Siva Kumar

Inspirational Others

5  

Siva Kumar

Inspirational Others

ஐயப்பன் அவன் மெய்யப்பன்......!

ஐயப்பன் அவன் மெய்யப்பன்......!

4 mins
495


"ஐயப்பன் அவன் மெய்யப்பன்". , ஆம் என் முதல் தரிசனத்தில் ஐயப்பன் நிகழ்த்திய அதிசய திருவிளையாடளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன் முதல் முதல் மாலையிட்ட பக்தி பரவசத்தில் முறையாக48 நாள் விரதம் இருந்து தினமும் பஜனை படித்து ஜோதி தரிசனத்திற்காக கட்டுக்கட்டி புறப்பட்டோம் குருசாமியும் நானும்,இன்னொருவருமாக இரண்டு கன்னிச்சாமிகளும்,கூட ஏழுசாமிகளும் மளையாளம் தாய்மொழியாதலால் நன்றாக பேசுவேன் அது சபரிமலை செல்வதற்கு வசதியாக இருந்தது,உடன் வந்தவர்க்கும் உதவியாக இருந்தது,ஒருவழியாக எருமேலி வந்து ஆனந்தமாய் சாயம் பூசி பேட்டைதுள்ளி பெருவழி வழியாக காடு, மலையில் நடந்து சபரிமலை புறப்பட்டோம்,அழுதை எட்டும் போது இருட்டிவிட விரி எடுத்து தங்கி சமைத்துசாப்பிட்டு காலை இரண்டு மணிக்கு புறப்பட்டால் ஏழுமணிக்குள் பம்பை சென்று விட திட்டமிட்டு ஓய்வெடுத்தோம் அதிகாலை ஒருமணிக்கு எழுந்து குளித்துவிட்டு பூஜை முடித்து அன்னதானமாக சமைத்த வெள்ளைரவை உப்புமா சாப்பிட்டு கிளம்பினோம்,இங்குதான் சோதனை ஆரம்பித்தது வெள்ளைரவை சேராமல் எனக்கு வாயிலும்,வயிற்றிலும் போனது நான்கு,ஐந்துமுறை போனதும் மிகவும் சோர்ந்து விட்டேன் இனி நடக்கமுடியுமா தெரியவில்லை,முடியாத பட்ஷத்திற்கு டோலியைத்தான் அழைக்க வேண்டும் பகுதி தூரம் வந்துவிட்டதால் திரும்பவும் முடியாது,உடன்வந்த சாமிகளுக்கும் கவலை என்னை தனியேவும் விட்டுச்செல்ல முடியாது,நான் ஒருமரத்தடியில் படுத்து வைராக்கியமாக கூடவந்த சாமியிடம் அழுதையில் இருந்து கொஞ்ச தூரமே வந்திருந்தோம் அழுதைக்க போய் ஒரே ஒரு குளுக்கோஸ் பாக்கட் மட்டும் வாங்கிவரச்சொன்னேன் அவரும் வாங்கிவர அதை ஒரு டம்ரில் நீருடன் கலந்து ஐயப்பனை மனமார நினைத்து சரணம் விளித்து குடித்தேன் அடுத்த பத்து நிமிடத்தில் எங்கிருந்துதான் அந்த தெம்பு வந்ததோ முதல் ஆளாக நடந்து கரிமலை ஏற்றம்,கரிமலை இறக்கம் கடந்து பம்பைக்கு நினைத்தமாதிரி ஏழுமணிக்கெல்லாம் சேர்ந்துவிட்டோம்,கூடவந்த குருசாமி உட்பட்ட சாமிகள் அதிசயபட்டு போயினர் பம்பையில் மாளாத கூட்டம் பிளாக் பண்ணி பிளாக் பண்ணித்தான் விட்டனர் கூட்டத்தில் நானும் இரண்டு சாமிகளும்,ஒரு சாமிமட்டும் தனியாகவும்,மற்ற ஆறுசாமிகளுமாக பிரிந்து விட்டோம் ஜோதிதரிசனமாதலால் கட்டுக்கடங்காத கூட்டம் ஒருவழியாக சன்னிதானம் அடைந்தோம் அங்கு அரிசி இட்டால் கீழே விழாது அந்தளவு கூட்டம்,நான் அங்குள்ள மைக்கில் அனவுன்ஸ் செய்யுமிடம் போய் சொல்லி ஒவ்வொருவராக கண்டு பிடித்து சேர்ந்தோம்,ஆறுசாமிகளாக போனவர்களும் இடையில் பிரிந்து விட்டனர்,தேடி தேடி எல்லாரும் ஒன்று சேர்ந்தோம் நான்தான் எல்லாரையும் ஒன்று சேர்த்தேன்,எனக்கு முதல் வருடம்மாதிரியே தோன்றவில்லை ஒவ்வொருவரைத்தேடும்போதும் ஐயப்பனை நினைத்துத்தான் தேடினேன் அவன் பறிபூரண அருளாள் எல்லாரும் கிடைத்தனர்,இன்னும் இரண்டு நாள் ஆனால்தான் தரிசனம் கிட்டும் என்ற நிலைமை அவ்வளவு கூட்டம் அதுவரை எங்கு தங்குவது விரி ஐநூறு ரூபாய் அதில் இருமுடி மட்டுமே வைக்க முடியும்பத்து பேர் உட்காரகூட முடியாது என்ன செய்வது என்மனசில் என்ன தோனிச்சோ குருசாமியை கூட்டிக்கொண்டு மற்றவர்களை இருமுடியை பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்க சொல்லிவிட்டு நம்பியார் மடம் இருக்கும் பகுதிக்கு சென்றேன் அங்கு நிறைய ரூம்கள் உண்டு பட் எல்லாமே புல், அங்கு வெளியிலும் கால் வைக்க முடியாத அளவுக்கு சாமிகள்,ரூம் அருகே நடந்தபோது ஐயப்பனை வேண்டிக்கொண்டுதான் நடந்தேன் அப்பொழுது ஒரு ரூமிலிருந்து ஒரு சாமி நீளமாக தாடியெல்லாம் வைத்து ஒரு சாமியார்போல் இருந்தவர் என்னை அழைத்தார் நானும் போய் சாமி என்றேன் எதற்கு அங்குமிங்கும் நடக்கிறீர்கள் எனக்கேட்டார் நான் நடந்த கதை முழுவதும்சொல்ல என்னிடம் நான் உன் முகம்பார்த்து இங்கு இடம் கொடுக்கிறேன் என்றார் அவர் ஏதோ கொச்சி மடத்திலிருந்து வந்ததாகவும்,இது மடம் சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை என்னனு தெரியல உன்முகம்பார்த்து எனக்கு தரதோணுது என்றார்,கூட வந்த குருசாமி ஆச்சரியத்தில் உறைந்து போனார், அவரது ஆட்கள் வந்துசேர இரண்டு நாள் ஆகுமென்றும் கூறினார் நல்ல வசதியான பாத்ரூமுடன் கூடிய ரூம்,பிறகு நாங்கள் போய் மற்ற சாமிகளையும் அழைத்துவந்து ரூமில் தங்கி குளித்து பூஜை முடித்து சமைத்து அன்னதானம் செய்தோம் ,இரவு உறங்கும் போது எனக்கு தூக்கமே வரலை ஐயப்பனை நினைத்து முதல்வருடம்வந்து இப்படி ஆகிவிட்டதே உனைதரிசிக்க இன்னும் இரண்டு நாள் ஆகும் என்கிறார்களே ஏன் ஐயப்பா நான் ஏதாவது தவறு செய்தேனா?ஒழுங்காகதானே விரதம் இருந்தேன் பிறகு ஏன் இப்படி என அழுதுகொண்டே உறங்கிப்போனேன்,காலையில் எழுந்து குளித்து ரூமுக்கு வெளியே வந்தபோது ஒரு போலீஸ் சாமி வந்தார் சாமி இந்த ரூமில் நான் குளிக்கலாமா என என்னிடம் கேட்க சாமி நாங்களே ஓசுல தங்கி இருக்கோம் உள்ள ஒரு சாமி இருக்கார் அவரை கேட்டு சொல்றேன் என்று அந்தசாமியிடம் போய் கேட்டபோது அதற்கென்ன தாராளமாய் குளிக்கட்டும் என்றார் போலீஸ் சாமியிடம் அவர் அனுமதிகொடுத்ததை சொல்ல அவர் குளித்துவிட்டு வந்தார் திரும்ப போகும்போது எல்லாம் ஆச்சாசாமி என்றார் நான் முதல் முறை மாலையிட்டு வந்ததையும்,இங்கு வந்து மாட்டியதையும்,அந்த சாமி உதவியதையும் இரவெல்லாம் ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை என அழுததையும்சொல்ல அந்த போலீஸ் சாமி என்ன நினைத்தாரோ சாமி நீங்க இருமுடி எடுத்து ரெடியா இருங்க நான் எட்டு மணிக்கு வந்து கூட்டிப்போகிறேன் என்றார்,நான் சாமி என்னுடன் இன்னொரு கன்னிச்சாமியும் இருக்கிறார் மற்றவர்கள் எல்லாம் சென்றமுறை தரிசித்துள்ளனர் அதனால் அந்த கன்னிச்சாமி வருத்தபடுவார் என்றேன்,போலீஸ் சாமி சரி அவரையும்கூட்டி ரெடியாக இருங்கள் என்றார் ,சரி என நாங்கள் குருசாமி அனுமதியுடன் ரெடியாக, எட்டுமணி்க்கு போலீஸ் சாமி வந்து அழைத்துச்சென்று பதினெட்டாம்படி அருகே நின்ற போலீசிடம் சொல்லி நேராக பதினெட்டாம்படி ஏற்றி விட்டார் நானும் இன்னொரு கன்னிச்சாமியும் மனமாற பதினெட்டாம்படி ஏரி ஐயப்பனை மனமாற வணங்கி தரிசனம் செய்து கண்ணீர்மல்க நன்றி சொல்லி இந்த ஏழையின் வேண்டுதலையும் ஏற்றுக்கொண்டு நீயே போலீஸ் உருவில் வந்து கூட்டிச் சென்றாயே

உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று ரூமுக்கு திரும்பினேன்,பிறகு எவ்வளவோ முயன்றும் அந்த போலீஸ் சாமிய பார்க்கவே முடியல,குருசாமி நான் இந்த பதினெட்டு வருசத்துல இப்படி ஒரு அதிசயம் பார்த்ததில்லை என்றார்,ஐயப்பன்தான் போலீஸ் உருவில் வந்து கூட்டிச்சென்றது என்றார் என் பக்தியை மெச்சினார்,அடுத்தநாள் கூட்டம்குறைய அவர்களும் தரிசனம் செய்து நெய்யபிஷேகம் செய்து இரவு பொன்ஆபிரணப்பெட்டி வரவுகண்டு,மாலை ஆறுமணிக்கு கருடன் சன்னிதானத்தை வட்டமிட,உத்திர நட்சத்திரம் வானில் மின்ன

பொன்னம்பல மேட்டில் மூன்று முறை சரணகோஷம் விண்ணைப்பிளக்க ஜோதிதரிசனமாயும் ஐயனைக்கண்டு மனம்குளிர மலையிறங்கினோம் ,இடம் கொடுத்ததும் ஐயனே,என்னை தரிசிக்க வைத்ததும் ஐயனே ,ஊருக்கு வந்ததும் எல்லோரிடமும் குருசாமியும்,மற்ற சாமிகளும் சொல்ல ஊரே வியந்து பாராட்டியது ,எங்கப்பா அந்த ஊருக்கே முதல் குருசாமி எல்லாரும்அப்பாவை சாமி என்றுதான் கூப்பிடுவார்கள் ,அப்பா மிக தீவிர ஐயப்ப பக்தர்,அவர்மேல் நல்ல மதிப்பும்.மரியாதையும் வைத்திருந்தனர்,சுப்பிரமணியசாமி மகன்சாமிக்கு சொல்லவா வேண்டும் என்று ஊரே புகழ்ந்தது,எல்லாபுகழும் இறைவனுக்கே,அவன் ஒருவனுக்கே,ஐயப்பன் எங்கள் மெய்யப்பன் ,அவனை மனமுறுகி நினைத்து விரதமிருந்தால் உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றுவான் எனக்கு நேரில் வந்து உணர்த்தினான் என்றும் மறக்கமுடியாத முதல் தரிசனம், நீங்களும் வேண்டுங்கள் விரதமிருங்கள் உங்கள் பக்தி உண்மையானால் ,உங்களிடமும் அதிசயங்களை நிகழ்த்தி உங்கள் கவலைகளைப்போக்கி வாழவைப்பான்........சுவாமியே சரணம் ஐயப்பா.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational