Siva Kumar

Tragedy

5.0  

Siva Kumar

Tragedy

"எனக்காக துடிக்கும் இதயம்".

"எனக்காக துடிக்கும் இதயம்".

5 mins
516



மதிக்கு ஏன்தான் அப்படி ஒரு வியாதி வந்தது என மதனுக்கு தெரியவில்லை

தான் காதலிக்க தொடங்கிய பிறகு இரண்டு மூன்று முறை தன்னுடன் இருக்கும் போதே

மயங்கி விழுந்தால் , கட்டாயப்படுத்தி டாக்டரிடம் செக்கப்புக்கு கூட்டிச் சென்றான்

மதன், டாக்டர் செக்செய்துவிட்டு ...ஸ்கேன் செய்யவேண்டு மென்றாா், ஸ்கேன் செய்து

பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சியான செய்தியை டாக்டர் மதனிடம் சொன்னார்

மதியின் ஆயுள் இன்னும் மூன்று மாதம் மட்டுமே அவளது இதயத்தில் ஓட்டை உள்ளது அதற்கு ஓரே வழி இதயமாற்று ஆப்ரேசன் மட்டுமே.


இந்த தகவலை எப்படி மதியிடம் சொல்வது, மதிக்கென்று யாருமில்லை அப்பா அம்மா 

மதிக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது ஒரு சாலைவிபத்தில் இறந்து போனார்கள் , மதியின் அப்பா கலப்புத்திருமணம் செய்ததால் அம்மா வகை சொந்தங்கள் உறவு அடியோடு அறுந்து போய்விட்டது ,அப்பா வகைச் சொந்தங்களும் தொடர்பில் இல்லை 

அப்பத்தாவின் பாதுகாப்பில்தான் மதி வளர்ந்தாள்.


மதன் கோடீஸ்வரன் வீட்டுப்பையன்,ஒரே பிள்ளை நன்றாக படித்தவன், அவன் ஒரே லட்சியம் ஒரு ஏழைப்பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதுதான் அப்போதுதான் ஒரு அனாதை ஆசிரமத்தில் 

மதியைச் சந்தித்தான், ஒரு அருகருப்பும் இல்லாமல் எல்லா குழந்தைகளையும் குளிப்பித்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடை யெல்லாம் செய்து கொண்டிருந்தாள் , யார் என்று ஆசிரமத்தின் காப்பாளரிடம் கேட்டபோது

மதியைப்பற்றிய விவரங்களை சொல்லி எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்பொழுதெல்லாம் அந்த பொண்ணு இங்க வந்து குழந்தைகளை தன் குழந்தைகளா பார்த்துக்கும் ரொம்ப நல்ல மனசுள்ள பொண்ணு,தான் அப்பா அம்மாவை இழந்து அனாதைபோல் வாழ்வதால் அந்த கஷ்டம்அறிந்து அந்த குழந்தைகள் மேல் ஒரு இனம்புரியாத பாசம் 

என்று கூற மதனுக்கு அவள் மேல் மிகுந்த மரியாதை வர , தனது பிறந்தநாளை அங்கு கொண்டாட வந்த மதன் குழந்தைகளுக்கும்,

மதிக்கும் டிரஸ்களும், அன்றைய மூன்று நேர சாப்பாட்டுக்கான செலவையும் ஏற்று நல்ல பதார்த்தங்களை ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்து கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லோருக்கும் புதிய உடையைக் கொடுக்க

எலலோரும் மதனை வாழ்த்த மதியும் சென்று வாழ்த்த மதிக்கும் உடை வழங்க அய்யோ எனக்கு எதுக்கு நான் இவங்களுக்கு சேவை செய்யத்தான் இங்கு வருகிறேன் என்று சொல்ல, சார் அதை பார்த்திட்டுத்தான் உனக்கும் வாங்கி வந்திருக்கார் பிறந்தநாள் அன்னைக்கு குடுக்கிறார் அவர் மனம் சங்கடபடாம வாங்கிக்கோ மா என எல்லாரும் சொல்ல

வாங்கிக் கொண்டாள்,மதன் மதியின் மனதில் அன்றே எட்டாத உயரத்துக்கு சென்று விட்டான்.


இந்த மாதிரி பணக்காரப்பிள்ளைகள் தன் பிறந்தநாளை ஹோட்டலில் ஹால் புக்செய்து நண்பர்பர்களையும், நண்பிகளையும் அழைத்து மது பார்ட்டியும், டான்ஸ்சும் என்று ஏகத்துக்கும் செலவு செய்கிறார்கள், இந்த மாதிரி அனாதை ஆசிரமங்களில் வந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுக்கும் போது அவர்கள் கூறும் வாழ்த்து அந்த கடவுளின் வாழ்த்தாக இருக்குமே அது ஏன் அவர்களுக்கு புரிவதில்லை, மதன் மட்டும் அதற்கு விதி விலக்காக தன் ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் குழந்தைகளுக்கு தேவையானவைகளை வாங்கிக் கொடுத்து

அன்று முழுதும் அவர்களுடன் இருப்பதை வாடிக்கையாக கொண்டான்.


மதன் அதற்கு பிறகு அந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி வர மதி உடனான நட்பு வளர்ந்து பின் காதலாக மாறியது. அனாதை குழந்தைகள்மேல் அவன் காட்டிய அன்பு அவளுக்கு மதன் மேல் ஆதீத நம்பிக்கையை கொடுத்தது, அவ்வாறாக அவர்கள் காதல் வளர்ந்தது. இன்று இன்னும் மூன்று மாதமே உள்ள நிலையில் அவளுக்கு இதயம் கிடைக்க வேண்டும், தெரிந்த அன்றே புக்செய்து வைத்தாலும் 

அது சீனியாரிட்டி படியே கிடைக்கும், நாட்கள் வேறு புயல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. மதன் மதியிடம் மூன்று மாதத்தில் ஒரு சிரிய ஆபரேசன் அவ்வளவுதான் உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி அதுவரை சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொடுத்தான்.


இரண்டுமாதம் கடந்த நிலையில் இதுவரை அவளுக்கான இதயமோ அதற்கான வாய்ப்போ கிட்டவில்லை, அவளுக்காக மதன் பிரம்மபிரயத்தனப்பட்டும் எல்லாமுயற்சியும் வீணாயின, விபத்து ஏற்பட்டு மூளை இறப்பு ஆனவர்கள் இதயம், வேறு ஏதாவது பிரச்சனைகளினால் மூளை இறப்பு ஏற்பட்டவர்கள் இதயத்தைதான் இதயமாற்றுக்கு உபயோகிப்பார்கள் ஆனாலும் இதயமாற்றுக்காக நிறையப்பேர் காத்திருக்கிறார்கள். மதனுக்கு பைத்தியம்

பிடிக்காத குறை என்ன செய்வதென்று தெரியவில்லை, மதியில்லா வாழ்க்கையை தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை, மதியோ சாவைநோக்கி அடிமேல் அடி வைத்து போய்க்கொண்டிருக்கிறாள்.அது அவளுக்கே தெரியாது. மதனில்லாமல் அவனாலும் வாழமுடியாது.

மதிக்கு ஏதாவது ஆகிவிட்டால் மதன் உயிரோடு இருக்கமாட்டான், 


மதன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் டாக்டரிடம் சென்று டாக்டர் மதியில்லா வாழ்க்கையை என்னால் கனவில் கூட நினைத்துப்பார்க்கமுடியவில்லை, மதி இடையில் மயக்கமடைந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள், நாங்கள் இருவரும் ஒன்னா இருக்கனும்னா ஒரே வழி என் இதயத்தை அவளுக்கு பொருத்தி விடுங்க அவள் உடம்பில் என் இதயத்தில் இருவரும் வாழ்வோம் என்றான் டாக்டர் ஷட் அப் உங்களுக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு உயிரோட இருக்கறவங்க இதயத்தை எப்படி எடுக்கறது, அப்படி எடுத்தா நான் உங்களை கொலை செய்த கேஸில் பர்மனென்டா உள்ள போக வேண்டியதுதான், எனக்கு பைத்தியந்தான் டாக்டர் மதிமேல அவ எப்படியும் சாகப்போறா நீங்களே சொல்லி இருக்கீங்க அவ இல்லாம நான் கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டேன் உங்களுக்கு உயிரோட இருக்கிறதுதான் பிரச்சனைனா நான் இதோ இப்பவவே உயிரை விடுகிறேன் என்று டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்த ஹாலின் கண்ணாடி ஜன்னலை நோக்கி ஓடுகிறான் இதை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர், மதன் மதன் என்று கத்திக்கொண்டே அவரும் ஒட, அவனை பிடிங்க என்கிறாா் வார்டு பாய்கள் வந்து அவனை பிடிப்பதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த ஜன்னல் மூலம் வெளியே குதித்தான்.   

                              தரையில் விழுந்து இரத்தவெள்ளத்தில் கிடக்கிறான் மதன். டாக்டர் பதறியடித்து கீழே வந்து பார்க்க உயிர் இருந்தது நினைவில்லை அவசரமாக ஸ்டெச்சரில் ஏற்றி அவனுக்கு டிரீட்மெண்ட் கொடுக்க நிறைய இடங்களில் எழும்பு முறிவுடன், தலையில் பலத்த அடி ஸ்கேன்செய்து எல்லா டெஸ்ட்களும் எடுத்து பார்த்த போது எந்த உணர்வும் இல்லாமல் மூளைச்சாவடைந்து இதயம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது மதிக்காக...டாக்டர் டயம் வேஸ்ட் பண்ணாமல் உடனே மதனின் பெற்றோருக்கும், போலீஸூக்கும் தகவல் கொடுக்க போலீஸூம் பெற்றோர்களும் வர

இருவரிடமும் நிலமையை விளக்கி மதியை காட்ட மதியும் மயக்கமுற்று சாவைநோக்கி போய்க்கொண்டிருப்பதை சொல்ல, தங்கள் மகன் காதலித்ததே தங்களுக்கு இப்பத்தான் தெரியுமென்றும், முதலில் தெரிந்திருந்தால் வெளிநாடு கூட்டிச்சென்றாவது எவ்வளவு செலவானாலும் மதியை பிழைக்க வைத்திருக்கலாம் என்று சொல்ல,மதன் இப்படிசெய்வான் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கதறிக்கதறி அழ அந்த ஹாஸ்பிட்டலே சோகத்தில் மூழ்கியது. டாக்டர் மதனின் இதயத்தை வைத்து மதியை பிழைக்க வைக்கலாம் ,மதன் பிழைக்க இனி வாய்பே இல்லை அவன் மூளை இறந்துவிட்டது என்று அவர்களுக்கு புரியவைக்க, இன்பெக்டர் அவருக்கான பார்மாலிடீஸ் முடித்து டாக்டரிடமும் பெற்றோரிடமும் ஒப்புதல் வாங்கிக்கொண்டு 

சென்றார்.


மதனின் பெற்றோர் தங்கள் மகன் இனி மதியின் இதயமாக துடிக்கட்டும் என்று அதற்கான பார்மாலிடீஸ்களில் சைன் செய்ய மதனின் இதயத்தை மதிக்கு பொருத்த இருவரையும் ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர், ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பிறகு டாக்டர் இதயமாற்று ஆபரேசன் வெற்றிகரமாய் முடிந்ததாக வெளியே வர, மதியின் அப்பத்தாவுக்கும் 

சொல்லி அனுப்பப்பட்டு நடந்த விவரங்களை டாக்டரும், மதனின் பெற்றோரும் விளக்க, மதி கண்விழிக்க இன்னும் இருபத்தி நாலுமணிநேரம் ஆகும் என டாக்டர் சொல்ல, மதனின் பெற்றோர் மதனுக்கான இறுதி சடங்குகளை நடத்தினர். 


இருபத்தி நான்கு மணிநேரம் கழிந்து மதி கண்விழிக்கிறாள், மதனைத் தேடுகிறாள், மதன் அவளின் இதயமாக துடித்துக்கொண்டிருக்கிறான், அவளுக்கே தெரியாமல், மதன் வெளிநாடு சென்று அங்கிருந்து ஒரு இதயத்தை அனுப்பி வைத்ததாகவும், அதற்காக அவன் ஏற்றுக்கொண்ட வேலைகளை முடித்து வர ஒரு மாதமாகும் என்று பொய் சொல்கிறார் டாக்டர், எந்த அதிர்ச்சியும் இந்த நிலையில் இதயம் தாங்காது என்று ,மதனினின் தாய் தந்தையை அறிமுக படுத்துகிறார், அவர்கள் மகனை நினைத்து அழ அவர்களிடம் ஆன்டி மதன் வந்திருவாரு என்னை பிரிந்து ஒரு நிமிஷம் கூட அவரால் இருக்க முடியாது என்று சொல்ல, ஆமாம் மா உன்னை பிரிஞ்சு ஆவனால இருக்க முடியாது என அழுகின்றனர், அப்பத்தாவிடமும் ஒரு மாதத்திற்கு எந்த சம்பவங்களையும் மதியிடம் கூறக்கூடாது என்று சொல்லியிருந்தனர். அப்பத்தா பேத்தி பிழைத்த சந்தோஷத்திலும், மதன் இறந்த துக்கத்தையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் .....தவித்துக்கொண்டிருந்தார்.


ஒருமாதம் போக டாக்டரிடம் செக்கப் வந்த மதி மதனைகக்குறித்து விசாரிக்க நடந்த விவரங்களை டாக்டர் பக்குவமாக எடுத்தச்சொல் பயங்கர அதிர்ச்சியில் மதி அழுது ஆர்பாட்டம் செய்து ஏன் என்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சீங்க என கேட்க , கூல் டவுன் மதி மதன் இப்படி ஒரு முடிவெடுப்பார் என யாரும் எதிர்பார்க்கல நீங்க சாவ நோக்கி போறத அவரால தாங்கமுடியல, உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நானும் உயிரோட இருக்க மாட்டன்னு சொல்லிட்டே இருந்தாரு அதனாலதான் இப்படி ஒரு முடிவெடுத்து உங்க இதயமா துடிச்சிட்டு இருக்காரு என்று சொன்னதும் , தன் கைகளால் தன் இதயத்தை தொட்டு நோக்க மதி நான் உன்கூடத்தான் இருக்கிறேன், உன்னை விட்டு நிமிஷமும் பிரியாமலிருக்க எனக்கு கிடைத்த ஒரே வழி இது, உன்னை காப்பாத்திட்டேன் மதி, விதி நம்மை பிரிக்க நினைச்சுது நான் விதியையும் தோற்கடிச்சு உன்கிட்ட வந்துட்டேன் இனி அந்த கடவுளே நினைச்சாலும் நம்மை பிரிக்க முடியாது மதி என்று இதயம் துடித்தது......மதி மதனின் காதல் கண்டு கண்ணீர் வடித்தாள், அவன் காதலுக்காக வாழநினைத்தால் இருவரும் ஒரே இதயமாய், அடிக்கடி தன் இதயத்தோடு பேசுவாள் மதனிடம் பேசுவதாய் நினைத்து , அப்பத்தாவுக்கும் வயசாகியதால் மதனின் பெற்றோர் மகனின் இதயத்தோடு வாழும் மதியை தங்கள் மகளாகவே தத்தெடுத்துக்கொண்டனர், அப்பத்தாளையும் தங்களுடனே மதிக்கு துணையாக வைத்துக்கொண்டனர். மதி ஆசிரமத்துக்கு மதன் செய்தவைகளை தொடர்ந்து செய்தாள், மதன் தனக்கு இதயம் கொடுத்த நாளை ஆசிரம பிள்ளைகளுக்கான நாளாய் அர்பணித்தாள், மதி மதனின் பிஸினஸ் எல்லாவற்றையும் கவனித்து மதனின் பெற்றோரை தன் தன் பெற்றோராய் நினைத்து கவனித்துக்கொண்டாள் மகனின் இதயத்தோடு. எல்லோரும் காதலியிடம் இதயத்தை பறி கொடுத்தேன்

என்று சொல்வார்கள், மதன் காதலுக்காய் இதயத்தையே கொடுத்து அவளில் வாழ்கிறான்,அவளின் உயிர்த்துடிப்பாய்......அவள் இறந்து விடுவாளோ என துடியாய் துடித்த இதயம்...இன்றும் அவளின் இறுதி மூச்சுவரை துடித்துக்கொண்டிருக்கும் அவளுக்காக.......


(முற்றும்)



Rate this content
Log in

Similar tamil story from Tragedy