Siva Kumar

Tragedy

4.4  

Siva Kumar

Tragedy

என்னை எனக்கே பிடிக்கவில்லை...!

என்னை எனக்கே பிடிக்கவில்லை...!

4 mins
228


நான் கற்பகம் வயது எழுபது படுத்த படுக்கையாய் கிடக்கிறேன்,பக்கவாதம்

வந்ததில் ஒருபுறம் கை,கால்கள் முடங்கியது,கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகிறது,அவர் இறந்து அடுத்த நான்கு வருடத்திலேயே பாகப் பிறிவினை வந்து இரண்டு மகனும்,ஒரு மகளும் மூன்றாக பங்கி இளைய மகனும்,மகளும் தனத்தனியே சென்று விட்டனர் நிராதரவாய் இருந்த என்னை பெரியவன் சிவராமன் தன்னுடன் வைத்துக்கொண்டன்,மூத்ததாய் பிறந்ததாலோ என்னமோ என் மேல் பாசம் அதிகம்,இப்படி நடந்தது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போது அத்தை இந்தாங்க பால் குடிங்க என்று கூறிய வாரே பால் டம்ளரை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு எனது முதுகை தாங்கி படுக்கையில் தலையணையை சார்த்தி வைத்து என்னை அதில் சாய்த்தவாரே டம்ளரை எடுத்து அவளே மெதுவாக வாயில் கொடுக்க நான் மெல்ல விழுங்கினேன்,வாயிலிருந்து வழிந்ததை தன் சேலை முந்தானையில் துடைத்தவாறு அத்தை நீங்க படுத்திருங்க சமயல் முடித்து அவரையும்,குழந்தைகளையும் அனுப்பிவிட்டு உங்களை குளிக்க வைக்கிறேன்,சொல்லிவிட்டு விரு விரு வென அடுக்களையில் நுளைந்து பிசியானாள் தங்கம்,சிவராமன் கிளார்க்காக மின்சார அலுவலகத்திலும்,மூத்தவள் சாரா பிளஸ் டுவிலும் இளையவள் தாரா பத்திலும் படிக்கிறார்கள் .இப்பொழுது என்னைக் குளிக்கவைப்பது,சோறூட்டுவது,மருந்து கொடுப்பது எல்லாமே தங்கம்தான் சொல்லும் போதே கண்கள் குளமானது,தங்கம் பெயரில் மட்டுமல்ல குணத்திலும் அவள் சொக்கத்தங்கம், மாமியார் என்று பாறாமல் தன் தாயைவிட மேலாக என்னை கவனித்துக்கொள்கிறாள் நான் தான் அவளை புரிந்து கொள்ளாமல் அவளை, மீண்டும் பழைய நினைவுகளுக்கு தாவியது மனது தலையணை நனைத்தது கண்ணீர்,இராமனுக்கும்,சீதாவுக்கும் ஒரே செல்லப்பிள்ளையான தங்கத்தை சிவராமன் காதலித்து திருமணம் செய்து மாலையும் கழுத்துமாக வந்து நின்ற போது

