Deepa Sridharan

Abstract Drama

4.9  

Deepa Sridharan

Abstract Drama

நான்கு சுவர்கள்

நான்கு சுவர்கள்

4 mins
618


"இட் மைட் லுக் ஆப்ஃ த வால், பட் அவுங்க பிஹேவியர் இஸ் நாட் அன்டர் ஹர் கன்ட்ரோல். மெனெபோசல் சின்ட்ரோம் கௌதம்" ன்னு டாக் ஹரூகா அம்மாவ பாத்தாரு. அம்மா எச்சில முழுங்கிகிட்டே அவர பாத்து மெல்லிசா சிரிச்சிட்டு தலய குனிஞ்சுகிட்டாங்க.

"நான் யுனிவர்சிட்டி போனதுக்கப்றம் வீட்ட விட்டு எங்கயாவது போய்டறாங்க, அப்றம் திரும்பி வரதுக்கு வழி தெரியாம எந்த ரோட்லயாவது நின்னுட்டு இருக்காங்க. நல்லவேள இங்க  பெரிய இன்டியன் கம்யூனிட்டி இருக்கறதால எல்லாரருக்கும் அம்மாவ தெரியும். சோ, யாராவது பாத்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்றாங்க. ஆனா எப்போ யார்கிட்டருந்து என்ன கால் வருமோன்னு ரொம்ப பயமா இருக்கு டாக்" ன்னு மூஞ்சிய சுளிச்சுகிட்டே சொன்னப்போ அவர் என்ன பாத்து "வீட்ல யாரயாவது ஹெல்ப்புக்கு வெச்சுக்கோ கௌதம், அவாள பாத்துக்கறதுக்கு, இந்த மாதிரி நேரத்துல எமோஷனல் சப்போர்ட் ரொம்ப முக்கியம்" ன்னு சொல்லிட்டு ஏதோ மாத்ரய எழுதிக்குடுத்தாரு. 

அம்மா ஒதட்ட கடிச்சுகிட்டே அவுங்க ஷேர்ட் காலர சரி பண்ணிவிட்டுக்கிட்டாங்க. டாக் எங்க பக்கத்து யூனிட்ல தான் இருக்காரு. அம்மா கத்தறதெல்லாம் என்னிக்காவது அவர் காதுல விழாமலா இருந்துருக்கும்! "பை த வே ஒன்னோட ஸ்பேஸ் ரீசேர்ச் எல்லாம் எப்படி போயிண்டு இருக்கு" ன்னு என்ன பாத்து சிரிச்சாரு. "இன்ட்ரஸ்டின்ங்கா, என்ட்லெஸ்ஸா போகுது டாக். நெறய இருக்கு இந்த யுனீவர்ஸ்ல தெரிஞ்சுக்க" ன்னேன். "ஆல்வேஸ்" ன்னு அம்மாவ பாத்து தலையச்சாரு. அம்மாவும் பதிலுக்கு தலைய அசச்சுட்டு எழுந்தாங்க.

டாக்டர் ஹரூகா ஒயராமா வெள்ளையா நரச்ச முடியோட பாக்க வசீகரமா இருந்தாரு. அவருக்கு   அம்பத்தஞ்சு அம்பத்தெட்டு வயசு இருக்கும். கைனகாலஜிஸ்ட். இங்க சுகர் லேண்ட்ல இருக்கற எல்லா இன்டியன்சுக்கும் அவர் தான் டீஃபால்ட் கைனக்காலஜிஸ்ட். ரொம்ப ஃபிரென்ட்லியான டாக்டர். நான் இங்க வந்த புதுசுல அவரோட ரெண்டு மூனு தடவ பேசியிருக்கேன். வெரி ப்ராக்மேட்டிக் பேர்சன். என்னடா பேரு ஹரூகான்னு இருக்கு ஆனா நல்லா தமிழ் பேசற இந்தியனா இருக்காரேன்னு வந்த புதுசுல கணேஷ் அன்ங்க்கில் கிட்ட கேட்டப்போ, அவரு பத்து வருஷதுக்கு முன்னாடி யாரோ ஜப்பானீஸ் லேடிய கல்யாணம் பண்ணிகிட்டு ஹரின்ங்ற தன்னோட பேர ஹரூகான்னு மாத்திவெச்சுகிட்டார்னு சொன்னாரு. ஆனா நான் இங்க வந்த நாலு வருஷத்துல என்னவோ அவரு தனியாதான் இருக்காரு. அவர பத்தி இங்க நெறைய காசிப்ஸ் கேட்டுருக்கேன். அதனாலதான் என்னவோ அவர் இந்த கம்யூனிட்டில நடக்கற நல்லது கெட்டது எதுலயும் கலந்துக்கிட்டு நான் பாத்ததில்ல.

அம்மாவ கிளினிக்லருந்து கூட்டிட்டு வீட்டுக்கு வர்ர வழியில, பக்கத்து அப்பார்ட்மன்ட்ல இருக்ற கீதா ஆன்ட்டி எங்கள பாத்துட்டு வேகமா வந்தாங்க. "கௌதம், நேத்திக்கு நளினி பார்க்குல ராபர்ட் கிட்ட கத்தி கத்தி சண்டபோட்டு செருப்பல்லாம் தூக்கி காமிச்சு, ச்சீஈஈ நம்ம இன்டியன்ஸ் பேரே நாறிப்போச்சு. லாக் ஹர் இன் த ஹவுஸ் ஐ சே" ன்னு அவுங்க சிடுசிடுன்னு சொன்னப்போ அம்மாவ அடிக்கலாமான்னு இருந்துது. அம்மா எதுவுமே பேசல. கீழ விழுந்து கெடந்த அந்த ரெட் கலர் ஆட்டம் லீவ்ஸ பாத்துகிட்டே அமைதியா என்னோட நடந்து வந்தாங்க. அம்மாவ அந்த பேண்ட் ஷேர்ட்ல பாத்தப்போ டிப்பிக்கல் கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் வுமன் மாதிரி இருந்தாங்க. நானும் அம்மாவும் சிரிச்சு பேசியே பல வருஷம் ஆகுது. இப்பல்லாம் அம்மா எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுறாங்க. ஒரு நேரம் நல்லா பேசுவாங்க அடுத்த நிமிஷமே எதுக்காவது கத்துவாங்க. இன்னிக்கு இப்ப பாக்ற அம்மா எவ்வளவு நாகரீகமா அமைதியா இருக்காங்க. இதுதான் அவங்க. 

