Siva Kumar

Children Stories Crime

3  

Siva Kumar

Children Stories Crime

பால்ய விவாகம்......!

பால்ய விவாகம்......!

3 mins
151


மதுரம் என்பது ஒரு சிறிய குக்கிராமம், இன்னும் பழமை ஊறிப்போன வளர்ச்சியடையாத கிராமம், அங்கு    சோமு வாத்தியார் வீடும்,ஊர்  பண்ணக்காரர் வீடும் தான் கொஞ்சம்

நாகரீகமான வீடுகள் மற்றபடி சிறிய

ஓட்டு வீடுகளும்,குடிசை வீடுகளும்தான்,

பண்ணக்காரர் நிலத்தில் கூலி வேலை

செய்து பிழைப்பவர்கள்தான் அவ்வூர் மக்கள்,பண்ணைக்காரருக்கு ஊரைச்சுற்றிலும்,வயல்வெளிகளும்,  கரும்புக்காடுகளும்,மா,தென்னை  தோப்புகளும்,உள்ளன,அதைவிடுத்து அவர் உறவுக்கார்களுக்கும்,சோமு வாத்தியாருக்கும்தான் கொஞ்சமாக நிலங்கள் உள்ளன.


 மதுரத்தில் ஐந்தாம் வகுப்புவரை உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடம் மட்டுமே,

சோமு வாத்தியார்தான் தலைமை  ஆசிரியர்,அவருக்கு உதவியாக இரண்டு டீச்சர்கள் அருகிலுள்ள ஊர்களில்    இருந்து வருகிறார்கள். ஐந்தாவது முடிந்தால் அருகிலுள்ள ஊரில்தான் உயர்நிலைப்பள்ளிவரை உண்டு,அங்குதான் படிக்கச்செல்லவேண்டும், சோமு   வாத்தியார் எல்லாவீடுகளுக்கும்    சென்று படிப்பின் அவசியத்தை   உணர்த்தி பிள்ளைகளை பள்ளியில் 

சேர்த்தி திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார். தன் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் வேலுச்சாமி மகள் மல்லிகா சிறப்பாகபடிக்கக் கூடிய மாணவி. இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை ஏன் என்று சக மாணவர்களிடம் விசாரித்ததில் சார் மல்லிகாவுக்கு அவுங்க மாமா பையனோடு கல்யாணம் 

என்றார்கள்.


வேலுச்சாமியும்,சரசுவும் பண்ணக்காரர் தோட்டத்தில்தான் கூலி

வேலைக்கு போகிறார்கள்,அவர்களுக்கு

இரண்டு பெண்கள் மூத்தவள்தான்  மல்லிகா,இளையவள் கலா அதே பள்ளியில் மூன்றாவது படிக்கிறாள்,

அவளும் இரண்டு நாளாய் வரவில்லை,

பள்ளிமுடிந்ததும்,சோமுவாத்தியார் நேரே

வேலுச்சாமி வீட்டுக்குப்போனார், என்ன

வேலுச்சாமி நல்லாருக்கியா, நல்லாருக்கேன் சாமி ஆமா எங்க   இரண்டு நாள மல்லிகாவும்,கலாவும் பள்ளிக்கூடம் வரலை என்ன விவரம்,   சாமி எம்மச்சினன் பையனுக்கும் எம்

பொண்ணுக்கும் எங்க குலவழக்கபடி

இவனுக்கு இவதான்னு பேசி கல்யாணம் பண்ணி வச்சிருவோம்.


பெருசானபிறகு ஒன்னுசேர்த்து

வச்சுருவோம், சோமுவாத்தியார் என்ன 

வேலுச்சாமி புரியாத ஆள இருக்கிறியே காலம் எங்க போய்டு இருக்கு ,இன்னும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைய விடாம

இருக்கீங்களே, மல்லிகாவுக்கு பத்து 

வயசுதான் ஆகுது நாளைக்கு யாருக்கு என்ன நடக்குமுன்னு யாருக்கும்   தெரியாது நாளைக்கே ஒரு   நல்லதுகெட்டது நடந்ததுன்னா அந்த புள்ளைங்க வாழ்க்கையே வீணா போயிருமே, இல்ல சாமி இது எப்பவுமே நடக்கறதுததான் பொறந்தன்னைக்கே இவனுக்கு இவள்தான்,இவளுக்கு இவன்தான்னு கலந்து பேசி முடிவு செஞ்சிருவோம் ,இதென்ன மூட நம்பிக்கை வேலுச்சாமி, தன்னையே அறியாத வயசுல அவங்களுக்கு திருமணம் செஞ்சுவச்சா 

நாளைக்கு அவுங்க பெருசாயி தன்னைத்தானே புரிஞ்சுக்கற போது 

மனசின் ஆசா பாசங்கள் மாறிச்சுன்னா

இரண்டு பேர் வாழ்க்கையும் நரகமாயிரும் 

அதுவுமில்லாம கவர்மெண்ட் சட்டப்படி 

பெண்ணுக்கு 18 வயசும் ஆணுக்கு 21வயசும் ஆவதுக்குள்ள அவங்களுக்கு திருமணம் செஞ்சா அது சட்டப்படி குற்றம் ,அப்படி கட்டாயப்படுத்தி  கல்யாணம் செய்றவங்களுக்கு  மூன்றுமாத சிறை தண்டனையும் ஆயிரம் ரூபா அபராதமும் உண்டு என்று சோமுவாத்தியார் சொல்லியும் , சாமி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிஞ்சாச்சு நாளைக்கு கல்யாணம்  இப்ப என்ன செய்யமுடியும் என கைவிரிக்க இனி இவரிடம் பேசி பயனில்லை என பண்ணைக்காரர் நடேசனை சந்திக்கசென்றார் சோமு வாத்தியார்.


பண்ணகாரர் நடேசனை நந்தித்து விவரங்களைச்சொல்லி இதனைத்தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்ல, அவங்க எல்லாம் அப்படித்தான் வாத்தியாரே பழமையில் ஊறிப்போயிருக்காங்க, மூடநம்பிக்கைய விடாம இருக்காங்க நாம ஒன்னு செய்வோம் நாளைக்கு காலை நேரமே நம்ம மேட்டுகுடில இருக்கிற காவல் நிலையத்தில் விவரத்த சொல்லி அவங்களோட போயி

கல்யாணத்த நிறுத்துவோம் அவங்க

சொன்னாத்தான் கேட்பாங்க இல்லைனா

அந்த சின்ன புள்ளைங்க வாழ்க்கை

வீணா போயிரும் ,காலை நேரமே நான் வண்டிய எடுத்துட்டு வாரேன் நாம் போவோம் என்றார்.


காலை வேலுச்சாமி குடும்பமும் மச்சினன் ரகுபதி குடும்பமும் மாரியம்மன் கோவிலில் கல்யாணவேளைகளில் பரபரப்பாக இருக்க மல்லிகா புத்தாடை 

உடுத்து மாலையோடு இருக்க ரகுபதி 

மகன் கண்ணனும் புத்தாடை உடுத்தி மாலையோட ரெடியாகஇருக்க, சீரெல்லாம் முடிந்தவுடன் இன்னும் சிறிது ரேத்தில் சிறு மலர்களை கல்யாணம் என்ற பெயரில் பொசுக்கப்போகிறார்கள்.


காலையில் நேரமே பண்ணக்காரர் நடேசன் காரை எடுத்துக்கொண்டு சோமுவாத்தியார் வீட்டுக்கு போய் அவரையும் அழைத்துக்கொண்டு மேட்டுக்குடி காவல் நிலையம் சென்று 

விவரங்களைச் சொல்ல. இன்ஸ்பெக்டர் 

இந்தக்காலத்திலும் இப்படியும் முட்டாள் 

பயலுக இருக்கிறானுகளே,அவனுகதான் படிக்காம இருக்கானுகனா புள்ளைகளையும் படிக்கவுடாமே இப்படி பன்றானுகளே வாங்க சார் போவோம் 

என்று நான்கு கான்ஸ்டபிள்களை கூட்டி 

அவர் வண்டியில் கிளம்ப பின்னாலே நடேசனும்,சோமுவாத்தியாரும் கிளம்பினர்.


கல்யாண சீர்களெல்லாம் முடிந்து 

கோயில் ஐயர் தாலி எடுத்துக்   கொடுக்கவும் போலீஸ் வண்டிவரவும் சரியாக இருந்தது ,பின்னாலேயே பண்ணக்காரர் நடேசனும்,சோமு வாத்தியாரும் வர, இன்ஸ் பெக்டரும் கான்ஸ்டெபிள்களும் வந்து நிறுத்துங்க கல்யாணத்த இது என்ன சின்னப்பிள்ளைங்க விளையாட்டு   மாதிரி வேலுச்சாமி உங்கபொண்ணுக்கு 

என்ன வயசாகுது பத்துங்க சாமி, ரகுபதி உங்க பையனுக்கு பதினாலுங்க சாமி 

இங்க பாருங்க பொண்ணுக்கு 18வயசுக்குள்ளயும்,பையனுக்கு 21வயசுக்குள்ளயும் கல்யாணம் பண்றது 

சட்டப்படி தப்பு இப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றதுக்கு உங்க ரெண்டுபேர் குடும்பத்தையும் தூக்கி ஜெயில்ல வைக்க முடியும் வாத்தியாரும், பண்ணக்காரரும் கேட்டுக்கிட்டதனாலே கேஸ் எல்லாம் போடல ,படிக்காததாலே இதெல்லாம் உங்களுக்கு தெரியல

உங்க புள்ளைகளாவது படிச்சு உலகம் புரிஞ்சு நடக்கட்டும், அதுதான் நேத்தைக்கே வாத்தியார் வந்து சொன்னாரில்ல ,சொன்னாருங்க சாமி 

படிக்காத கிருக்கனுக்கு ஒன்னும் விளங்களைங்க சாமி, இதுல இவ்வளவு விவரம் இருக்குனு தெரியாம போச்சு 

சாமி இனி எம் பொண்ணுக்கு 18வயசாகறதுக்கு முன்னாடி   எந்தப்பேச்சும் எடுக்க மாட்டோம் கேசெல்லாம் வேண்டாமுங்க சாமி எங்களை விட்டுறுங்க என்றார் நடுங்கியவாரே, ரகுபதியும் ஆமாம் சாமி கேசெல்லாம் வேண்டாம் சாமி நாளைக்கே புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறோம் என்றார் நடுங்கியவாரே 

போலீஸ் என்றால் அவ்வளவு பயம் அவர்களுக்கு, பிறகென்ன வேலை வீடு என்று இருப்பவர்தானே அவர்கள், அவர்களுக்கு உலகில் என்ன நடக்குது என்பதே தெரியாது, பண்ணக்காரர்நடேசனும், சோமு வாத்தியாரும் இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூற ,தன் கடமையை முடித்த கையோடு நான்தான் உங்களுக்கு நன்றி கூறனும் கரெக்டான சமயத்துல சொன்னதாலே   படு குழியில் விழ இருந்த இரண்டு புள்ளைங்கள காப்பாத்த முடிஞ்சுது . வாத்தியார் சார்தான் புள்ளைங்க பள்ளிக்கூடம் வரலைன்னு விசாரிச்சு கரெக்டா அவுங்களுக்கும் அறிவுரை வழங்கி உங்கூட எங்கிட்ட வந்து ரிக்வெஸ்டா கேட்டுகிட்டதாலே எல்லாமே நல்லபடியாமுடிஞ்சுது, இது மாதிரி    புள்ளைங்க மேல அக்கரை இருக்கற வாத்தியார் கிடைக்க உங்க ஊர்  புள்ளைங்க கொடுத்து வச்சிருக்கணும், ஒரு நாள் வரலைனாலும் ஏன் வரலை? என்ன காரணமுனு விசாரிச்சதாலே இத தடுக்க முடிஞ்சது. இவரு மாதிரியே 

எல்லா வாத்தியாரும் புள்ளைங்க மேல

அக்கரையா இருந்துட்டா குழந்தைகளுக்கு இது மாதிரி நடக்கற கொடுமைகளை எங்களாலயும் ஈசியா

தடுத்து காப்பாற்ற முடியும் என்று கூறி விடைபெற்றார். 


பணக்காரர் நடேசனும், சோமுவாத்தியாரும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றி அவர்கள் 

எதிர்கால கேள்விக்குறியை, சந்தோஷக்குறியாக மாற்றிய    மனதிருப்தியோடு வீட்டுக்கு     கிளம்பினர்.


       



Rate this content
Log in