Deepa Sridharan

Crime Thriller

4.7  

Deepa Sridharan

Crime Thriller

ஸ்டிரின்ங்(String)

ஸ்டிரின்ங்(String)

11 mins
35.7K



போலீஸ் சைரனின் சத்தம் அடங்க அந்த ஜீப்பிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் இன்ஸ்பெக்டர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கதவு திறந்திருந்தது. அதற்கு நூறு மீட்டர் தொலைவில் அந்த உடல் கிடந்தது. அவன் கழுத்தைச் சுற்றியிருந்த அந்த ஸ்டிரின்ங் சற்றே தளர்ந்து ரத்தம் உறைந்து கிடந்தது. இன்ஸ்பெக்டர் அவன் மூச்சை ஒருமுறை சோதித்து தீர்மானித்துக் கொண்டார். அவன் முகம் மிகவும் பரிட்சயமான முகம். கைலாஷ், சிட்டியில் அவன் மிகவும் பிரபலமானப் பாடகன். சுற்றிமுற்றி வேறெதுவும் அவர் கண்களுக்குத் தென்படவில்லை. காவல்துறையின் வழக்கமான முறையில் எல்லாம் அங்கு நடந்துமுடிந்தது.

அடுத்த நாள் காலை, ஆர்பேஜியோ(Arpeggio), என்ற அந்த மியூசிக் பேன்ட் அலுவலகத்தில் எல்லாரும் பதட்டத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன் உரிமையாளன், ஆனந்த் தலையில் கைவைத்துக்கொண்டு நியூஸ் சேனலை பார்த்துக்கொண்டிருந்தான்.பிரபல பாடகர் கைலாஷ் கிட்டார் ஸ்டிரின்ங்கால் கழுத்து நெரிபட்டு மரணம். இது கொலையா, தற்கொலையா? என போலீசார் விசாரனை. சமீப காலமாக அவருக்குத் திரைப்படத்தில் பாட வாய்ப்புகள் இல்லாததால், அதிக கடன். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என திரைப்பட வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது, என்று நியூஸ் சானல் அலரிக்கொண்டிருந்தது. அரவிந்த், அந்த பேன்ட்டின் உயிர் நாடியான பேஸ் கிட்டாரிஸ்ட், பாடகன் ஸ்ரீவஸ்த்தனிடம் முகத்தை மூடிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். அரவிந்த்தும் ஆனந்தும் கசின் பிரதர்ஸ்.மியூசிக் கான்சர்டில் அரவிந்த்துக்காக சேரும் கூட்டம் அதிகம். அவனின் வசீகரமும் ஸ்டைலும் அவனுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டத்தைச் சேர்த்துவைத்திருந்தது. ஸ்ரீவஸ்த்தன், மிகவும் அன்டர் ரேட்டட் பாடகன், அவனும் அந்த பேன்டில் ஐந்து ஆண்டுகளாக பாடிக்கொண்டிருக்கிறான். ஆனால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும், ஆனந்த் மெயின் பாடகன் ஒருவனை வெளியில் இருந்து புக் செய்துவிடுவான். ஸ்ரீவஸ்த்தனும், அரவிந்தும் நல்ல நண்பர்கள். டிரம்ஸ் ஜேம்ஸும், புலூட்டிஸ்ட் ஹரீஷும் மொபைலில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கீர்த்தனாவும்,ஷிவரஞ்சிதாவும் அந்த பேன்டின் பெண் பாடகிகள். அவர்கள் எப்போதும் போல கிசுகிசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். 

"ஹேய் காய்ஸ், போலீஸ் வில் பீ ஹியர் இன் தார்ட்டி மினிட்ஸ். நாம எல்லாரும் ஒழுங்கா கோவாப்பரேட் பண்ணனும். கைலாஷ் இன்சிடன்ட் நம்ம கான்ஸர்ட் முடிஞ்சுதான் நடந்திருக்கு. அதனால நம்ம தான் போலீஸின் முதல் டார்கெட். ஸோ ப்லீஸ் கோவாப்பரேட்" என்று சொல்லிவிட்டு டென்ஷா இருந்த எல்லாரையும் பார்த்து வெற்றுப் புன்னகை வீசினான் ஆனந்த்.

இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். அவர் போலீசுக்கே உண்டான சந்தேகப் பார்வையை எல்லோர் மீதும் வீசினார். அங்கிருந்த அனைவருமே சற்றுப் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஆனந்த் இன்ஸ்பெக்டரிடம் வந்து, "ஹலோ சார் நாங்கள் எங்களால் முடிந்த வரை உங்களுக்கு கோவாப்பரேட் செய்கிறோம். நீங்கள் என்ன கேள்விகளை கேட்க வேண்டுமோ கேளுங்கள்" என்றான். இன்ஸ்பெக்டர் ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்தார்.

நேற்று இரவு எத்தனை மணிக்கு கான்சர்ட் முடிந்தது?

பதினொறு மணி இருக்கும் சார் என்றான் அரவிந்த். 

கான்ஸர்ட் முடிந்த உடனேயே கைலாஷ் கிளம்பிவிட்டாரா?

நாங்க எல்லாரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டு அப்புறம்தான் தனித்தனியாக கிளம்பினோம் சார்  என்று கூறினான் ஆனந்த்.

உங்களில் யார் கிட்டாரிஸ்ட் ?

அரவிந்தின் முகம் வியர்த்தது. நான்தான் என்று பயத்துடன் கூறினான்.

உங்களுடைய கிட்டாரை காண்பிக்க முடியுமா?

உடனே அதை எடுத்து வந்து காண்பித்தான் அரவிந்த் . அதை பார்த்துவிட்டு அவன் முகத்தை மீண்டும் பார்த்தார் இன்ஸ்பெக்டர்  . அவன் சற்றே பதட்டத்துடன் இருந்தான். ரிலாக்ஸ் மிஸ்டர் அரவிந்த் என்று கூறினார். 

கைலாஷுக்கு கிட்டார் வாசிக்க தெரியுமா என்று கேட்டார். 

எல்லோரும் இல்லை என்று கோரஸாக,வேகமாக கூறினார்கள். 

இன்ஸ்பெக்டர் அனைவரையும் பார்த்தார். உடனே எல்லோரும் மௌனமாகினார்கள். 

நேற்று கைலாஷுடன் யாராவது கூட சென்றார்களா?

இல்ல சார் கைலாஷோட வீடு ஈ சி.ஆர் ரோட்டில் இருப்பதால் அவன் தனியாகத்தான் அவனது காரில் சென்றான், என்றான் அரவிந்த்.

நேற்று கான்சர்டில் ஏதாவது வினோதமாக நடந்ததா அல்லது கைலாஷ் நடவடிக்கையில் ஏதாவது டிஃபரன்ஸ் தெரிந்ததா? 

அப்படி எல்லாம் எதுவும் நடக்கல சார் என்று ஆனந்த் கூறுவதற்குமுன், டிரம்ஸ் ஜேம்ஸ் இடையில் புகுந்து நேற்று கைலாஷுக்கும் கீர்த்தனாவுக்கும் ஒரு சிறிய சலசலப்பு நடந்தது சார் என்றான். 

"தட்டிஸ் ஜஸ்ட் பிரபொஷனல், என்ன பாடல் பாட வேண்டும் என்பதில் அவர்களுக்குள் ஒரு சிறிய தகராறு நடந்தது, கீர்த்தனா கோபப்பட்டுக் கொண்டு நேற்று கான்சர்டில் பங்கு கொள்ளவில்லை அவள் சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பி விட்டாள். ஆனால் கைலாஷ் அதனால் பெரிதும் பாதித்ததாக தெரியவில்லை. அவன் எப்போதும் போல் பாடி கொடுத்துவிட்டு சென்றான்" என்று ஆனந்த் கூறினான்.

உங்கள் இருவரில் யார் கீர்த்தனா என்று இன்ஸ்பெக்டர் அந்த இரண்டு பெண்மணிகளின் பக்கம் திரும்பினார்.

"நான்தான்",  என்று கீர்த்தனா முன்னே வந்தாள். 

அப்படி என்ன உங்களுக்குள் சண்டை நடந்தது?

சண்டை எல்லாம் ஒன்றும் இல்லை சார் . என்ன பாட்டு பாட வேண்டும் என்பதில் எனக்கும் கைலாஷுக்கும் ஒரு சிறிய மன வேறுபாடு. ஆனால் அவன் கொஞ்சம் அரகன்டாக பேசினான். அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு அவனோடு சேர்ந்து பாட விருப்பம் இல்லாததால் நான் கிளம்பிவிட்டேன், என்றாள் கீர்த்தனா

பின்பு இன்ஸ்பெக்டர் ஆனந்திடம் தனியாக கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு விட்டு கிளம்பிவிட்டார். அவர் அங்கிருந்து வெளியேறுகையில் அனைவரையும் பார்த்து, " இது ஒரு ஃபார்மல் என்கொயரி. தான்ங்க் யூ பார் யூர் கோவாப்பரேஷன். இந்த கேசில் வேறு ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டி இருந்தால் உங்களை யாரை வேண்டுமானாலும் நான் பர்சனலாக தொடர்பு கொள்வேன், இதைப்போன்றே கோவாப்பரேட் செய்தால் நன்றாக இருக்கும் " என்று கூறி விட்டுச் சென்றார்.

அன்று மாலை அந்த இன்ஸ்பெக்டர் அரவிந்தின் வீட்டிற்கு சென்றார். உங்கள் வீட்டை பார்வையிட வேண்டும் என்றார். அனைத்து அறைகளையும் திறந்து காண்பித்தான் அரவிந்த். எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டார் அந்த இன்ஸ்பெக்டர். அவன் படுக்கை அறையில் இரண்டு கிட்டார்கள் இருந்தன. அவை இரண்டையும் தூக்கி அவர் நன்றாக கவனித்துப் பார்த்தார். பின்பு அதை கீழே வைத்துவிட்டு, "உங்களுக்கு கைலாஷை எத்தனை நாளாக தெரியும்?"  என்று கேட்டார். 

"ப்ரொபஷனலா அஞ்சு வருஷமா தெரியும் சார். பல கான்சர்டில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து வொர்க் பண்ணி இருக்கோம், மற்றபடி பர்சனலாக நாங்க ரொம்ப பேசிக்கொள்வதில்லை" என்று கூறினான் அரவிந்த் . அவன் பேச்சில் ஒரு படபடப்பு தெரிந்தது. 

"ஓகே மிஸ்டர் அரவிந்த், சாரி ஃபார் தி டிஸ்டபன்ஸ்" என்று சொல்லி கிளம்பி விட்டார் இன்ஸ்பெக்டர். 

அடுத்து அவர் கீர்த்தனா வீட்டிற்குச் சென்றார். கீர்த்தனா இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பயந்து கொண்டே கதவைத் திறந்தாள். உள்ளே வரலாமா என்று கேட்டார்.

 ப்ளீஸ் என்றாள். 

வீட்டில் யாரும் இல்லையா?

இல்ல சார், என்னுடைய குடும்பம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. நானிங்கு தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். 

உங்கள் அறைகளை சோதனையிட வேண்டும் என்று கூறிக்கொண்டே அவள் படுக்கை அறைக்குள் நுழைந்தார். அவள் படுக்கை அறையில் ஒரு பெரிய செல்ப் இருந்தது அது நிறைய பலவிதமான புத்தகங்கள் இருந்தன. அவளுக்கு அப்பொழுது ஒரு ஃபோன் கால் வந்தது. "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லிவிட்டு அந்த அறைக்கு வெளியே சென்றாள் கீர்த்தனா  . அதற்குள் அவர் அந்த புத்தகங்களை சற்று கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார். சில புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்த்தார். 

அவள், "பின்னீட சம்சாரிக்கும்"  என்று சொல்லி அவசாரமாக போனைத் துண்டித்துவிட்டு அறைக்குள் வந்தாள்.

ஃபோனில் யார்? என்று கேட்டுக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் .

"மை சிஸ்டர்", என்றாள்  கீர்த்தனா. 

வெரி ஸ்டிரேன்ஞ் கலக்சன்ஸ். எல்லா விதமான புத்தகங்களும் படிப்பீங்களோ? என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆமாம், ஐ யம் எ வெரேஷியஸ் ரீடர் என்றாள்.

இன்ஸ்பெக்டர் மற்ற அறைகளை பார்க்கத் தொடங்கினார். 

இதற்கு முன்னாடி கைலாஷூடன் சேர்ந்து பாடி இருக்கிறீர்களா என்று கேட்டார். 

இல்ல சார். நேத்து தான் ஃபர்ஸ்ட் அவரோட பாடுவதாக இருந்தது. மை பேட் லக் பாட முடியாமல் போய்விட்டது. ஹீ இஸ் அன் அமேசிங் சிங்கர் என்றாள். 

"ஓகே கீர்த்தனா வீ வில் மீட் லேட்டர்" என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார் இன்ஸ்பெக்டர் .


பல தீவிர விசாரணைகளுக்குப் பிறகு, கைலாஷூக்கு சமீபகாலமாக நிறைய கடன் இருப்பதும் அவன் அதனால் மிகவும் வருத்தத்தில் இருப்பதும் போலீசுக்கு தெரியவந்தது. அவன் ஏற்கனவே ஒரு முறை, தூக்க மாத்திரை பயன்படுத்தி சியூசைட் கமிட் பண்ண ட்ரை பண்ணதும் போலீஸார் தெரிந்துகொண்டனர். அவன் போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் அதே தூக்க மாத்திரை குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு சந்தேகப்படும்படியாக எந்த ஆதாரமும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. அது சியூசைட் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த சம்பவம் முடிந்தபிறகு, வழக்கம்போல் அந்த மியூசிக் பேன்ட் பல கான்சர்டுகளை நடத்தி வந்தது. ஐந்து மாதங்கள் இருக்கும். அன்று இரவு பெங்களூர்-சென்னை ஹைவேயில் மீண்டும் ஒரு மரணம். கிட்டார் ஸ்டிரின்ங்கால் நெரிக்கப்பட்ட கழுத்து, பாடகன் ரோஹித். 

ஆர்பேஜியோ மியூசிக் பேன்ட்டின் அலுவலகம் உறைந்து கிடந்தது. இன்ஸ்பெக்டர் எல்லாரிடமும் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தார். அனைவரின் முகத்திலும் பயமும் குழப்பமும் நிரம்பி இருந்ததை அவரால் பார்க்க முடிந்தது. ஆனந்த் பயத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தான். நேற்று கான்சர்ட் முடிந்ததும்  ஆனந்துக்கும் ரோஹித்துக்கும் நடந்த சலசலப்பு பற்றி இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டிருந்தார். ரோஹித்துக்குக் கொடுக்கவேண்டிய பேமெண்டில் பிரச்சனை இருந்தது தெரியவந்தது. ஆனந்த் ஒத்துக்கொண்ட பணத்தை கொடுக்காமல் போனதால் வாய் பேச்சு அடிதடி சண்டை வரைக்கும் சென்றது பற்றி டிஸ்கஸ்  செய்து கொண்டிருந்தனர். 

இதுபோன்ற விஷயங்கள் நடப்பது மியூசிக் இன்டஸ்டிரியில் மிக சர்வசாதாரணம் என்றும்,முடிவில் தாங்கள் இரண்டு பேரும் சமாதானாமாகி விட்டதாகவும், அவன் கேட்ட பணத்தை கொடுக்கத் தான் சம்மதித்து விட்டதாகவும் , மற்றபடி ரோஹித்தின் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆனந்த் படபடப்புடன் கூறிக்கொண்டிருந்தான். 

உடனே இன்ஸ்பெக்டர்,  "கைலாஷுக்கும் நீங்கள் புல் பேமண்ட் கொடுக்கவில்லை என்று எனக்குத் தெரியும்" என்றார். ஆனந்த் சற்றே அதிர்ந்து போனான்.

டிரம்ஸ் ஜேம்ஸ், எங்கே இன்ஸ்பெக்டர் தன்னைக் காட்டி கொடுத்துவிடுவாறோ என்று பயந்தான். ஆனால் அவர், "வேறு ஏதாவது சம்பவம் நேற்று நடந்ததா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். 

ஷிவரஞ்சிதாவின் கையை உதறிக்கொண்டு கீர்த்தனா முன் வந்தாள். சார், ரோஹித் ஷிவரஞ்சிதாவுடன் தவறாக நடப்பதற்கு முயற்சி செய்ததாகவும், அவள் அவனை அறைந்து விட்டதாகவும் ஷிவரஞ்சிதா என்னிடம் சொன்னாள் என்றாள். அனைவரும் வியந்து போனார்கள். அங்கிருந்த யாருக்கும் இந்த சம்பவம் நடந்தது தெரிந்திருக்கவில்லை. 

ஷிவரஞ்சிதா கண்களில் கண்ணீர் பெருகியது. "நேற்று அந்த சம்பவம் நடந்தது உண்மைதான் சார்,  ஆனால் அது அதோடு முடிந்துவிட்டது. கான்சர்டில் பாடும்போது எனக்கும் ரோஹித்துக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை நாங்கள் இருவரும் எப்போதும் போல் பாடிவிட்டு கிளம்பிவிட்டோம். எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அழுது கொண்டே கூறினாள் ஷிவரஞ்சிதா. 

அதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தனது குரலை சற்று கடுமையாக்கிக் கொண்டார். 

கைலாஷ் மரணத்திற்கு முன்னாலும் இதுபோல் ஏதாவது சம்பவங்கள் நடந்ததா? நீங்கள் என்னிடம் அதை மறைக்கிறீர்களா என்று கேட்டார்.

ஷிவரஞ்சிதா கண்களை மூடிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கதற ஆரம்பித்தாள்.

கீர்த்தனா, "சார் ஆக்சுவேலி கைலாஷும் ஷிவரஞ்சிதாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவள் ஒன்னும் சொல்லாமல் அவனிடமிருந்து விலகி விட்டதாகவும் ஷிவரஞ்சிதா என்னிடம் அன்று கூறினாள்" என்று தயங்கிக்கொண்டே சொன்னாள். 

ஏன் நீங்கள் இதை என்னிடம் அன்று சொல்லவில்லை என்று இன்ஸ்பெக்டர் வன்மையாக கண்டித்தார். 

இருவரும் என்ன சொல்வது என்று அறியாமல் முழித்தனர். 

"ஓகே இந்த கொலை வழக்கில் உங்கள் எல்லோர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் இருக்கிறது. நீங்கள் யாரும் இந்த ஊரை விட்டு வெளியே போகக்கூடாது. எப்பொழுது வேண்டுமானாலும் நாங்கள் உங்களை வந்து தொடர்பு கொள்வோம். உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்தாலும் என்னிடம் எதையும் மறைக்காமல் வந்து சொல்லவேண்டும்" என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் சென்றார்

கீர்த்தனா ரஞ்சிதாவை அணைத்துக்கொண்டாள். "போலீஸிடம் நாம் உண்மையை கூறுவது நமக்கு நல்லது. நாம் எந்த தவறும் செய்யவில்லை, பின்பு ஏன் நாம் மறைக்க வேண்டும் என்றுதான் அதைப்பற்றி அவரிடம் கூறினேன்" என்றாள் கீர்த்தனா

டோன் கெட் மீ ரான்ங் என்று ஷிவரஞ்சிதாவின் கரங்களை பற்றிக்கொண்டாள்  .

"நான் உன்னை தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை, நீ சொல்வதும் சரிதான். என்மேல் எந்தத் தவறும் இல்லை பின்பு நான் ஏன் பயப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஷிவரஞ்சிதா.

ஸ்ரீவஸ்த்தனும் அரவிந்தும் ஏதோ கிசுசுவென்று பேசிக்கொண்டார்கள். பின்பு அனைவரும் தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

அந்த கேஸை இன்ஸ்பெக்டர் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் இன்ஸ்பெக்டருக்கு எந்த ஆதாரமும், துப்பும் கிடைக்கவில்லை. அதற்குள் இரண்டு மூன்று கான்சர்டுகளை செய்து முடித்தது அந்த மியூசிக் பேன்ட். ஆனால் முன்பு போல் அந்த பேன்டில் வழக்கமாக இருக்கும் சந்தோஷம் இல்லை. அவரவர்கள் பாடிவிட்டு போய்க்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் ப்ளூடிஸ்ட் ஹரிஷுக்கு திருமணம் நடந்தது. பல மாதங்களுக்குப் பிறகு அன்றுதான் அனைவரும் சற்று மகிழ்ச்சியாக இருந்தார்கள். அன்று இரவு அரவிந்தும். ஸ்ரீவஸ்த்தனும் சேர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். தன் திறமையை அவர்கள் குரூப்பும், ஆடியன்சும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும், ஆனந்த் தனக்கு சரியான வாய்ப்புகளை கொடுப்பதில்லை என்றும் ஸ்ரீவஸ்த்தன் புலம்பிக்கொண்டிருந்தான்.

"அப்படியெல்லாம் இல்லை, வீ ஆல் நோ ஹௌ டேலன்டட் யூ ஆர்" என்று அரவிந்த் கூறினான்.

"நீ பேசாதடா, உன்னால் தான் என் குரலை யாரும் பாராட்டுவதில்லை. நீ பிலோ ஆவரேஜ் பேஸ் கிட்டாரிஸ்ட். உன் ஸ்டைல் மற்றும் உடல் ஈர்ப்பில், உனக்கு கேல் ஃபான்ஸ் கிடைத்துவிட்டார்கள். நீ தான் என் திறமைக்கு எதிரி"  என்று கத்திவிட்டு அங்கிருந்து போய்விட்டான் ஸ்ரீவஸ்த்தன் .

அந்த பேன்ட்  சின்ன சின்ன கான்சர்டுகளை  வழக்கம்போல்நடத்திக்கொண்டேயிருந்தார்கள்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, எதேர்ச்சையாக இன்ஸ்பெக்டர் ஷிவரஞ்சிதாவை ஒரு மனநல மருத்துவமனையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தார். அவள் அங்கிருந்து சென்றதும் உள்ளே நுழைந்து மனநல மருத்துவரை சந்தித்தார். அந்த மனநல மருத்துவர் பேஷன்டின் மெடிகல் ஹிஸ்டரி பற்றி யாரிடமும் தான் பேசுவதில்லை என்று கூறினார். இன்ஸ்பெக்டர் இது ஒரு கொலை கேஸ் என்பதால் நீங்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

"நான் அவளுடைய பர்சனல் விஷயங்கள் எதையும் சொல்ல முடியாது ஆனால் அவளுக்கு எந்தவிதமான மெடிகல் கன்டிஷன் என்று மட்டும் சொல்கிறேன்" என்றார் மருத்துவர்.

"ஷீ இஸ் ஸ்கிசோபிரினியாக். பல ஆண்கள் அவளிடம் தவறாக நடந்து கொள்வதாக அவள் கற்பனை செய்து கொள்வாள். அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது ஆனால் பிறரிடம் அப்படி ஒன்று நடந்ததாகவும் தான் அவர்களை அடித்ததாகவும் அல்லது திட்டியதாகவும் கூறுவாள். இது ஒரு சைகாட்டிக் கன்டிஷன். சிலருக்கு அது தெரியவே தெரியாது. அவர்கள் மனம் அப்படி ஒன்று நடந்தது என்று நம்ப ஆரம்பித்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை தாங்கள் தான் கற்பனை செய்து கூறுகிறோம் என்று தெரிந்திருக்கும். ஷிவரஞ்சிதாவுக்கு அந்த கன்டிஷன் தான் அதனால் அவள் இரண்டு வருடங்களாக என்னிடம் ஆலோசனை பெற்று வருகிறாள்"என்று கூறினார்.

 "அவள் தான் கொலை செய்ததாகவோ  அல்லது வேறு ஏதாவது பற்றியோ  உங்களிடம் கூறியது உண்டா" என்று இன்ஸ்பெக்டர் மருத்துவரிடம் கேட்டார்.

"இல்லை கண்டிப்பாக அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் நான் அவளுடன் பல ஹிப்னாடிக் செஷன்ஸ் நடத்தியிருக்கிறேன். அவள் அப்படி சந்தேகப்படும்படி எதையும் என்னிடம் கூறியதில்லை" என்றார் மருத்துவர்.

இன்ஸ்பெக்டர் யோசித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டார். 

அவர் அந்த பேன்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் பலமுறை ஃபாலோ செய்து கொண்டிருந்தார். ரோஹித் கேஸ் இன்னும் முடியவில்லை. ஆனால் அந்த பேன்ட் வழக்கம் போல் பல கான்சர்டுகளை நடத்தத் தொடங்கியது. ஒவ்வொரு கான்சர்ட்டின் போதும் போலீசார் அவர்களை தீவிரமாக பார்வையிட்டது. சில கான்சர்டுகளுக்காக வெளியூரிலிருந்து பாடகர்கள் வந்து பாடி கொடுத்து விட்டுச் சென்றார்கள் அப்படி செல்லும்போது போலீஸ் அவர்களை ஃபாலோ செய்தது. ஆறு மாதங்கள் ஆகியும் அந்த கேஸில் எந்த க்லூவும் கிடைக்கவில்லை.

அன்று மாலை அரவிந்த் அந்த கெஸ்ட் பங்களாவிற்குள் நுழைந்தான். அவனை அணைத்துக்கொண்டு வரவேற்றான் ஆதர்ஷ் மேனன். இருவரும் படுக்கை அறைக்கு சென்றார்கள். 

ஆதர்ஷ, அரவிந்தைப் பார்த்து "ஏன் நீ மிகவும் ஸ்டிரஸாக இருக்கிறாய்" என்று கேட்டான்.

 யூ நோ, கைலாஷ் அண்ட் ரோஹித் இருவருடனும் ஐ ஹேட் செக்ஸ் பிஃபோர் தி இன்சிடன்ட்" என்று பதட்டத்துடன் கூறனான் அரவிந்த். 

எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. கொஞ்ச நாளாவே என்னை யாரோ ஃபாலோ பண்றமாதிரி தோணுது. கொலைகாரனின் அடுத்த டார்கெட் நானாக இருப்பேனோ என்று எனக்கு அச்சம் இருக்கிறது என்று கூறினான் அரவிந்த். 

"டோன்ட் பீ சில்லி" என்று கூறிக்கொண்டே அவனுக்கு முத்தம் தந்து கொண்டிருந்தான் ஆதர்ஷ். தே ஹேட் செக்ஸ். சிறிது நேரம் கழித்து அரவிந்த் அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் கிளம்பிப்போகையில் ஆதர்ஷ் அவனிடம், "எதற்கும் நீ கொஞ்சம் கவனமாக இரு" என்று கூறினான்.

 "ஓகே" என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான் அரவிந்த்.

அன்று இரவு அடுத்த கொலை நடந்து விட்டது. பாடகன் ஆதர்ஷ் மேனன் அவன் வீட்டில் கிட்டார் ஸ்டிரின்ங்கால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான்.

சென்னை முழுவதும் இந்தத் தொடர் கொலைகள் மக்களை பீதிக்குள்ளாக்கியது. எல்லோரும் மன பதற்றத்துடன் இருந்தார்கள் அந்த பேன்ட் இரண்டு மாத காலமாக செயலிழந்து இருந்தது. இன்ஸ்பெக்டர் அரவிந்த் வீட்டிற்கு சென்றார். அரவிந்த் மிகவும் மோசமான நிலையில் இருந்தான். ஒவ்வொரு கொலையும் கிட்டார் ஸ்டிரின்ங்கால் நடப்பதைப் பற்றி அவனுக்கு மிகவும் கவலை இருந்தது. அவன் மீது போலீசார் அதிகமாக சந்தேகத்தில் இருந்தார்கள். அவனை பலமுறை வந்து அதுபற்றி விசாரணை செய்து விட்டு சென்றார்கள். அதனால் அவன் மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். அந்த மூன்று கொலைகளும் நடந்த காலகட்டத்தில் அவன் இரண்டு முறை தன் கிட்டாரை ரிப்பேர் செய்ததாக தகவல்கள் போலீசுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி இன்ஸ்பெக்டர் அவனிடம் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தார். அவன் கிட்டார் பிளேயர்ஸுக்கு இது போன்று ஸ்டிரின்ங்ஸ் பிராபளம் அவ்வப்போது ஏற்படும் என்றும் அவர்கள் அதை ரிப்பேர் செய்ய கொடுத்து வாங்கிக் கொள்வார்கள் என்றும் கூறினான்.

பை தி வே, பிலூட்டிஸ்ட் ஹரீஷ் எங்கே என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

அவன் ஹனிமூனுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிக்கொண்டு ஷில்லான்ங் சென்று விட்டு அங்கேயே பல மாதங்கள் தங்கிவிட்டான் என்றான் அரவிந்த். 

இன்ஸ்பெக்டர் அவனைப்பார்த்து "டோன்ட் வொரி அரவிந்த் வீ வில் சீ  ஹௌ இட் கோஸ்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்து அவர் கீர்த்தனாவின் வீட்டிற்குள் நுழைந்தார். கீர்த்தனாவும் ஆதர்ஷ் மேனனும் திருவனந்தபுரத்தில் பலமுறை மேடைகளில் இணைந்து பாடியிருக்கிறார்கள். இருவருக்கும் மியூசிக்கை தாண்டி ஒரு சிறிய நட்பு இருந்தது. அதனால் ஆதர்ஷ் பற்றி அவளிடம் பல கேள்விகளை இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டிருந்தார். கீர்த்தனாவும் தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கூறினாள்.

அவன் மிகவும் எளிமையான மனிதன், அவனுக்கு எதிரிகள் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. மியூசிக் இன்டஸ்டிரியிலும் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் திருவனந்தபுரத்தில் அவன் மிகவும் ஃபேமஸான சிங்கர் என்று அவள் கூறினாள்.

அதைக் கேட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் அவள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை திடீரெனக் கேட்டார்.

"நீங்களும்  ஆதர்ஷ் மேனனும்  கடந்த எட்டு மாதங்களாக எதுவுமே பேசிக் கொள்ளவில்லை முன்னர் அடிக்கடி போனில் பேசிக்கொள்வீர்களே? ஏன் இந்த இடைவெளி" என்று கேட்டார்.

கீர்த்தனா சற்று அதிர்ச்சி அடைந்தாள். பின்பு சுதாரித்துக் கொண்டாள்.

ஆதர்ஷை தன் தங்கைக்குப் பிடித்திருந்ததால் அவளை அவனுக்கு திருமணம் செய்ய அவர்கள் இரண்டு குடும்பமும் முயன்றதாகவும் அதில் ஆதர்ஷுக்கு விருப்பம் இல்லாததால், அவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை நின்றுவிட்டதாகவும் கூறினாள். 

"ஓகே" என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்றுவிட்டார். 

இன்ஸ்பெக்டர்  ஜீப்பில் ஆழாமாக யோசித்துக்கொண்டே சென்றார்.

அவரின் செல் ஃபோன் ஒலித்தது. 

"என் பெயர் சுனில். நான் மும்பையில் இருந்து பேசுகிறேன். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றி செய்தி பார்த்தேன். நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அது இந்தக் கொலைகளுடன் தொடர்புடையதா என்று எனக்கு தெரியவில்லை. எனினும் இதை உங்களிடம் கூற வேண்டும் என்று தோன்றியது. நான் ஒரு  கிட்டார் ஷாப் வைத்திருக்கிறேன். ர்பேஜியோ பேன்டில் பாடும் பாடகர் ஸ்ரீவஸ்த்தன் என்னிடம் இரண்டு முறை கிட்டார் வாங்கி இருக்கிறார். நான் அதை அவருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்திருக்கிறேன். சென்னையில் இருந்து கொண்டு அவர் எதற்காக இங்கே கிட்டார் வாங்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை .ஆனால் நான் அதைப்பற்றி அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இந்த கொலையை பற்றி பார்த்துவிட்டு எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. அதனால் உங்களை அழைத்தேன்" என்று ஹிந்தியில் கூறினான்.

இனிஸ்பெக்டர் ஸ்ரீவஸ்த்தன் வீட்டிற்கு வண்டியைத் திருப்பினார். அவன் வீட்டில் பாட்டு பாடி பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான்.

இன்ஸ்ப்க்டரை பார்த்ததும் பதட்டத்துடன், "ஹலோ சார்" என்றான் ஸ்ரீவஸ்த்தன்.

 நீங்கள் சமீபத்தில் கிட்டார் எதுவும் புதுசாக வாங்கினீர்களா?

 ஸ்ரீவஸ்த்தன்ன் திகைத்து நின்றான். 

மும்பையில் இருந்து இரண்டு கிட்டார்கள் வாங்கி இருக்கிறீர்கள் அவற்றை நான் பார்க்க முடியுமா?

நான் அதை உடைத்து தூக்கி எறிந்து விட்டேன் என்று கூறினான் ஸ்ரீவஸ்த்தன். இன்ஸ்பெக்டர் அவனை சந்தேகத்தில் பார்த்தார். 

"அரவிந்த் எனக்கு மிகவும் பெஸ்ட் பிரெண்ட். அவன் பிறந்தநாளுக்காக கிஃப்ட் செய்யவேண்டும் என்று முதல் முறை கிட்டார் வாங்கினேன். ஆனால் அவன் புகழின் வெறுப்பு என் நட்பை விட பல மடங்கு அதிகமாக இருந்தது அதனால் அதை உடைத்து தூக்கி எறிந்துவிட்டேன். பின்பு அவன் மீது எந்த தவறும் இல்லை. என் திறமை உண்மை என்றால் ஒரு நாள் இந்த உலகத்திற்கு நான் சிறந்த பாடகன் என்று நிரூபித்துக் காட்டுவேன் என்று புரிந்து கொண்டேன். இரண்டாவது முறை கிட்டார் வாங்கினேன், அதை எப்படியும் அவனுக்குக் கொடுத்து விடவேண்டுமென்று. ஆனால் ஏதோ சந்தர்ப்பங்களால் அவனை சில மாதங்களாக சந்திக்க முடியவில்லை. அதனால் அதைக் கொடுக்க முடியாமல் வீட்டில் வைத்திருந்தேன். போன வாரம் தான் என் தம்பி அதை வந்து எடுத்துக் கொண்டு போனான்" என்று ஸ்ரீவஸ்த்தன் தழும்பிய குரலில் கூறினான்.

ஏன் மும்பையிலிருந்து வாங்கினாய்? உன் தம்பி எங்கே இருக்கிறான் என்று இன்ஸ்பெக்டர்.அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கையில் டிரம்ஸ் ஜேம்ஸ் அங்கே வந்து கொண்டிருந்தான். நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று அவசரமாக கூறினான். 

அரவிந்த் தன்னை வீட்டிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு விட்டான் யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை அவனை நேரில் செல்ல நாங்கள் முயற்சித்தாலும் அவன் வீட்டு கதவைத் திறப்பது இல்லை. எங்களுக்குப் பயமாக இருக்கிறது என்று டிரம்ஸ் ஜேம்ஸ் பதட்டத்துடன் கூறினான். 

இன்ஸ்பெக்டர் வண்டியை எடுப்பதற்கு வேகமாக நடந்து கொண்டிருக்கையில் ஜேம்ஸ் இன்னும் ஒரு விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் கூறினான்.

"சார், அரவிந்த் இஸ் எ கே. என் கல்லூரி நண்பன் வசந்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு போன வாரம்தான் சந்தித்தேன். அவன் தான் இதைப்பற்றி எனக்குக் கூறினான். அவங்க ரெண்டுபேருகக்கும்..." என்று தயங்கினான். 

இன்ஸ்பெக்டர்  அவனை கூர்மையாகப் பார்த்தார்.

"ஆனால் அதை உங்களிடம் கூற வேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. இன்று அரவிந்தின் நிலையைப் பார்த்துவிட்டு உங்களிடம் சொல்வதற்காக வந்தேன்" என்று தயக்கத்துடன் ஜேம்ஸ் கூறினான்.

இருவரும் ஜீப்பில் ஏறி வேகமாக போய்க் கொண்டிருந்தனர். 

"சார் அரவிந்த் வீடு வளசரவாக்கத்தில் இருக்கிறது நீங்கள் ஏன் அடையார் சென்று கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டான் ஜேம்ஸ்.

"கீர்த்தனா வீடு அடையாரில் இருக்கிறது" என்றார் இன்ஸ்பெக்டர். 

ஜேம்ஸ் கூறியதும் இன்ஸ்பெக்டர் நினைவில் பளிச்சென்று தோன்றியது கீர்த்தனா வீட்டில் அவர் புரட்டி பார்த்துக்கொண்டிருந்த " Why straight Women love Gay Romance" என்ற புத்தகமும் இன்னும் வேறு சில கே ரிலேஷன்ஷிப் பற்றிய புத்தகங்களும். 

ஜேம்சுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் கீர்த்தனா வீட்டிற்கு வந்தார்கள்.

கீர்த்தனா கலைந்து கிடந்த அவள் அறையில் உட்கார்ந்துகொண்டு சில நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் புன்னகையும், கண்ணீரும் ஒன்று சேர்ந்து தழும்பிக்கொண்டிருந்தது. அவள் அரவிந்திடம் தன் காதலைச் சொல்லி நிராகரிக்கப்பட்ட அந்த நாளை நினைத்துக்கொண்டாள். அந்த வலியின் ரணம் அவளை கதறச்செய்தது. அடுத்த வினாடியே அவள் மனதில் உதித்தது, அரவிந்த் கைலாஷுடனும், ரோஹித்துடனும், ஆதர்ஷுடனும் இருந்த படுக்கையறை சம்பவங்கள். அரவிந்தின் அந்த பேஷனேட் லவ் மேக்கிங்கும் அவனின் வசீகரப்புன்னகையும் அவளைச் சிரிக்க வைத்தது. அடுத்த வினாடியே அவளின் மூர்க்க முகம் வெளியே தலைக்காட்டியது. கைலாஷையும், ரோஹித்தையும், ஆதர்ஷையும் அவள் கிட்டார் ஸ்டிரின்ங்கால் கழுத்தை நெரித்த காட்சிகள் அவளை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தது. இவ்வாறு மாறி மாறி தன் வெவ்வேறு முகங்களை பிரதிபலித்துக்கொண்டிருந்தாள் கீர்த்தனா. 

காலின்ங் பெல் சத்தம் கேட்டதும் கீர்த்தனா கதவைத் திறந்தாள். அவள் இன்ஸ்பெக்டரை அன்று எதிர்பார்த்திருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் அவளிடம் ஒன்றும் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்தார். கீர்த்தனா வீடு முழுவதும் காலி செய்து எல்லாத்தையும் பேக் செய்து எங்கோ செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் படுக்கை அறைக்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர். அங்கே கிட்டார் ஸ்டிரின்ங்கில் தொங்க விடப்பட்டிருந்த அரவிந்தின் வண்ண வண்ண ஃபோட்டோக்கள் தரையிலிருந்து இன்ஸ்பெக்டரை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன. கீர்த்தனா இன்ஸ்பெக்டரிடம் வந்து தன்னை அரஸ்ட் செய்யும்படி கைகளை நீட்டினாள்.


Rate this content
Log in

Similar tamil story from Crime