அம்பது வயசு ஆகுது அம்மாக்கு. சாந்தமான மொகம். சிரிச்சா முத்த வெச்சு இருக்கி கட்ண செயின் மாதிரி வரிசயான பல்லு, நீளமா அடர்த்தியா முடி. நான் ஸ்கூல் படிக்கும்போது அவுங்கதான் எனக்கு ஆறு வருஷம் தமிழ் டீச்சர். அவங்கள புடிக்காத ஸ்டூடன்சே அப்ப எங்க ஸ்கூல்ல கெடயாது. அம்மா பெரிய அறிவாளியெல்லாம் இல்ல. ஆனா அவுங்க தமிழ் கிளாஸ் இன்ட்ரஸ்டின்ங்கா இருக்கும்.  இன்னிக்கும் நான் தமிழ் நாவல்ஸ்லாம் படிக்க அவுங்க தான் இன்ஸ்பிரேஷன். அம்மா நல்ல ஒயரம். அந்த பவளக்கல்லு மூக்குத்தி அவுங்க நீளமான மூக்க கிள்ளிக்கோன்னு இன்னும் எடுத்துக்காமிக்கும். அவுங்க காட்டன் பொடவ கட்டி அதுக்கு மேட்சிங்கா ஆக்சசரீஸ் போட்டு ஸ்கூலுக்கு வருவாங்க. அத பாக்கறதுக்குன்னே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனா என்னவிட அம்மா கொஞ்சம் கலர் கம்மிதான். நான் அப்பா மாதிரி கொஞ்சம் வெள்ள கலர். இங்க வந்த கொஞ்ச நாள்ளயே அம்மா ரொம்ப சேன்ஜ் ஆயிட்டாங்க, மாடர்ன் டிரஸ், நுனி நாக்குல இன்ங்லிஷ், சட்டில் பாடி லேன்ங்குவேஜ்ன்னு.

அப்பான்னு சொல்லும்போது தான் எனக்கு நியாபகம் வருது. நாளைக்கு அப்பாக்கு திவசம். ஒரு வருஷம் ஆச்சு. ஹார்ட் அட்டாக்குல எறந்துட்டாங்க. அதுக்கப்றம் அம்மா என்னோட இங்க டெக்சஸ்லயே தங்கிட்டாங்க. அம்மாவோட இந்த பிஹேவியர அப்பா எப்படித்தான் சகிச்சுக்கிட்டாங்களோ? நான் இங்க வந்த புதுசுல ஒரு தடவை ஃபோன் பண்ணி "அப்பப்போ வீட்ட விட்டு எங்கயாவது ஓடிப்போய்டறாடா, அக்கம்பக்கத்துல தல காட்ட முடியல, மானம் போகுதுடா" ன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுக்டாங்க அப்பா.

வீட்டுக்கு வந்து கதவ தெறந்ததும் அம்மா கிட்சனுக்கு போயி சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க. டின்ங்டின்ங் டின்ங்டின்ங் ன்னு என்னோட செல் ஃபோன் டேபிள் மேல ஸ்கேட்டின்ங் பண்ணிச்சு. அத எடுத்து "ஹேய் அத்தை எப்படி இருக்கீங்க" ன்னேன். "நல்லாருக்கேன்டா, நாளைக்கு நீயும் நளினியும் எத்தன மணிக்கு வர்ரீங்க? பூஜைக்கு அப்றம் அம்பது பேருக்கு லன்ஞ்சுக்கு அரேன்ஞ் பண்ணிருக்கேன். எல்லாம் ரெடி, நளினிய காலைல அட்லீஸ்ட் வெரதமாது இருக்க சொல்லு" ன்னு அட்லீஸ்ட்ட அழுத்த்த்த்தமா சொன்னாங்க. "ஓகே அத்தை" ன்னு கட் பண்ணும்போது 'கற்பூறம் நாறுமோ கமலப்பூ நாறுமோ'ன்னு கிட்சன்லருந்து அம்மா கொரல் சுவத்தை கிழிச்சுட்டு கசிஞ்சுது. கூடவே உருளைக்கெழங்கு பொரியல் வாசமும் மூக்க தொளச்சுது. இங்க வந்ததுலருந்து அம்மா அடிக்கடி பாடறாங்க. அம்மா பெரிய சின்ங்ர்லாம் இல்ல, ஆனா கர்னாட்டிக் மியூசிக் கத்துக்கிட்டுருக்காங்க. இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் அம்மா அமைதியா இருக்கனும். எதாவது கத்தி கித்தி வெச்சா மானம் போய்டும். யூக்கலிப்டஸ் ஆயில எடுத்து தலைல தேச்சுட்டு லேப்டாப்ப எடுத்து என்னோட வேலய பாக்க ஆரம்பிச்சேன். 

அடுத்த நாள் காலைல அம்மாவும் நானும் அத்தை வீட்டுக்குள்ள நொழையும்போது ஏதோ சென்னைல நுங்கம்பாக்கத்துல இருந்த எங்க வீட்டுக்குள்ள நொழையற ஃபீலின்ங் வந்துது. ஐயரோட மந்திரம், ஊதுபத்தி பொக, சாம்பார் வடை வாசம், கலர் கலரா பொடவை, வெள்ள வேஷ்டின்னு அந்த சுகர் லேண்ட்ல இருந்த தமிழ் உருவம் அத்தனையும் அங்க குடியேறியிருந்துது. கூடவே லிப்ஸ்டிக் கலர்சும், தூக்கலான பெர்ஃப்யூம் வாசமும் இருந்ததால என்ன பாக்கறதுக்கு எல்லாம் கொஞ்சம் கேலிகிராஃபி பண்ண தமிழ் உருவமா இருந்துது. அத்தை இங்க வந்து படிச்சு, வேல பாத்து கல்யாணம் பண்ணி செட்டிலாகியிருந்தாங்க. முப்பது வருஷமா இருக்காங்க, அ வெல் நோன் எக்கானமிஸ்ட் இன் சுகர் லேண்ட்.  அவுங்கள தெரியாதவங்களே இந்த கம்யூனிட்டில இருக்க மாட்டாங்க. அப்பா, அத்தை ரெண்டு பேரூமே பயங்கர ஜீனியஸ், நல்ல படிப்பு, வேல, சம்பளம். அவுங்க ரெண்டு பேருந்தான் என்னோட கரியர் மோட்டிவேஷன்.

அம்மா ஸ்கை ப்லூ கலர்ல காட்டன் பொடவை கட்டி, கொண்டை போட்டு, மேட்சின்ங் ஆக்சசரீஸ்லாம் போட்டு, பத்து வருஷத்துக்கு முன்னாடி பாத்த தமிழ் டீச்சர் மாதிரியே இருந்தாங்க. ஆனாலும் அப்பாவோட மொதல் வருஷ திவசத்துக்கு அம்மா இப்படி டிரஸ் பண்ணியிருக்கறது கொஞ்சம் எம்பேரசின்ங்காதான் இருந்துது. எங்கள பாத்ததும் அத்தை வாசலுக்கு வந்து அம்மாவ கட்டிகிட்டு லைட்டா அழுதாங்க. அம்மா கண்ணுல ஒரு பொட்டு தண்ணீ வரல.

அப்பா ஃபோட்டவ பாத்துட்டு லிவ்வின்ங் ரூம்ல இருந்த சோஃபால போய் ஒக்காந்துகிட்டாங்க. எல்லாரும் இன்ங்லீஷ் கலந்த ஹைப்ரிட் தமிழ் ல்ல பேசிட்டுருந்தாங்க. "அவர் ஒய்ஃப்ப வரச்சொல்லுங்கோ, ஹோம குண்டத்துல எள்ளும் ஐலமும் தெளிக்கனும்" னு கத்துனார் ஐயர். திடீர்னு வீடே அமைதிக்குள்ள பொதஞ்சு போச்சு. நான் அம்மாவ கூட்டிட்டு வந்தேன். அம்மா அங்க இருந்த அப்பா ஃபோட்டோவையே வெறிச்சு பாத்தாங்க. 

அப்பா நல்ல கலரா, ஒயரமா கருப்பு கோர்ட் போட்டுட்டு இருந்தாங்க. இன்டியாலயே ஒன் ஆஃப் த லீடின்ங் லாயர். திடீர்னு அம்மா அந்த ஃபோட்டோவ எடுத்து கீழ போட்டு சுக்குநூறா நொறுக்கிட்டு திரும்பவும் போய் சோஃபால ஒக்காந்துகிட்டாங்க. நாங்கள்ளாம் அவுங்கள தடுக்கற ஒரு செகன்ட்ல எல்லாம் நடந்து போச்சு. அடுத்த செகன்டே நுங்கம்பாக்கம் வீடாருந்த அத்தை வீடு முகமூடிய கிழிச்சுகிட்டு சுகர் லேண்ட் வீடா வெறிச்சோடி கெடந்துது. 

அத்தை வீட்டு கடிகாரத்துல நொடி முள் என்னோட ஹார்ட் பீட்டுக்கு மேட்சின்ங் ஃப்ரீக்வென்சில சத்தம் போட்டு நகந்துட்டு இருந்தது. அத்தையும் மாமாவும் தலைல கைய வெச்சுகிட்டு ஒக்காந்துருந்தாங்க. என்னோட ஒடம்ப, வெக்கம் கூனி குறுக்கி வளச்சுப்போட்டுது. அம்மா யூ ட்யூப்ல எதோ பாட்டு கேட்டு ரசிச்சுட்டுருந்தாங்க. அத்தயோட முப்பது வருஷ ரெப்யூடேஷன் போச்சு. ஹோம குண்டம் புஸ்ஸ்ஸ்ன்னு பொகஞ்சுட்டு இருந்துது. அதுக்கும் மேல என்னால அங்க அசிங்க பட்டு நிக்க முடியல. நான் அம்மாவ கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கெளம்பிட்டேன்.

காரோட சேந்து கீதா ஆன்ட்டி சொன்னதும் என்னோட மனசுல ஓடிக்கிட்டே இருந்துது. "லாக் ஹர் இன் த ஹவுஸ்". அம்மா வீட்டுக்கு வந்ததும் படுத்து தூங்கிட்டாங்க. 

எனக்கு வெவரம் தெரிஞ்சதுலேருந்து அம்மாவும் அப்பாவும் ரொம்ப சண்ட போட்டு நான் பாத்ததில்ல. அப்றம் ஏன் இன்னிக்கு அம்மா அப்பா ஃபோட்டோவ ஒடச்சாங்க? எனக்கு ஆத்ரமா வந்துது. வீட்ட விட்டு வெளிய போனேன். என்னோட ஃபிரண்ட் வில்ல மீட் பண்ணி நடந்ததெல்லாம் சொன்னேன். "வாட் த டாக் இஸ் சேயின்ங்" ன்னா வில். "அவருக்கென்ன ஈசியா ஹெல்ப்புக்கு ஆள் வெச்சுக்கோன்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டாரு, ஹெல்ப்பருக்கு யாரு பே பண்றது. என்னோட பிஹெச்டி ஸ்காலர்ஷிப் அன்ட் பார் டைம் ஜாப்ல அதெல்லாம் கட்டுபடியாகுமா. அது மட்டுமில்ல எனக்கு இந்த மெனெபோஸ் விஷயம் பத்தி எல்லாம் யார்டயாவது பேசவே என்னவோ மாதிரி இருக்கு. இதுல யார்கிட்ட என்னத்த சொல்லி ஹெல்ப்புக்கு ஆள் தேடறது" ன்னேன். (ஆஆஆ இன்ங்லிஷ்ல தான் சொன்னேன்). "டோன்ட் வொரி டூட், யூ வில் கெட் த்ரூ திஸ்" ன்னா வில். இன்னும் கொஞ்ச நேரம் அவங்கிட்ட பேசிட்டு, வீட்டுக்கு வந்து நானும் தூங்கிட்டேன்.

அடுத்த நாள் காலைலயே எந்திரிச்சு, பிரேக் ஃபாஸ்ட், லன்ச் எல்லாம் ரூமுக்குள்ள வெச்சு, அம்மாவ அந்த ரூம்ல பூட்டிட்டு யுனிவர்சிட்டிக்கு கெளம்பிட்டேன். கார் ஓட்டும்போது மனசுக்குள்ள கில்ட்டும் சேந்து ஒடிச்சு. யுனிவர்சிட்டி போனதும் அம்மா நியாபகம் மறந்து போச்சு. ஈவினின்ங் வேலய முடிச்சுட்டு கார எடுக்கும்போது அம்மா மூஞ்சி வந்து கண்ணத்துல பளாஆஆர்னு அறஞ்சுது. கார வேகமா ஓட்டுனேன். வீட்டுக்கு போயி ரூம் கதவ தெறந்தேன். அம்மா சாப்பாடு தட்ட தூக்கி போட்டுட்டு வெளிய வந்தாங்க. என்னவோ சம்மந்தமே இல்லாம கத்துனாங்க. அப்றம் அமைதியாய்டாங்க.

நான் கார்ல மறந்து வெச்சுட்டு வந்த என்னோட லாப்டாப்ப எடுக்க வெளிய போனப்போ டாக் ஜாகின்ங் போய்ட்டு திரும்பி வந்துட்டுருந்தாரு. "ஹேய் கௌதம் ஹௌஸ் யுஅர் மாம்" ன்னாரு. "நாட் மச் இம்ப்ரூவ்மென்ட்" ன்னேன். "டூ வீக்ஸ ப்ரேக் எடுக்க போறேன் கௌதம். நெக்ஸ்ட் மன்த் ஸ்டார்டின்ங்ல அம்மாவ கூட்டின்டு க்ளினிக் வா. ஹார்மோனல் தெரபி பத்தி டிஸ்கஸ் பண்லாம்." ன்னாரு. எனக்கு இந்த விஷயத்துல எத பத்தியும் டிஸ்கஸ் பண்ணவே எரிச்சலா இருந்துது. இந்த விஷயத்த அத்தை டேக் கேர் பண்ணா நல்லாருக்கும்னு தோணிச்சு. "அவுங்க கிட்ட நன்னா பேசு. பீ தேர் ஃபார் ஹர்" ன்னாரு. "ஓகே டாக்" ன்னு அவரு கண்ண பாக்காம எங்கயோ பாத்து சொல்லிட்டு சட்டுன்னு உள்ள போய்ட்டேன்.

அடுத்த நாளும் அம்மாவ ரூமுக்குள்ள வெச்சு பூட்டிட்டு கெளம்பிட்டேன். ஈவினின்ங் வந்து கதவ தெறந்தப்போ அம்மா பெருசா ஒன்னும் ரியாக்ட் பண்ணல. ரொம்ப நாள் கழிச்சு எங்கிட்ட படபடன்னு பேசினாங்க. என்னோட ரிசர்ச் பத்தி கேட்டாங்க. டின்னர் முடிச்சுட்டு படுத்து தூங்கிட்டாங்க. எனக்கு அது கொஞ்சம் வித்யாசம தோனிச்சு. எனிவே, யார் கிட்டருந்தும் கம்ப்ளெய்ண்ட் வராம இருக்கே அதுவே பெரிய நிம்மதி. 

அப்டி இப்டின்னு ரெண்டு வாரம் ஓடிப்போச்சு. இப்பல்லாம் அம்மாவ ரூமுக்குள்ள வெச்சு பூட்டிட்டுப்போறது அவ்ளவா கில்டியா இல்ல. அம்மாவும் அத பத்தி பெருசா கண்டுக்கறதில்லை. லேப்லருந்து கெளம்பும் போது, வில் எரிச்சலோட வந்தான். "டூட், கேர்ல்ஸ் எவால்வ் வெரி ஃபாஸ்ட், ஐ கான்ட் புட் அப் வித் தெம்" ன்னு அவன் பத்தாவது கேர்ல் ஃப்ரெண்ட் அனுப்பியிருந்த மெசேஜ்ஜ காமிச்சான். நான் "குட் லக்" ன்னு சொல்லிட்டு கெளம்புனேன். அவனும் என்னோட வந்து கார்ல ஒக்காந்துகிட்டான். "சுகர் லேண்டுல நைட் ட்ரைவின்ங் இருக்கே, அதுவும் ஆட்டம் டைம்ல, அது ஒரு தனி சுகம். கண்ணாடி வழியா சிட்டி இரவு வெளிச்சத்தப் பாக்கறப்போ மனுஷ மூளையோட பிராமாண்டம் ஜொலிக்கற மாதிரி இருக்கு" ன்னு வில் கிட்ட சொன்னேன். அவனுக்கு ஒன்னும் புரியல, புருவத்த தூக்கி என்ன பாத்தான். 

அன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்து கதவ தெறந்தப்போ ஒரு ரணகளமே நடந்துது. அம்மா கைல கெடச்சதெல்லாம் தூக்கி எறிஞ்சு கத்துனாங்க. கெட்ட கெட்ட வார்த்தையா பேசுனாங்க. எனக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு. அடுத்த நாள் கார் எடுக்கும்போது டாக்க பாத்தேன். க்ளினிக் போக ஆரம்பிச்சுட்டீங்களான்னு கேட்டேன். "ஓஓஓ யா நேத்துலருந்து போய்ண்டுருக்கேன் கௌதம்" ன்னார். "அம்மாவ இன்னிக்கு கூட்டிட்டு வரட்டா?" ன்னேன். "ஷூஅர்" ன்னு சிரிச்சுட்டே போனாரு டாக்.

நான் வீட்டுக்குள்ள போனப்போ அம்மா அவங்கள பூட்டி வெச்சுருந்த ரூம் ஜன்னல் பக்கத்துல ரெஸ்ட்லெஸ்ஸா ஒக்காந்துருந்தாங்க. "அம்மா, டாக்டர்ட போனும் கெளம்பு" ன்னேன். அம்மா நகரல. எவ்வளவு சொன்னாலும் கேக்கல. அந்த எடத்தவிட்டு நகராம ஒக்காந்துருந்தாங்க. அந்த நாலு சுவத்துக்குள்ள அவுங்க அப்டி இறுக்கமா ஒக்காந்துருக்கறத பாக்கும்போது எனக்கு கதி கலங்கிச்சு. அம்மாவ வீட்ல வெச்சு பூட்டிட்டு வேகமா க்ளினிக்குக்கு போனேன். 

"ஹேய் கௌதம் அம்மாவ கூட்டிண்டு வரலயா?" ன்னாரு டாக். சேர்ல ஒக்காந்து மூஞ்சிய தொடச்சுகிட்டேன். "டாக் நான் அம்மாவ ரெண்டு வாரமா ரூம்ல வெச்சு பூட்டிட்டு தான் யுனிவர்சிட்டிக்கு போறேன். இதுவரைக்கும் ஒன்னும் ப்ரச்சனயில்லாம இருந்துது. பட் நேத்துலருந்து அம்மா ரொம்ப வயலன்ட்டா இருக்காங்க. அந்த ரூம விட்டு வெளிய வரமாட்டேங்கராங்க" ன்னு தட்டுதடுமாறி சொல்லி முடிச்சேன். "ரிடிகுலஸ், நீ படிச்சவன்தானடா? இப்டி பண்ணலாமா? சரி வா நான் ஓங்காத்துக்கு வந்து அம்மாவ பாக்கறே" ன்னு வேகமா கெளம்பினாரு டாக். 

வீட்டுக்கு வந்து ரூம தெறந்தோம். அம்மா மொபைல்ல ஏதோ இன்ஸ்ட்ருமென்ட் மியூசிக் கேட்டுட்டு இருந்தாங்க. டாக்க பாத்ததும் வேகமா வந்து, "உங்களுக்கு இது என்ன இன்ஸ்ட்ருமென்ட்ன்னு ரெககனைஸ் பண்ண முடியுதா டாக்டர்?" னு கேட்டாங்க. டாக் ஒரு நிமிஷம் அம்மாவ ஆச்சரியமா பாத்தாரு. "தெரியலயா" ன்னு அம்மா கேட்டாங்க. 

"இட்ஸ் கோட்டோ, ஜாப்பனீஸ் இன்ஸ்ட்ருமென்ட்" ன்னாரு டாக்.

 "இந்த அப்பார்ட்மெண்ட்ல இத யாருக்காவது வாசிக்க தெரியுமா டாக்டர்?" ன்னாங்க அம்மா. 

"நீங்க மொபைல்ல ரெக்கார்ட் பண்ணி வெச்சுண்டுருக்கறது நான் வாசிச்சதுதான்" னாரு டாக். 

அம்மா மூஞ்சில அப்டி ஒரு ப்ரகாசம்.

"என்னோட எங்காத்துக்கு வாங்களேன், ஐ வில் ஷோ யூ த இன்ஸ்ட்ரூமென்ட்" ன்னாரு டாக். 

அம்மா பல்லு தெரியாம லைட்டா ஸ்மைல் பண்ணிட்டே தலைய ஆட்டிட்டு அந்த ஜன்னல் பக்கத்துல போய் ஒக்காந்துகிட்டாங்க. 

டாக்கும் நானும் லிவ்வின்ங் ரூமுக்கு போனோம். 

"மெனெபோசல் சைக்காசிஸ்' அவா மைன்ட் அந்த மியூசிக்ல ஒறஞ்சு போய்ருக்கு, அது இந்த ரூம்ல நடந்ததால அவாளால இங்கருந்து வெளிய வர முடியல. இட் வில் டேக் சம் டைம் கௌதம். கன்டிஷன் கொஞ்சம் சிவியராதான் இருக்கு. ஈஸ்ட்ரோஜன் டிப்லீஷன்னால வர்ர மென்டல் கன்டிஷன் தான். ஹார்மோனல் தெரபி குடுத்துடலாம். பட் அதுக்கு முன்னாடி அவாள இந்த ரூம விட்டு வெளிய கூட்டிண்டு வரனும்" ன்னு சொல்லிட்டே டாக் நெத்திய தடவிட்டு யோசிச்சாரு. 

"நான் வேனா கோட்டோவ இங்க எடுத்துண்டு வந்து வாசிச்சு பாக்கறேன். வீ வில் ட்ரை ஃபார் ஏ வீக் அன்ட் சீ" ன்னாரு.

 "பட் என்னால இன்னும் ரெண்டு மாசத்துக்கு லீவ் போட முடியாது" ன்னேன். 

அவரு என்ன பாத்து "டோன்ட் வொரி ஐ வில் டேக் கேர். எனக்கு ஃப்ரீ டைம் இருக்கறச்ச நானே இங்க வந்து பாத்துக்கறேன். ஆத்து சாவி மட்டும் என்ங்கிட்ட குடுத்துட்டு போ, இன் கேஸ் அவா கதவ தெறக்கலைன்னா... பை த வே இனிமே அவாள ரூம்ல வெச்சு பூட்டாத" ன்னாரு. "

நான் அட்வைஸ் பண்றேன்னு நெனைக்கலைன்னா கேன் ஐ டெல் யூ சம்தின்ங்" ன்னு என்ன ஆழமா பாத்தாரு டாக். ப்லீஸ் சொல்லுங்க ன்னேன். ஐ தின்க் இந்த மெனோபாசல் விஷயத்த பத்தி பேசறச்சே யூ ஃபீல் அப்ஹோரன்ட்" ன்னு என்ன பாத்தாரு, நான் கொஞ்சம் அசடு வழிஞ்சேன். "யூ நோ கௌதம், இந்த மாதிரி பெண்கள் சரீரம் சார்ந்த மெடிக்கல் விஷயங்களை நெறய ஆண்கள் தெரிஞ்சுக்க விரும்பறதில்ல. தே தின்க் இட்ஸ் விமென்லி தின்ங். இந்த மனப்பாங்குலேருந்து எல்லா ஆண்களும் வெளிய வரனும். பெண்கள் ஏன் தெரியுமா சட்டுன்னு எவால்வ் ஆகிக்கறா, அவா இது ஆண்கள் விஷயம்னு எதயும் ஒதுக்கறதில்ல, எல்லாத்தயும் அவா தெரிஞ்சுக்க, உள் வாங்கிக்க முயற்சி பண்ணின்டே இருக்கா. தட்ஸ் தி ரீசன். நீங்கள்ளாம் ஏதோ நெறய ஃபேன்சியா படிக்கறேள். உண்மையான கல்வியோட வெற்றி என்ன தெரியுமா? 'இன்க்லியூசிவ்நஸ் அட் வேரியஸ் லெவல்', தின்க் வெல்"ன்னு சொல்லிட்டு டாக் கெளம்பினாரு. எனக்கு அப்பாடான்னு இருந்துது. டாக் போனதுக்கப்றம், அம்மா "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" ன்னு பாட ஆரம்பிச்சாங்க. 

அடுத்த நாள் காலைல யுனீவர்சிட்டிக்கு போகும்போது, க்ளினிக் போய், டாக்க பாத்து வீட்டு சாவிய குடுத்தேன். "ஆல் ரைட்" டுன்னு வாங்கி வெச்சுகிட்டு வேகமா எங்கயோ கெளம்பிட்டு இருந்தாரு. நான் அவரையே பாத்துட்டு நின்னேன். 

"சாரி கௌதம், ஐ அம் இன் ஏ ரஷ் பாயல் அகர்வால் ஆத்துக்கு போயிண்டுருக்கேன். அவா ஹப்பிக்கு ஒடம்பு சரியில்ல, சோ பாயலால க்ளினிக் வர முடியல. நான் தான் போயி பாக்கனும்' னு சொல்லிக்கிட்டே வேகமா வெளிய போய்ட்டாரு.

எனக்கு  ரெண்டு வாரத்துல ஒரு கான்ஃப்ரன்ஸ் இருந்துது. பயங்கர வேல, ப்ரசன்டேஷனுக்கு ரெடி பண்ணிட்டுருந்தேன். டாக் நல்ல நேரத்துல ஹெல்ப் பண்ணாரு. நைட் வீட்டுக்கு வந்தப்போ அம்மா மொகத்துல அப்டி ஒரு அமைதி. அன்னிக்கு ரெண்டு பேரும் சேந்து சாப்டோம். அம்மா அத்தய பத்தி விசாரிச்சாங்க. அப்பாடா இந்த மாதிரி ஒரு சூழல்ல இருந்து எவ்ளோ நாளாயிருந்துது. சாப்டுட்டு அம்மா எல்லாத்தையும் க்ளீன் பண்ணி வெச்சாங்க. என்னதான் ப்ராப்லம் இருந்தாலும் எப்போதும் வீட்ட சும்மா பளிங்கு மாதிரி தொடச்சு நீட்டா வெச்சுருப்பாங்க அம்மா. அப்பா ரொம்ப ஆர்கனைஸ்ட். அவருகிட்டருந்து அம்மாக்கு இந்த கொணம் வந்துருக்கனும். அம்மா "குட் நைட்"ன்னு சொல்லிட்டு ரூம்குள்ள போய்ட்டாங்க.

ரெண்டு வாரம் ஓடிப்போனதே எனக்கு தெரியல. டெய்லி நைட்டு தூங்க மட்டுந்தான் வீட்டுக்கு வந்தேன். அன்னிக்கு ப்ரசன்டேஷன் லாம் முடிச்ச சந்தோஷத்துல வீட்டுக்கு ஈவினின்ங்கே வந்துட்டுருந்தேன். வர்ர வழியில ஒரு பேக்கரிய பாத்தப்போ அம்மாக்கு ப்ரௌனி புடிக்குமேன்னு நியாபகம் வந்து பேக்கரிக்குள்ள போனேன். கணேஷ் அன்க்கில் அவரோட பேரனோட டோநட் சாப்டுட்டு இருந்தாரு. "என்ன கௌதம் ரெண்டு வாரமா வீட்ல ஒரே கச்சேரிதான் போல. வர்ர தீபாவளி செலிப்ரேஷன்ல நளினியயும் டாக்கயும் சேந்து ஒரு ப்ரோக்ராம் பண்ண சொல்லிடலாம் என்ன" ன்னு நக்கலா என்ன பாத்து கண்ணடிச்சாரு.

அப்போதான் எனக்கு டாக்கோட நியாபகம் வந்துது. டாக் இன்னும் வீட்டுக்கு வராரா? ஏதோ மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்கறேன்னு சொன்னாரே. ப்ரௌனிய வாங்கிட்டு கார எடுத்தேன். ஆட்டம் ஈவினின்ங் கலர்ஃபுல்லா இருந்தது. ரோட்டோட ரெண்டு பக்கமும் எல மழை பெஞ்ச மாதிரி.

நான் வீட்டுக்குள்ள நொழஞ்சப்போ மூடியிருந்த ரூம்குள்ளருந்து சிரிப்பு சத்தம் கேட்டுது. நான் கதவ தட்டிடுட்டு உள்ள போனேன். அம்மா ஜன்னல் பாக்கத்துல ஒக்காந்து சிரிச்சிட்டு இருந்தாங்க. டாக் ஏதோ ஸ்கூல் டெஸ்க் மாதிரி இருந்த இன்ஸ்ட்ரூமென்ட் முன்னாடி நின்னுட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. என்ன பாத்ததும் அம்மா அமைதியாய்டாங்க.

"ஹேய் கௌதம் ப்ரசென்ட்டேஷன் எல்லாம் எப்டி போச்சு" ன்னாரு டாக்.

"குட்" ன்னு சொல்லிட்டு அந்த இன்ஸ்ட்ரூமென்ட் பக்கத்துல வந்தேன். உட்டன் டெஸ்க்ல ஸ்ட்ரின்ங்ஸ கட்டிவெச்ச மாதிரி இருந்துது. "சாரி இந்த இன்ஸ்ட்ரூமென்ட் பேரு என்ன சொன்னீங்க, நான் மறந்துட்டேன்" னேன். 

"கோட்டோ" ன்னு அத வாசிச்சு காட்னாரு டாக். அதுல 13 ஸ்ட்ரின்ங்ஸ் இருந்துது. கேக்கறதுக்கு நம்ம ஊரு யாழ் இசை மாதிரியே இருந்துது. 

பை த வே ஒங்கம்மா அட்டகாசமா பாடறாங்க. அவா நாலெட்ஜ் இன் மியூசிக் இஸ் ஃபினாமினல்" ன்னாரு டாக்

 "அம்மா எப்டி இருக்காங்க? எனி இம்ப்ரூவ்மென்ட்?" டுனு டாக் காதுல ரகசியமா கேட்டேன். 

"பெட்டர். இன்னும் ஒரு வீக் பாத்துட்டு தெரபி ஆரம்பிச்சுடலாம்" னாரு டாக். 

தான்க்கியூ வெரி மச் ஃபார் யுஅர் டைம்" ன்னேன். 

"மை ப்லெஷர்னு" கெளம்பிட்டாரு டாக்.

அடுத்த நாள் யுனிவர்சிட்டில இருக்கும்போது அம்மாவும் டாக்கும் என்ன பேசிக்கறாங்கன்னு கேக்கனும்னு ஒரு அசிங்கமான எண்ணம் என் மனசுக்குள்ள பூதாகாரமா எழுந்து நின்னுது. ஈவினின்ங் சீக்கிரமே கெளம்பி வீட்டுக்குப் போனேன். மெதுவா கதவ தெறந்தேன். ஏதோ பேச்சுக்கொரல் கேட்டுது. மூடியிருந்த அந்த ரூமுக்கு பக்கத்துல போயி நின்னேன். எதுதாப்ல கிளாஸ் ஸ்லைடின்ங் டோர்ல இருந்த என் மொகம் என்ன அசிங்கமா பாத்துது. "அவர் என்ன எதுக்குமே அப்ரிஷியேட்டே பண்ணதில்ல. எதுக்கெடுத்தாலும் மட்டந்தட்டிட்டே இருப்பாரு. அதோட தாக்கம் என்ன ரொம்ப பாதிச்சுது" ன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. "இது என்ன அப்டி ஒரு பெரிய தாக்கமா?" ன்னு என் மனசு கேட்டுது. 

"அவர் மட்டுமில்ல இந்த வீட்ல யாருமே என்ன இன்னிவரைக்கும் எதுக்குமே அப்ரிஷியேட்டே பண்ணதில்ல" ன்னு அடுத்த சென்டன்ஸ அம்மா சொன்னப்போ என்னோட உருவம் அந்த கண்ணாடி டோர்ல நெளிஞ்சு அகோரமா தெரிஞ்சத பாத்தேன். ஏதோ ர ஒரு அன்னோன் ஸ்பேஸ் ஆப்ஜெக்ட் வந்து என்ன தாக்குன மாதிரி இருந்துது. நான் டக்குன்னு கதவ தட்டிட்டு உள்ள நொழஞ்சேன். அம்மா பேசறத பட்டுன்னு நிறுத்திட்டாங்க. 

"என்ன கௌதம் இன்னிக்கு ரொம்ப சீக்ரம் வந்துட்ட?" ன்னு டாக் அம்மா பக்கத்துலருந்து எழுந்தாரு. 

"வீக் என்ட் இட்ச்சின்ங்" ன்னு அவர பாத்து சிரிச்சேன். 

"காட் இட்," ன்னாரு. 

"சரி நீங்க பேசிட்டு இருங்க நான் மேல ரூமுக்குப் போறேன்" னு அங்கருந்து வெளிய வந்துட்டேன். 

கொஞ்ச நேரத்துல டாக்கும் கெளம்பிட்டாரு. நைட் டின்னர் சாப்டும்போது "அம்மா நீங்க எப்ப பாட்டு கத்துக்கிட்டீங்க?" ன்னு கேட்டேன். 

அம்மா பரபரன்னு ஏன் பக்கத்துல வந்து ஒக்காந்தாங்க. "நான் சிக்ஸ்த் ஸ்டேன்ட்டர்ட் படிக்கும்போது பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன். பத்த்த்து வருஷம் கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கும்போது நெறய காம்படீஷன்ஸ் வின் பண்ணிருக்கேன். மெட்ராஸ் மியூசிக் அகெடமில மார்கழி மாச கச்சேரி பண்ணிருக்கேன். அப்ப வந்த டிடி டீவில ஒரு ட்ராமால கூட டைட்டில் சான்ங் பாடியிருக்கேன்டாஆஆ" ன்னு படபடன்னு வெடிச்சாங்க. அம்மா கண்ணுல பளீர்னு ஒரு மின்னல் தெரிச்சுது.

 "நீங்க இதப்பத்தி எங்கிட்ட சொன்னதேயில்ல?" ன்னேன். "நீ பொறக்கறத்துக்கு முன்னாடியே பாட்டெல்லாம் மூட்ட கட்டி வெச்சுட்டேன்டா" ன்னு எழுந்து உள்ள போய்ட்டாங்க. "ஏம்மா?" ன்னு கேக்க வந்தத லபக்குன்னு முழுங்கிட்டேன். எங்க அப்பாவ காரணமா சொல்லிடுவாங்களோன்னு ஒரு பதட்டம் எனக்குள்ள. அன்னிக்கு நைட் நான் சரியா தூங்கல.

அந்த வீக் என்ட் அம்மா கொஞ்சம் சிடுசிடுன்னு இருந்தாங்க. அந்த ரூம விட்டு ரொம்ப வெளிய வரல. டாக்கும் ஏதோ வேலன்னு வீட்டுக்கு வரல. சன்டே நைட் அம்மாக்கும் எனக்கும் சண்டை வந்துருச்சு. ஒன்னுமில்ல எப்போதும் தோசைக்கு சட்னியோட சாம்பாரும் வெப்பிபீங்களே இன்னிக்கு ஏன் வெக்கலன்னு சாதாரணமாத்தான் கேட்டேன். அதுக்கு அம்மா வீட்டயே சந்தகட ஆக்கிட்டாங்க. எனக்கு தலை வலிக்க ஆரம்பிச்சுது. இந்த ஃபேஸ் ஆஃப் லைஃப் இன்னும் எத்தன நாளைக்கோன்னு நெனச்சுகிட்டே தூங்கிட்டேன். 

அடுத்த நாளும் அம்மாவும் டாக்கும் பேசறத கேக்கனும்ங்கற முதுகுப்பூச்சி ஸ்பைன்ல ஊறி அரிக்க ஆரம்பிச்சுது. இந்த மாதிரியான தரங்கெட்ட வேலைங்கள செய்ய நினைக்கிறப்ப மட்டும் மனுசங்க ப்ரொகாஸ்டினேட்டே பண்றதில்ல. வேகமா வீட்டுக்குப் போனேன். மெதுவா கதவ தெறந்து அந்த ரூம் பக்கத்துல போயி நின்னேன்.

"லாஸ்ட் ஒன் இயரா எங்களுக்குள்ள செக்ஸே இல்ல. எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் சுத்தமா சோயிடுச்சு அன்ட் வஜைனல் ட்ரைனஸ் வேற, ரொம்ப பெயின்ஃபுல்லா இருந்துது. ஆனா அவரால புரிஞ்சுக்க முடியல. அடிக்கடி சண்ட வரும். சோ ஹீ ஹேட் சம் செக்ஸ்ஷீஅல் அஃப்பெயர்" ன்னு அம்மா முடிக்கறதுக்குள்ள நான் அங்கருந்து கெளம்பிட்டேன். 

கார எடுத்துட்டு வேகமா ஓட்டுனேன். எங்க போறேன்னு தெரியாம ஓட்டிட்டே இருந்தேன். ஒரு பார்க்ல போயி ஒக்காந்தேன். அம்மாவால இந்த விஷயத்தல்லாம் டாக்கிட்ட எப்படி ஃப்ரீயா பேச முடியுது? அவங்களுக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப்? எதுவா இருந்தா என்ன? அது அம்மாவோட இஷ்டம் இல்லயா? அத்தை கேட்டா என்ன சொல்றது? இனி இந்த கம்யூனிட்டில எப்படி எல்லாரயும் பாத்து சகஜமா பேசப்போறேன்? அம்மாவும் அப்பாவும் இருபத்தஞ்சு வருஷம் சேந்து வாழ்ந்துருக்காங்க, அந்த வாழ்க்கைக்கு ஒரு மரியாத வேண்டாமா? அய்யோஓஓஓஓ எத்தன கேள்விங்க எனக்குள்ள. 

மானம், பயம், வரட்டு கௌரவம், மேல் ஈகோன்னு நாலு சுவர்களுகுள்ள என்னோட மனசு புழுங்க ஆரம்பிச்சுது. அந்த பார்க்கே எனக்கு இன்விசிபிலா இருந்துது. நான் அந்த நாலு சுவர்களுக்குள்ளயே நடந்தேன். என்னால அதுலேருந்து வெளிய வரமுடியல. இந்த யூனீவர்ஸே ஒரு க்லோஸ்டு சிஸ்டம் மாதிரி தோனிச்சு. திரும்பவும் கார எடுத்துட்டு அதுக்குள்ளேயே வேகமா ஓட்ட ஆரம்பிச்சேன். 

ஒரு டூ அவர்ஸ இருக்கும் திரும்ப வீட்டுக்குள்ள வந்தப்போ, இன்னுமும் அந்த ரூம் மூடிதான் இருந்துது. மெல்லிசா ஏதோ பாட்டு சத்தம் கேட்டுது. கதவ தெறந்தேன். அம்மா டாக் தோள்ள சாஞ்சுகிட்டு" துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" ன்னு பாடிட்டு  இருந்தாங்க. என்ன பாத்தப்பறமும் எந்த பதட்டமும் இல்லாம பாட்ட நிறுத்தாம பாடிகிட்டே இருந்தாங்க. டாக் வெரல ஒதட்டு மேல வெச்சு பேசாதன்னு எனக்கு சைக காட்டினாரு. நான் கதவ மூடிட்டு ஹாலுக்கு வந்தேன்

 அந்த கோட்டோவோட சத்தம் ரூமுக்குள்ளருந்து பாஞ்சு வந்து என்ன தாக்கிச்சு. அப்பாவோட ஃபோட்டோ ஃப்ரேமுக்குள்ள அவர அச்சு வாத்த மாதிரி என்னோட மூஞ்சி யோட ரிஃப்லெக்ஷன். தாக்கம்ங்கறது எவ்வளவு மல்டி லேயர்டு வார்த்தை ன்னு எனக்கு அப்போ புரிஞ்சுது! திரும்பி அந்த வீட்ட விட்டு வெளிய போனேன். 

அம்மா அந்த நாலு சுவர்களுக்குள்ள அவளுங்கான ஒரு புது ஒலகத்த தேடி பறந்துட்டு இருகாங்கங்க. அது ரொம்ப பெரிய ஒலகம். அதுல அவுங்களுக்கான ஸ்பேசும் அதிகம்னு என்னோட நாலு சுவர்களுக்குள்ள எதிரொலிச்சுது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract