STORYMIRROR

Siva Kumar

Crime

4  

Siva Kumar

Crime

காதலின் போர்வையில்....!

காதலின் போர்வையில்....!

6 mins
320

ரஞ்சித்துக்கும் அவன் நண்பர்கள் அகில்,யாதவ்,அஸ்ரப் நால்வருக்கும் இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு ,வாதங்கள் பிரதி வாதங்கள் எல்லாம் முடிந்து ,இன்று தண்டணை உறுதி என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு பத்திரிக்கைகளிலும் செய்தி வந்தது ,ரம்யாவும் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தால் ரம்யாவும்,ரஞ்சித்தும் அடுத்தடுத்துள்ளா கல்லூரிகளில் ரஞ்சித் பிபிஏ வும்,ரம்யா பிஏ காமர்ஸ்ஸும் மூன்றாம் வருடம் படிக்கிறார்கள் ரம்யா நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அழகான,மிகவும் தைரியமான ஒழுக்கமான பெண், கூட பிறந்த ஒரு தம்பி ரன்வீர் காலேஜ்ஜில் முதல் வருடம என்ஜினீரிங் படிக்கிறான் ,ரஞ்சித் பெரிய இடத்துப்பையன் அதற்கு தகுந்தால்போல் அழகாகவும்,உயரமாகவும்,கலராயும் இருப்பான்,நண்பர்களுடன் பார் செல்வது தண்ணி,சிகரெட் என கண்டபடி சுற்றித்திரிந்தான் சிட்டிலயே பெரிய.தொழில் அதிபரின் மகனல்லவா,அவனது தங்கை ஸ்ரேயா இஞ்சினீரிங் கல்லாரியில் முதலாமாண்டு பயில்கிறாள்,ரம்யா ரஞ்சித் வலையில் எப்படி விழுந்தால் என்றே தெரியவில்லை ஒரு சமயம் கல்லூரி விட்டு நடந்து வரும் போது பைக்கில் வந்தஇரண்டு பேர் பக்கவாட்டில் இடிக்கவும் நிலைதடுமாறி கீழே விழுந்து புத்தகம் டிபன் பாக்ஸ் எல்லாம் சிதர பைக்கின் பின்னால் வந்த காரிலிருந்து ரஞ்சித் இறங்கி வந்து பைக்கில் வந்த பையன்களை இரண்டு சாத்து சாத்தி கண்டபடி திட்டிக்கொண்டே ஏண்ட அவிங்க ஒரமாத்தானே வந்தாங்க வண்டி கைல கிடச்சா ஒங்க சர்க்கஸ் எல்லாம் ரோட்ல தான என்றுஅவர்களை துரத்தி விட்டு டிபன் பாக்ஸ்,புக்கெல்லாம் எடுத்துக்கெடுத்து அவளை கைதாங்கலாக எழுப்ப அருகில் நடந்து சென்றவர்களும் உதவிக்கு வர ஐ யாம் ரஞ்சித் பக்கத்துகாலேஜில் படிக்கிறேன் உங்களுக்கு ஒன்னுமில்லையே அடி பலமா பட்டிருக்கா என அக்கரையுடன் கேட்க அப்பொழுதுதான் தன்னிலை உணர்ந்தவளாய் விழுந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தாள் ரம்யா, கை,காலெல்லாம் சிராய்பு காயங்கள் கையில் ரத்தம் வருவதை பார்த்து ரஞ்சித் பதறினான் மிஸ் உங்க பேரு எனகேட்க ரம்யா என்றால்,ரம்யா கைல ரத்தம் வருது பாருங்க இங்க ஆட்டோ கிடைக்காது நான் என் கார்லயே ஹாஸ்பிடல் கூட்டிப்போகிறேன் என்று சொல்ல உதவிக்கு வந்தவர்களும் ஆமாம்மா இப்படியே பஸ்ல போக முடியாது அந்த தம்பிதான் கூப்பிடரார் இல்ல போமா என்றனர் ரம்யா அறிமுகமில்லா வாலிபருடன் எப்படி செல்வது என தயங்க ரஞ்சித் நான் வேணும்னா உங்க வீட்டுக்கு போன் செய்யவா ? உதவிக்குயாராவது வரச்சொல்லவா? நம்பர் சொல்லுங்க என்றான் இல்ல வேண்டா வீட்டில் சொன்னா என்னவோ ஏதோன்னு பயப்படுவாங்க என்று சொல்ல,கூட இருந்தவர்கள் ஹாஸ்பிடல் போகச் சொல்ல தயங்கியபடி காரில் ஏரினால் அவனும் அருகில் இருந்த ஹாஸ்பிடல் கூட்டிச்சென்று 