பேய்யாட்டம் ஆடிவிட்டாள் கற்பகம் ,தங்கம் அதிகம் படிக்கவில்லை ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த சராசரி பெண்தான்,ஏண்டா போயும் போயும் உனக்கு இவதாங்கிடைத்தாளா கழுத்திலும் தாலியைத்தவிர ஒன்னயும் காணோம் ,எதகாட்டி மயக்கி ஒன்ன கட்டினாளோ ,இல்லாக்காசு குடும்பத்திலிருந்து ஒரு செல்லா காச கூட்டிவந்திருக்க அப்படியே போயிரு என்று விரட்டி விட்டாள்,சிவராமன் தனியாக வீடெடுத்து குடித்தனம் தொடங்கினான்,நாட்கள் நகர்ந்தது தங்கம் கர்பமாகி முதல் பெண் வாரிசை பெற்றெடுத்தாள். தனக்கு மாஹாலக்ஷ்மி பிறந்ததாக தன் தாயிக்கு வீட்டில் போய் தகவல் சொன்னான்,ஆமா அந்த மூதேவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு தலைசன் வாரிசா ஆண் குழந்தை பெக்காமே பொண்ண பெத்துபோட்டிருக்கா நீ இன்னும் என்னென்ன சீரழிய போராயோ போ என்றால் ,வீடு வந்ததும் தங்கம் ஏங்க அத்தை என்ன சொன்னாங்க என்றாள், ம் போக போக எல்லாம் சரியாகும் என்றவாரே சமாளித்தான் சிவராமன். கற்பகம் குழந்தையை பார்க்க வரவேயில்லை,வருடங்கள் ஓடின இரண்டாவதும் பெண்குழந்தை பிறந்ததும் தங்கம் வீட்டில் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள் இரண்டாம் குழந்தை பிறந்த இரண்டு வருடங்களிலேயே தங்கத்தின் பெற்றோர் உடல் நிலை சரியில்லாமல் முதலில் அப்பாவும்,பிறகு அம்மாவும் மரித்துப்போனார்கள் தங்கம் யாருமற்றவளாய் சிவராமனே கதிஎன இருந்தாள் ,சிவராமன் தந்தை மரணத்தின் போது வந்த உறவினர்கள் கற்பகத்திடம் நீ இன்னும் பிடிவாதமாக இருப்பது சரியில்ல இனி உனக்கு யார் இருக்கா,சிவராமன் தான் உன்கிட்ட பாந்தமா இருந்தான் ,உனக்கு புடிக்காத கல்யாணம் பண்ணிக்கிட்டான் சரி கோவம் இருக்கத்தான் செய்யும் இப்ப இரண்டு பிள்ளை பிறந்த பிறகும் நீ முறுக்கிகிட்டு இருக்கிறது சரியில்லை என்றனர்,சிவராமன்தான் அப்பாவின்சடங்குகளை முன்னின்று நடத்தினான்,உறவுகள் எல்லாம் பேசி சிவராமனையும் தங்கத்தையும் சொந்தவீட்டுக்கே வரவைத்தனர் ,இங்கு வந்தபின்னரும் சிவராமனை ஏற்றுக்கொண்டாலே தவிர தங்கத்தை ஏற்காமல் வருத்தெடுத்தாள் கற்பகம்,சிவராமன் காலையில் அலுவலகம் சென்றால் மாலையில்தான் திரும்புவான்,அதுவரை கற்பகத்தின் ராஜ்ஜியம்தான் ஏண்டி கலுத்துல காதுல ஒன்னும்போட்டுட்டு வரல, இதுல ரெண்டு பொட்டபுள்ள வேற தரித்திரம் தரித்திரம்,எம்புள்ளய ஒருவழி பண்ணாம விடமாட்ட போல,நாளும்,பொழுதும் நின்னா குத்தம்,நிமிர்தா குத்தமுனு சொன்ன மாதிரி வசைபாடாத நாளே இல்லை ,ஒரு முறை சாயங்காலம் வேலை முடிந்து பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் பேசிக்கொணடிருந்தது பொருக்காமல் ஏண்டி தின்னுபோட்டு வேலை,வெட்டி பாக்காம கண்டவ கூட உனக்கென்னடி பேச்சு கட்டைல போறவளே என்றாள்,குடும்பத்துக்குள் பிரச்சனை வராமலிருக்க தங்கம் எதுத்து ஒருவார்த்தை பேசாமல் எல்லாவற்றையும் சிவராமனுக்காக சகித்துக் கொண்டால், தண்ணீீரில் மீன்போல தன் கண்ணீரை யாரும் அறியாவண்ணம் மனதுக்குள் புதைத்துக்கொண்டால், பிள்ளைகள் ஏம்பாட்டி அம்மாவை எப்பவும் திட்டிகிட்டே இருக்க என்றுகேட்க ஆமா பொட்ட முண்டங்க அவள சொன்னா இவளுகளுக்கு பொத்துட்டு வருது போய் வேலையை பாருங்க சனியங்களே என்றாள் கற்பகம் அதிலிருந்து பாட்டி என்றாலே பிள்ளைகளுக்கு அலர்ஜி ,சிவராமனுக்கு இது தெரியாமல் இல்லை ஆனால் வேறு வழியில்லை ,சிவராமன் அலுவலகத்தின்மூலம் லோன் அப்ளை செய்து தனியாக ஐந்து செண்ட் நிலம் வாங்கி அதில் அளவாக வீடும் கட்டினான் அந்த வீடு கிரகப்பிவேஷத்தின் போதுதான் அம்மாவுக்கு பக்கவாதம் வந்தது,ஹாஸ்பிட்டலில் சேர்த்து ஓரளவு குணமாகி வீட்டுக்கு வந்தாள்,ஆப்போதுதான் இனி அம்மா அதிகநாள் இருக்கமாட்டார்கள் என்றும் அதனால் சொத்தை பிரிக்கவும் இளையவர் இரண்டுபேரும் கோரிக்கை வைத்து,இளையவனுக்கு வீட்டையும்,அதற்கு ஈடான பணத்தை இளையவளும்,சிவராமனும் எடுத்துக்கொள்வது என முடிவானது.அம்மாவை யார் பார்பது என்ற போது மாறி மாறி ஒர் ஒருத்தர் வீட்டிலும் இருக்கட்டும் என்றனர் இளையவர் இருவரும்,இல்லை என் வீட்டிற்கே கொண்டுபோய் நான் பார்த்துக்கறேன் என்றான் சிவராமன்,எப்படியோ கொண்டு போனால் சரி என விட்டனர் மற்ற இருவரும்,சிவராமன் அம்மாவை தன்னுடன் கூட்டிச் சென்று அட்டேச்சுடு பாத்ரூமுடன் கூடிய ஒரு ரூமில் அம்மாவுக்கு தேவையான சௌகரியங்களை செய்து கொடுத்தான்,அன்றிலிருந்து இன்று வரை ஒரு குழந்தையைப்போல் கவனித்து வருகிறாள் தங்கம்,கற்பகம் செய்த இயற்கை உபாதைகளை அப்புறப்படுத்துவதிலிருந்து, குளிக்கவைப்பது,செயல் இழந்த கை,கால்களுக்கு எண்ணை தடவி நீவிவிடுவது என்று எதற்கும் முகம் சுளித்ததே இல்லை அதை நினைக்க நினைக்க மனம் விம்மியது,பெற்ற இளைய மகனும்,மகளும் கைகழுவினால் போதும் என்று விட்டு விட்டார்கள் வேறொரு வீட்டில் வளர்ந்த பெண் தன்னை தாயினும் மேலா கவனிக்கிறாளே,இரவு நேரம் கூட கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சங்கடபடாமல் எனது மூத்திரபாத்திரம் சுத்தம் செய்கிறாளே இவளையா நாம் கொடுமைப்படுத்தினோம் நாமெல்லாம் என்ன ஜென்மமோ,சே என்னைய எனக்கே பிடிக்கவில்லை ,நாம் இவ்வளவுகொடுமைப்படுத்தியும்,  பேசகூடாத வார்த்தைகளால் திட்டியும் அதையெல்லாம் பொருத்துக் கொண்டு சிவராமனிடம் கூட சொல்லாம வயசுல சின்னவளா இருந்தாலும் எவ்வளவு பொருப்பா நடந்துக்குறா என்று தன் குற்றஉணர்வு மனதை பிழிய கண்ணீர் விட்டு அழுகிறாள்,அப்பொழுது வேலையெல்லாம் முடிஞ்சுது உங்கள குளிப்பாட்டி விடட்டுமா என்றவாறே வீல் சேரை தள்ளிக்கொண்டு வந்தவள் அத்தை அழுவதை பார்த்து பதறிபோகிறாள் ,என்னாச்சு அத்தை ஏன் அழறீங்க உடம்பு ஏதாவது பண்ணுதா ,முடியலயா என்று தன் சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்தவாறே கேட்க,இல்லடா என்ராசாத்தி நான் உனக்கு எவ்வளவோ கொடுமை செய்தும்,திட்டியும்,வஞ்சித்தும் உனக்கு என்மேல் கோவமே வரலயா?நீ இப்படி உங்க ஆத்தாளுக்கும் மேல கவனிக்கிறத நெனச்சா ,உனக்கு போயி இவ்வளவு கொடும செஞ்சோமேனு என்னைய எனக்கே பிடிக்கல தங்கம் ,என்ன மன்னிச்சுரும்மா உன்னமாதிரி ஒரு மருமக கிடைக்கலனா நான் நாதியத்து போயிருப்பேன் என்றாள் அழுதவாரே,அழுவாதீங்க அத்தை எனக்கு அம்மா,அப்பா ரெண்டுபேறுமே இல்ல ,போய்சேர்ந்துட்டாங்க எங்க அம்மா இப்படி இருந்தா செய்யமாட்டனா, உங்கள என் அம்மாவா தான் பார்க்கிறேன் என்றவாரே கற்பகத்தை தன் மார்போடு அணைத்தாள்,அத்தை பழசையெல்லாம் மறந்திருங்க இப்படி வருந்தி உடம்ப கெடுத்துக்காதீங்க என்றவாரே கைதாங்கலாக பிடித்து வீல்சேரில் உற்காரவைத்து குளியலரைக்கு கூட்டி சென்றாள் தங்கமாக இருக்கும் சொக்கத்தங்கம், இல்லம்மா நீ மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு, நீங்க என்ன மகளா நினைத்தால் இப்படி எல்லாம் பேசாதீங்க உங்க மகளை கண்டிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு ,சரிமா மகளே என்று தன்னை தேற்றிக் கொண்டால் கற்பகம்,அவளிடம் பேசியதில் மனச்சுமை சற்று இறங்கி இருந்தது, முகமும் கொஞ்சம் தெளிவாகி

ஒரு புத்துணர்வை உணர்ந்தால் கற்பகம்.


-முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy