Siva Kumar

Tragedy

4  

Siva Kumar

Tragedy

கொடுமையின் உச்சம்.....!

கொடுமையின் உச்சம்.....!

4 mins
407


சரசு நல்ல ஆஜானு பாகுவான உடம்பு ,உழைத்து பிழைக்கும் ஒரு சராசரி மனுசியாக அவளை கருதமுடியவில்லை, ஏனென்றால் இரண்டு புருஷன்களை மாற்றி மூன்றாவது புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், அனிதா பதிமூன்று, வினிதா ஒன்பது வயசு இரண்டு மகள்களும் மதி என ஏழு வயதில் ஒரு மகனும் முதல் இரு மகள்களும் முதல் புருஷனுக்கோ,இரண்டாவது புருஷனுக்கோ பிறந்திருக்கக் கூடும், பையன் மூன்றாவது புருஷனுக்கு பிறந்தது, கட்டிடவேலைக்கு போயி மாற்றிய புருஷன்கள்தான், இதிலாவது நிலைப்பாள தெரியவில்லை, அவளுக்கு ஆண்களை போன்ற உடம்பு மட்டுமல்ல நல்ல தைரியமும்,பின்னே வீட்டிலேயே தண்ணி அடிக்க தைரியம் வேண்டாமோ,

தனது நெருங்கிய சொந்தத்தில் உள்ள தனது தம்பி மற்றும்அவனது நண்பர்களை

அழைத்து புருஷனோடு சேர்ந்து தண்ணி அடித்து படுத்துக்கொள்வாள். என்ன ஜென்மமோ.


இப்படி வந்து போய்க்கொண்டிருக்கும் தம்பியும் நண்பர்களும், சும்மா இருப்பார்களா, சரசு வேலைக்கு போன சமயங்களில் கூட வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள், இது சரசுவுக்கும் தெரியும் தம்பிதானே என அவளும் கண்டு கொள்ளவில்லை, ஒரு நாள் அந்த அனிதா பதிமூன்று வயதுப்பெண் வீட்டுக்குள் தூக்கில் தொங்கினாள், காரணம் தெரியவில்லை போலீஸ் வந்தது போஸ்ட் மார்டத்திற்காக குழந்தையின் உடல் கொண்டு செல்லப்பட்டது. எல்லோரும் தற்கொலை என்று சொன்னார்கள், ஊரே அதை நம்பியது ஆனால் சில நாள் கழித்து வந்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் ஊரையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, ஆம் அனிதா கூட்டு பலாத்காரத்திற்கு இறையாக்கி கொல்லப்பட்டாள் என்பதுதான் அந்த ரிப்போர்ட் , போலீஸ் புலன் விசாரணை செய்தது எந்த பலனும் இல்லை.


சரியாக ஒருமாதம் கடந்திருக்கும் வினிதா என்கின்ற அந்த ஒன்பது வயசு பெண்ணும்

ஒரு நாள் அதேமாதிரி வீட்டுக்குள் தூக்கில் தொங்கினாள், மறுபடியும் போலீஸ் வந்தது போஸ்ட் மார்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தையும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள் என்ற செய்திகேட்டு ஊரே கொதித்துப் போனது,

போராட்டங்கள் வெடித்தன, பெரிய பெரிய அரசியல் தலைகள் எல்லாம் அந்த சிறிய ஓட்டு வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லிச் சென்றனர்,மாநில தலைவர்களும்,தேசிய தலைவர்களும் அடங்கும், கட்சிகள் சார்ப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது,பத்திரிக்கைகள் தலைப்புப் செய்தியாக வெளியிட எங்கும் இதே பேச்சு, எதிர்கட்சிகள் மிகுந்த பிரச்சனையைக் கிளப்பியது, முதல் சம்பவம் நடந்தபோதே போலீசும்,அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுத்து ஒழுங்கான புலன் விசாரணையை நடத்தியிருந்தால் வினிதாவின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும், சரி ஒரு மரணம் நடந்து ஒரு மாசம் ஆவதற்குள் இரண்டாவது சம்பவம் வீட்டில் உள்ள சரசுவும், மூன்றாவது புருஷன் மருதனும் என்ன செய்தார்கள், எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லையே, பெண்குழந்தைகள் மேல் அக்கரை காட்டியாதாகவும் தெரியவில்லை, ஒரு சம்பவம் நடந்த பிறகாவது வினிதாவை காப்பாற்றி இருக்க முடியுமல்லவா எந்த ஒரு நல்ல தாய் தகப்பனும் அதைத்தானே செய்வார்கள்.


இவர்கள் செய்யவில்லை அப்போ இவர்களும் அதற்கு உடந்தையா ஐயோ தெய்வமே இது அடுக்குமா?, மக்களின் போராட்டமும் கட்சிகளின் போராட்டமும் வலுக்க, போலீசுக்கு நெருக்கடி அதிகமாகி சரசுவின் தம்பி மற்றும் நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்படுகின்றனர், ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர், இந்த ஐவரில் ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவனும், எதிர்கட்சிகள் சும்மா இருக்குமா தர்ணாக்களும், மறியல்களும் , போராட்டங்களும் நடக்க அரசே ஸ்தம்பித்தது, எதிர்கட்சிகள் சாட்சிகளை களைத்து விடுவார்கள் என்று குற்றம் சாட்டியது அதேபோல் விசாரணைகள் மந்தகதியில் நடத்தப்பட்டது, தாயும் தகப்பனும் முதல்வரை காண அழைத்துச் செல்லப்பட்டனர் , அந்தந்த கட்சிகள் சார்பாக குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்தது , அரசால் ஓட்டை ஓட்டு வீடு கான்கிரீட் வீடானது, பையனின் படிப்பு செலவையும் அரசாங்கம் ஏற்றது.

இதற்குள் என்ன நடந்தது தெரியவில்லை, இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது, போராட்டங்கள் குறைந்தன , அவர்கள் நினைவு நாளன்று மட்டும் பேருக்கு நடந்தன, குற்றவாளியாக விசாரிக்கப்பட்டவர்கள் போதுமான சாட்சிகள் இல்லாததனால் விடுவிக்கப்பட்டனர். சாட்சிகளை கலைத்து பணபலத்தாலும் அரசியல் பலத்தாலும் மிரட்டினால் பின் சாட்சி எங்கே இருக்கும், நீதி எங்கே நிலைக்கும். இன்று அந்த குடும்பம் லட்சங்களில் புரள்கிறது, சரசு வடித்ததெல்லாம் நீலிக்கண்ணீர் , அந்த குழந்தைகளை பெற்றது அவள்தான என்ற சந்தேகம் கூட வருகிறது, இன்று ராஜபோகமாக இருக்கிறார்கள். 


என்ன கொடூர வேதனையை அனுபவித்த

அந்த பிஞ்சுகளுக்கு நீதியை இனி கடவுள்தான் கொடுக்கவேண்டும், அரசியில் நடத்தினார்கள்,ஆட்டம் போட்டார்கள் அந்த பிஞ்சுகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு தண்டனை வாங்கித்தரும் வரை ஓயமாட்டோம் என ஒப்பாரி வைத்தார்கள்,கொதித்தெழுந்த மக்களும் கூலாகிபோனார்கள், செய்தவர்களும், செய்ய உடைந்தையாக இருந்தவர்களும் இன்று சாதரணமாக அல்ல மிடுக்காக பவனி வருகிறார்கள், கேட்பார் யாருமில்லை. நடந்ததெல்லாம் வேஷம் தானே,நாடகம்தானே, பணத்தாலும் அரசியல் பலத்தாலும் நீதி முடக்கப்பட்டது உண்மைதானே, அந்த குழந்தைகள் இந்த குடும்பத்தில் வந்து பிறந்தது தவறா, இந்த உலகத்தில் பிறந்ததே தவறா, தூக்கிட்டு சாகும் வயசா அவர்களுக்கு உத்திரத்தில் கயிரை கட்டமுடியுமா, சுருக்குக்கான முடிச்சை இறுக்கும் தெம்பாவது அவர்களுக்கு உண்டா?


பட்டப்பகலில் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளை மாறி,மாறி கொடூரமாக நாசமாக்கி கெட்டித்தூக்கி இருக்கிறார்கள், போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் கூட்டுபலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்கள் என்று ஆணி அடித்தமாதிரி சொல்லி இருக்கிறார்கள். அப்போ இவையெல்லாம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகவில்லையா? இல்லை செல்லுபடியாகமல் செய்து விட்டார்களா? சம்பவம் நடப்பதற்கு முன்பே வீட்டில் வந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார்கள், இவற்றை அறிந்தும் வீட்டில் உள்ளவர் கண்டும் காணமல் இருந்திருக்கிறார்கள். இன்று அக்குழந்தைகளால் கிட்டிய ராஜபோகத்தில் குழந்தைகள் இறந்த ஒரு உறுத்தல் கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எங்கே மனித நேயம், எங்கே அன்பு, எங்கே பாசம், எங்கே புலன் விசாரணை, எங்கே நீதி, எங்கே நேர்மை, மிருகங்கள் வாழும்காட்டில் இவற்றை எதிர்பார்பதுதான் தவறோ? 


நான்கு வருடங்கள் கழித்து கேஸ் சி.பி.ஐ - க்கு கைமாறி உள்ளது , இதுவரை கிடைக்காத நீதி இனிமேலா கிட்டப்போகிறது, நீதியின் மேல் உள்ள நம்பிக்கை குறைகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்குள் ஒரு குற்றவாளி அவன் மனசு உறுத்தியதோ என்னவோ அவனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அரசியல் பலத்தால் காவல்துறை, நீதித்துறையின் கைகள் கட்டப்படுகின்றன, அவர்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்தால் , நீதி எப்பொழுதோ ஜெயித்திருக்கும் இதற்கா ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். மக்களை முட்டாளாக்கும் அப்பட்டமான நாடகங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்று அந்த வீட்டில் நடந்தது நாளை நம்வீட்டில் நடக்காது என்பது என்ன நிட்சயம், பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காலம் எடுத்துரைக்கிறது, உண்மையான புலன் விசாரணையும், தண்டனையும், நீதியும் என்று சாத்தியம்? சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் , சாமனியனுக்கும் நீதி கிட்டவேண்டும், பெற்ற அம்மை,அப்பனே ஆனாலும் தண்டனை கையோடு வழங்கப்படவேணடும், காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும் (Justice delayed Justice denied) ,இவற்றில் கூட தப்பலாம் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது, இது ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது, மனிதர்கள் மேல் நம்பிக்கை போய்விட்டது, இறைவன் நிட்சயம் தண்டனை கொடுப்பான்.....அந்த சின்னஞ்சிறு பிஞ்சுக்களின் ஆத்மாவை சாந்தப்படுத்துவான் , அவர்களின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கிறேன்...மற்றவர்களுக்கு விளிப்புணர்வாக இப்படைப்பை அப்பிஞ்சுகளுக்கு பாதங்களில் சமர்பிக்கிறேன்....நன்றி....



Rate this content
Log in

Similar tamil story from Tragedy