பஸ்ட் எய்டு எல்லாம் பண்ணி பத்திரமாக கூட்டி வந்தான் ரம்யா நா வேணும்னா வீட்ல டிராப் பண்ணவா என்றான் இல்ல ஏதாவது நினைப்பாங்க பஸ் ஸ்டாப்ல இறக்கி விடுங்க நான் போயிக்கிறேன் ஓகே என்றவாறே அருகிலிருந்த பஸ்டாப்பில் நிறுத்தி அவளது புக்ஸ் டிபன்பாக்ஸ் எல்லாம் கொடுத்து பாத்துப்போங்க என்றான் அப்பொழுதுதான் நினைவு வந்தவளாய் ஆமா ஹாஸ்பிடல் பில் எவ்ளோ என்று பர்ஸ்ஸை திறந்தால் நீங்க சும்மா இருங்க அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்றான், ரம்யா ரொம்ப தேங்ஸ் ரஞ்சித் இந்த உதவிய மறக்கமாட்டேன் என்று விடைபெறவும் பஸ் வரவும் சரியாக இருந்தது ,அவன் ரொம்ப டீசன்டாக நடந்த விதம் அவளுக்கு பிடித்து இருந்தது ,மறு நாள் காலேஜ் வழக்கம் போல் இரண்டு மூன்று நாட்கள் கடந்தது, ஒரு மாலை பஸ்ஸுக்காக காத்திருந்த போது ரஞ்சித்தின் கார் இவளருகே நின்றது, ஹாய் ரம்யா எப்படி இருக்கீங்க காயமெல்லாம் ஆறியாச்சா என கேட்க பரவாயில்ல ரஞ்சித் நீங்க எப்படி இருக்கீங்க என்றாள் ஐ யாம் ஒகே பாருங்க ஜம்முனு இருக்கேன் என்றான், சரி வாங்க ஒரு கப் காப்பி சாப்டே பேசலாம் என்றான்,ரம்யா தயங்க பிரண்டு கூட காப்பி சாப்பிட மாட்டீங்களா என்றான் இங்க பக்கத்துலதான் காப்பி சாப் பத்து நிமிடத்தில் வந்தர்லாம் என்றான், அவளுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது போகலைனா ஆபத்தில் உதவியவன் சங்கடபடுவான் என்று வேறு வழியில்லாமல் காரில் ஏறினால் அது ஆபத்தான பயணத்தின் துவக்கம் என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை ,அன்றும் காபி சாப்பிட்டு பேசிக் கொண்டு போன் நம்பர்களை பரஸ்பரம் வாங்கிக்கொண்டார்கள் பிறகு அவளை பஸ் ஏற்றி விட்டு பை சொன்னான் ,ரம்யா மெல்ல அவன் வலையில் விழ,வாட்ஸப் மெஜேஜ்,கால் , டெய்லி சேட்டிங் என போயிற்று அவற்றிலும் டீசன்ட்டாகவே செய்தான் பீச்,பார்க்,சினிமா என கூட்டிச் சென்றான் போட்டோ எடுத்தான் சேர் செய்தான் ,தன் காதலையும் ஒரு கிப்ட் உடன் புரபோஸ் செய்தான்,நாகரீகமாக நடந்து கொண்டதால் ரம்யாவும் ஏற்றுக்கொண்டால் ,ரஞ்சித்துடன் நெருங்கி பழக ஆரம்பித்தால் அதையும் அவன் போட்டோவாகவும் ,வீடியோவாகவும் பதிந்து கொண்டான் ரம்யாவுக்காக காசை தண்ணீராய் இறைத்தான் ரம்யாவும சொக்கிப்போனால்.ரம்யா தம்பி ரன்வீர்ருடன் ரஞ்சித்தின் பிரண்ட் அஸ்ரப் தம்பி அன்வரும் முதல்வருட என்ஜினீரிங் படிக்கிறான் இருவரும் நல்ல நண்பர்கள் அடிக்கடி விட்டுக்கு ரன்வீருடன் வருவான் அப்போது அக்கா அக்கா என்று ரம்யாவுடன் சொந்த அக்காவைப்போல் பழகினான்,நாட்கள் நகர்ந்தன ரஞ்சித் ஒரு நாள் ரம்யாவை பர்த்டே பார்ட்டிக்காக இன்வெய்ட் செய்தான்,நேரிலும் வாட்ஸ்ஸப் மூலமாகவும் நீ தான் என் உயிர் உன்னை காதலித்த பிறகு இது பஸ்ட் பர்த்டே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ,நீ கண்டிப்பா வரணும் என்று உத்தரவே போட்டான் ,ரம்யாவும் வருவதாய் பிராமிஸ் செய்தாள்,அடுத்த நாள் ஒரு ஓட்டலில் ஒரு சிரிய ஹால் புக்செய்திருப்பதாயும் அந்த ஹோட்டல் பெயரையும் நீ அங்கு வர கஷ்பட வேண்டாம் எப்பொழுதும் காத்திருக்கும் பஸ் ஸ்டாப்புக்கு வா நான் காரில் உன்னை பிக்கப் செய்துக்கிறேன் என்றான் ரஞ்சித் ,ரம்யாவும் தனக்கு பிடித்தமாதிரி கிப்ட் வாங்கி பஸ்டாப்பில் காத்திருக்க பிளாக் கலர் இன்னோவாவில் வந்து பிக்கப் செய்து போனான் நிறையமுறை இதே காரில் அவனுடன் பயணித்ததால் அவளும் எந்த தயக்கமும் இன்றி அவனுடன் சென்றாள்.ஹோட்டலுக்கு போய் ஹாலுக்கு கூட்டிச் சென்றான்பார்டி ஹால் பலூனாலும்,காகித பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது,ஹாலை ஒட்டியே அட்டேச்சுடுடாக இரு அறைகள் பார்டி ஹாலில் அகில்,யாதவ்,அஸ்ரப் மற்றும் இரு ரஞ்சித்தின் நண்பர்களும் ரஞ்சித்தும் ரம்யாவும் மட்டும்தான் இருந்தனர். பார்ட்டிக்கு வேரு யாரையும் அழைக்கவில்லையா ரஞ்சித் என்றாள்,இல்ல ரம்யா நம் காதலுக்கு பிறகு நடக்கும் முதல் பார்ட்டிங்கரதாலே நீீ மட்டும் தான் ஸ்பெஷல் மற்றபடி என் குளோஸ் பிரண்ட்ஸ் மட்டும்தான் என்றான் பார்ட்டி ஆரம்பமானது ரஞ்சித் கேக் வெட்டினான் எல்லோரும் ஹேப்பி பர்த்டே டு யூ என வாழ்த்த ரம்யாவும் ஹேப்பி பர்த்டே டு யூ என கூறி கேக்கை.எடுத்து ரஞ்சித்துக்கு ஊட்டினாள்.ரஞ்சித்தும் ரம்யாவுக்கு ஊட்ட மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது ரம்யா கிப்ட்கொடுக்க மற்றவர்களும் கொடுக்க சரி வா ரம்யா கிப்டை கொண்டு போய் ரூமில் வைக்கலாம் என்று ரஞ்சித் கூப்பிட இரண்டுபேரும் கிப்ட் பாக்ஸ்களை பகுதி பகுதியாக எடுத்துக்கொண்டு வலது பக்கம் உள்ள ரூமூக்கு சென்றனர் ,அதே சமயம் மற்ற நண்பர்கள் இடது புறம் உள்ள ரூமுக்கு சென்றனர் ரம்யாவிடம் ஐந்து நிமிடத்தில் வருவதாயும் நீ கிப்ட் பாக்ஸ் எலலாத்தயும் பிரித்து வை யார்,யார் என்ன கொடுத்தாங்க பார்க்கலாம் நான் அதற்குள் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு இடது புறம் இருந்த அறைக்குள் நுழைந்தான் அங்கு அவன் நண்பர்கள் சரக்கையெல்லாம் கலந்துவைத்து தயாராக வைத்திருந்தனர் எல்லோரும் சியார்ஸ் சொல்லி மதுவை அருந்தினர் ,மாப்பிள்ள கிளிய தனியா தள்ளிட்டு வந்துட்ட இன்னைக்கு விருந்துதான் என்றனர் ரஞ்சித்தின் நண்பர்கள்,போடாங் நமக்கு இது என்ன புதுசா இதோட இப்படி எத்தனை பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருப்போம்,எத்தனை கிளிகளை பங்கு போட்டிருப்போம் என்றான் போதையில் ,சரி நான் முதல்ல போரேன் நீங்க நான் சேர் செய்த போட்டோவை எஞ்சாய் பண்ணுங்க என்று வலது புற ரூமுக்கு சென்று ரம்யாவிடம் அத்து மீறத் அவள் இவனை எச்சரிக்க ,நீ சம்மதிக்களனா நானும் நீயும் க்ளோஸா எடுத்த போட்டோவை அப்லோடு செய்து நாறடிச்சுடுவேன் என்றான் ,அய்யோ அப்படி எல்லாம் செய்யாத ரஞ்சித் உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன் ,என் மானமே போய்விடும் ,அப்படி யெல்லாம் கெஞ்சு வேண்ணு நெனச்சயாடபொம்பளப் பொருக்கி நாயே உன் வண்ட வளம் எல்லாம் நேத்தே தண்டவாளம் ஏறியாச்சு உனக்கு முடிவுகட்ட தாண்டா வந்தேன் என்றாள்,அவன் ஒன்றும் புறியாமல் விழிக்க ரம்யா அவனைத்தள்ளி விட்டு ஹாலில் போய் ஹால் கதவை திறக்கவும் போலீஸ் ரெடியாக இருந்தது உள்ள வாங்க சார் இவன்தான் சார் ஹெட், இவனுட அல்லக்கையெல்லாம் அந்த ரூமில் இருக்கிறாங்க சார் அரஸ்ட் பண்ணுங்க சார் என்று ஆதங்கத்தில் கத்தினால் ,ரஞ்சித் நடப்பது ஒன்றும் அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனான்,ஏண்டா புறம்போக்கு நீ பண்ண தெல்லாம் எப்படி தெரியும்னு பாத்தியா உன் பிரண்ட் அஸ்ரப்போட தம்பி என் தம்பியோட பிரண்ட் அவன் எதேச்சயா அவங்க அண்ணண் மொபைல் எடுத்து பார்த்தப்ப நீ பண்ண லீலை யெல்லாம் அவனுக்கு பார்வர்டு பண்ணின இல்ல அத பார்த்து அவங்க அண்ணன வான் பண்ணி இருக்கான் அதோட என்னோட போட்டோவும் அதில் பார்த்து சாக்காகி என்தம்பி ரன்வீர்கிட்ட சொல்ல அவனுக்கு என்னோட காதல் தெரியும் அதனால அவன் நேத்தைக்கு அக்கா அந்த ரஞ்சித் உனக்கு வேண்டாம் அவன் மகா பிராடு இந்தமாதிரி பொண்ணுங்கள போட்டோ எடுத்து மிரட்டி பணிய வைத்து அவனும் அனுபவித்து நண்பர்களுக்கும் இறையாக்குவதுதான் அவன் ப்ளான் என அன்வர் தன்னிடம் கூறியதை என்னிடம் கூறினான் என்று கூற, ரஞ்சித் விக்கித்து போனான். நான் உன்ன உயிரா நெனச்சு லவ் பண்னேன் ஆனா ஏமாந்துட்டேன் ,பட் மனச மட்டும்தான் கொடுத்தேன் ,கடவுள் என்ன காப்பாத்திட்டார் அன்வர் வடிவில் ,பிறகு என்னைத் தேற்றிக்கொண்டு இனி ஒரு பொண்ணோட வாழ்க்கையும் உங்களாள பலியாகக்கூடாதுங்கற முடிவோட அப்பா அம்மா கிட்ட எல்லா விவரமும் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி ரன்வீர் மற்றும்அன்வர் துணையோட போலீஸ் ஸ்டேஷன்ல கம்ளெய்ண்ட் கொடுத்து உங்கள கையும் களவுமா பிடிக்கத்தான் பர்த்டே பங்ஷனுக்கு கிப்டோட வந்தன். உங்க வீட்டிலும் ஒரு பொண்ணு உன் தங்கை ஸ்ரேயா இருக்காலே அவ வயசு தாண்ட நீ சீரழித்த எல்லா பொண்ணுங்களுக்கும் எப்படிடா அவங்கள வேறமாதிரி பார்க்க முடிஞ்சது உன் தங்கச்சிய வளர்த்துன மாதிரித்தாண்டா அவங்களையும் அவுங்க குடும்பத்துல வளர்த்தி இருப்பாங்க,அந்த பொண்ணுங்க எப்படி எல்லாம் கெஞ்சி இருப்பாங்க ,என்ன பைக்ல இடிச்சு கீழ தள்ளுன ரெண்டு பேர் இந்த பார்டில கலந்துக்கட்டாங்க அப்பவே எல்லாம் கிளியர் ஆயிடுச்சு நீ ப்ளான் பண்ணித்தான் என்ன காதலிச்சேன்னு,ஏண்டா இது எல்லாம் ஒரு பொளப்பா ?ஒங்க அப்பா அம்மா இதுக்குத்தான் சம்பாறிச்சு வச்சாங்களா?என லெப்ட் அண்டு ரைட் வாங்கி விட்டாள் போலீஸ் அனைவரையும் அரஸ்ட் செய்து வேனில் ஏற்றியது.அனைவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டு போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோ விசாரணையில் எடுக்கப்பட்டு குற்றம் ஊர்ஜிதப்படுத்த பட்டு ,விசாரணை அறிக்கையும்,போன்களும்,முதலில் போனில் பார்த்த அன்வர் சாட்சியாகவும் கோர்டில் ஒப்படைக்கப்பட்டு வாத,பிரதிவாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு, நீதிபதி வந்து எல்லோரையும் வணங்கிவிட்டு அமந்தார் குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித் குரூப் அழைக்கப்பட்டனர் அவர்களிடம் நீஙகள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்க ,ரஞ்சித்,அகில்,யாதவ்,அஸ்ரப் மற்றம் கூட்டாளிகள் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றனர்,நீதிபதி தீர்ப்பை வாசித்தார் குற்றம் சுமத்தப்பட்ட இந்த ஆறுபேரின் குற்றம் விசாரணையிலும்,சாட்சிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் மூலமாகவும் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி அவர்களை மனதளவிளும்,உடல் அளவிலும் சீரழித்த ரஞ்சித்,அகில்,யாதவ்,அஸ்ரப் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையும்,அவர்களுக்கு உதவிமட்டும் செய்த கூட்டாளிகள் இரண்டு பேர்க்கும் (சோமு மற்றும் ரவி ரம்யாவை பைக்கில் வந்து மோதி ரஞ்சித் திட்டங்களுக்குதுக்கு  உடந்தையாக இருந்தவர்கள்) பத்து வருடம் கடுங்கால தண்டனையும் கொடுத்து தீர்ப்பளிக்கிறேன்,மனதைரியத்துடன் எதிர்கொண்டு கம்ளைண்ட் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பிடிக்க உதவிய ரம்யாவின் தைரியத்தை வெகுவாக பாராட்டுகிறேன். அதேபோல் தன் அண்ணண் குற்றவாளி எனத்தெரிந்தும் குற்றத்திற்கு துணைபோகாமல் சாட்சி சொன்ன அன்வரையும் வெகுவாக பாராட்டுகிறேன், இது போன்ற பிள்ளைகள் தான் நாட்டிக்கு தேவை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிக்கவேண்டும் என்றும் பெண் பிள்ளைகள் இது போல் நடிப்பவர்களை இனம் கண்டு அவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல், குடும்பத்தையும்,தங்கள் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இச்சம்பவத்தை பாடமாக எடுத்துக்கொண்டு செயல்படவும், அறிவுருத்துகிறேன் என்று தீர்பெழுதிய பேனாமுனையை உடைத்தார்,கோர்ட் கலைகிறது எனகூறி எல்லோருக்கும் வணக்கம் சொல்லி கிளம்பினார்.ரம்யா தான் தப்பியது மட்டுமல்லாமல் இனி ஒருவர் கூட இவர்கள் வலையில் சிக்கி ஏமாறாமல் தடுத்த திருப்தியோடு ரன்வீர்,மற்றும்அன்வரைக் கூட்டிக்கொண்டு சாதித்துவிட்ட களிப்பில் வீட்டுக்கு புறப்பட்டாள்.....(முற்றம்).



Rate this content
Log in

Similar tamil story from Crime