம்பித்தது அவனும் பேப்பரில் எல்லாம் படித்திருக்கிறான் அல்லவா, சென்னை எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் கொடுத்த கடிதத்தை கொடுத்து குமரனிடம் இருந்து இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக கொடுத்து முடிவுகளுக்காக காத்திருந்தனர்,


அப்போது மலர்கொடியிடமிருந்தும், கண்மணியிட மிருந்தும் மாறி,மாறி போன் அழைப்புகள் எங்க கிட்ட கூட சொல்லாமா எங்க போனீங்க அப்படி குமரனுக்கு என்ன ஆச்சு என்று கேள்வியால் துளைத்தெடுத்தனர்,இரத்தம் டெஸ்டுக்காக கொடுத்திருப்பதாகவும் முடிவுகளை வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்ததும் விளக்கமாக கூறுவதாகவும் சொல்லி போனை வைத்தான் ராகவன்.முடிவுகள் வந்தது பரிசோதனையில் குமரனுக்கு எய்ட்ஸ் என்பது உறுதியானது ,அங்கிருந்த டாக்டர் இதற்கு ஒழுங்காக டிரீட்மெண்ட் எடுப்பதும்,மருந்துகளை உட்கொள்ளுவதும்,அவரை ஒதுக்கி வைக்காமல் ஆதரவோடு நல்ல சத்தான ஆகாரங்களை கொடுப்பதும் ,அவரை இருக்கும வரை சந்தோஷமாக வைத்திருப்பதுமே நமது கடமை,அவருக்கான வாழ்வை தள்ளிப்போடலாமே தவிர பிடித்து வைக்க முடியாது என்று தெளிவாக சொன்னார்.இனி அவரிடம் மறைக்க வேண்டாம்என்றார்.


ராகவனுக்கம்,செண்பகத்திற்கும் துக்கம் தொண்டையை அடைக்க டாக்டர் நாங்கள் எப்படி சொல்வது நீங்களே சொல்லி அறிவரையும் கொடுங்கள் இனி விதி விட்ட வழி என்றனர் ,டாக்டர் குமரன் அறைக்கு சென்று அவனை விசாரித்ததில் அவருக்கு எல்லா உண்மையும் விளங்கியது , அவர் நோய்குறித்த ஆறிவுரையை வழங்கி எப்படி தைரியமாக இதை எதிர்கொள்வது என்பதையும் விளக்கி சென்றார்.குமரனுக்கு தன் அப்பா அம்மாவின் முகத்தை எப்படி பார்ப்பது என கூனி குறுகி போனான் ,டாக்டர் கொடுத்த அறிவுரை அவனுக்கு தெம்பை கொடுத்தது. ராகவனும்,செண்பகமும் ரூமுக்கு வந்ததும கதறியவாரே அவர்கள் கால்களில் விழுந்து அம்மா,அப்பா என்ன மன்னிச்சுருங்க நான் கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் போககூடாத எடத்துக்கெல்லாம் போய் இப்ப எய்ட்ஸை வாங்கி வந்திருக்கிறேன் நான் இனி அதிகநாள் உயிரோடு இருக்க மாட்டேன் எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாய் இருக்கட்டும் இனி யாரிடமும் மறைக்க வேண்டாம் என்றான்,எல்லோரும் ஊருக்கு புறப்பட்டனர்,வரும் வழியிலேயே மலர்கொடி,மாப்பிள்ளைக்கும்,கண்மணி, மாப்பிள்ளைக்கும் போன் செய்து வீட்டுக்கு வரச்சொன்னனர். இவர்கள் வீட்டை அடையும் போது மகள்களும், மாப்பிள்ளைகளும் காத்திருந்தனர் ராகவனும் செண்பகமும் பொருமையாக எடுத்துக்கூறினர், கேட்டதும் மலர்கொடியும்,கண்மணியும் கதறினர் ஏண்டா இப்படி பண்ண என ஒப்பாரி வைத்தனர் ,மாப்பிள்ளைகளும் அப்பா இப்பதானே உனக்கு பொண்ணு பார்கணமுன்னு பேசிட்டிருந்தார் நீ இப்படி செய்வாயின்னு யாரும் எதிர்பார்கள என மிகவும் வருந்தினர் ,இனி ஊரெல்லாம் பேசுமே ,அவமானமாய் இருக்கும் என்றனர், என்ன மன்னிச்சுருங்க மாமா என் வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு பாடமாய் இருக்கட்டும் ,இனி எதையும் மறைக்க வேண்டாம் ,கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி பிரயோஜனமில்ல யார் எது வேணா பேசட்டும் என்றான் குமரன் உறுதியாக,மறு நாள் ஊருக்கெல்லாம் தெரிந்து ஊரெல்லாம் இதே பேச்சுத்தான்,ராகவனும் செண்பகமும் ஊர் முன் விழிக்கவே வெட்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்,நிறைய பேர் வந்து விசாரித்து விட்டும் சென்றனர்,ஒரு வழியாக ஊர் பேச்சும் குறைந்தது,குமரன் ஒழுங்காக செக்கப்பிற்கு மருத்துவமணை செல்கிறான்,மருந்து எடுத்துக் கொள்கிறான்,காலையில் தினம் கோவிலுக்கு போகிறான் அவன் திருந்தி என்ன செய்ய அவனுள் இருந்த உயிர்கொல்லி நோய்க்கிருமிகள் சாவின் வாயிலுக்கு மெதுவாக அழைத்து சென்றது, அடிவயிற்றின் கீழ் பழுப்பு ஏற்பட்டு பாடாய் படுத்தியது ,நோய் அறிந்த இரண்டு வருடங்களில் எழும்பும் தோலுமாய் ஆகி எத்தனை வைத்தியம் பார்த்த போதும் சரியாகமல் ஒரு புதன் கிழமை காலை குமரனின் உயிர் பிரிந்தது, இந்த இரண்டு வருடங்களில் தான் சந்தித்த அனைவரிடமும் கூறியது இப்ப நான் ஒழுக்கமா இருக்கிறேன் இந்த ஒழுக்கம் மொதல்லையே இருந்திருந்தா எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது, இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது,நான் எல்லோருக்கும் ஒரு பாடம் இதுமட்டுமே.


"ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம"

உயிரினும் ஓம்பப்படும்.


வள்ளுவன் என்றோ எழுதிவைத்தான்,எவ்வளவு சத்தியமான உண்மை.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy