Arivuchelvan viswanathan

Horror Crime

4  

Arivuchelvan viswanathan

Horror Crime

துளசி பள்ளம் பைக் பயணம் 1

துளசி பள்ளம் பைக் பயணம் 1

3 mins
644


அவன் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தான் திடீரென வெளியே ஏதோ சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து எழுந்து வந்து சன்னலைத் திறந்து என்னவென்று பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை. மழை தூறிக் கொண்டிருந்தது மின்னல் மின்னி கொண்டிருந்தது ஆனால் வெளியே ஏதோ ஒன்று நடக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது ஜன்னலை சாத்திவிட்டு ஹால் டியூப்லைட்டை உயிர்ப்பித்து விட்டு வாசற் கதவை திறந்தான், கையில் டார்ச் லைட் எடுத்து கொண்டான்.


வெளியே வந்து வீட்டின் முன்புறமுள்ள கார்டன் பகுதியில் டார்ச் லைட் அடித்து என்ன என பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கரண்ட் கட்டாகி விட்டது. அந்தப் பகுதி இருளில் மூழ்கியது. மழைத் தூரல் சற்று அதிகமானது இடியும் மின்னலும் கூடிக் கொண்டே போனது எங்கோ நாய் ஊளை இடும் சத்தமும் அவனுக்குள் பயத்தை ஏற்படுத்த கண்ணில் கலக்கம் தெரிந்தது . சில்லு வண்டுகளின் சத்தமும் காற்றில் பறந்த சருகுகளின் சத்தமும் அவனை மிரட்டி எடுத்தது. அவன் நனைந்து போன முகத்தை ஒரு கையால் வழித்து விட்டு வேக வேகமாக வீட்டு வாசலை நோக்கி நடந்தான்.


அப்போது அவன் பின்னே யாரோ வருவது போல் இருக்க சட்டென்று திரும்பிப் பார்த்தான். என்ன கொடுமை ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது. டார்ச் லைட் வெளிச்சத்தை அந்த உருவத்தின் மீது பாய்ச்சினான், அதிர்ந்து போனான். அந்த உருவத்தின் முகம் சிதைந்து கண்களில் ஒன்று பிதுங்கி வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது. உதடுகள் கிழிந்து ஓநாய் போன்ற பற்கள் தெரிய

சிவப்பான இரத்தமும் கோழையும் ஒழுகிக்கொண்டிருந்தது. நெஞ்செலும்புகள் உடைந்து ஓட்டை வழியே பாதி நுரையீரலும் கொஞ்சமாய் இதயமும் துருத்திக்கொண்டு தெரிந்தது அந்த இடத்திலிருந்து இரத்தம் கொத கொதவென கொட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கொடூர உருவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவனை நோக்கிப் பாய்ந்த அந்த உருவம் அவன் குரல்வளையை நறுக்கென்று கடித்தது அவன் கையிலிருந்து டார்ச் லைட் கீழே விழுந்து அரைகுறை வெளிச்சத்தில் அந்த கொடூரம் தெரிந்தது .

ராஜேஷிற்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது intermission என்ற எழுத்துக்கள் திரையில் ஒளிர்ந்து திரையில் படம் அனைந்து போக... .. திரையரங்கத்தில் மெலிதான வெளிச்சம் பரவியது. தியேட்டரில் அமர்ந்திருந்தவர்கள் கேண்டினிற்கும் டாய்லெட்க்கும் எழுந்து செல்லத் தொடங்கினார்கள். ராஜேஷ் எழுந்து கேண்டீன் பக்கம் வந்து நின்றான் தனக்குத் தானே பேசிக் கொண்டான்" யப்பா.... படம் பயங்கரமா இருக்கு மனசெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு பேசாம வீட்டுக்கு கிளம்பி விட வேண்டியதுதான்"

மெல்ல தியேட்டரின் வாசலுக்கு வந்து நின்றான் அங்கே நின்றுகொண்டிருந்த செக்யூரிட்டியிடம் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லி வெளியே வந்தான். பைக் ஸ்டாண்டின் உள்ளே சென்று பைக்கை வெளியே தள்ளிக் கொண்டு வந்தான். டேங்க் கவரிலிருந்து துணியை எடுத்து சீட்டை நன்றாக துடைத்து விட்டு துணியை உள்ளே வைத்துவிட்டு அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தான்.


வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்து போய் மழைமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தது ஜில்லென்ற காற்று வீசியது. உடம்புக்குள் ஊடுருவிச் சென்றது குளிர். சீக்கிரமாய் மழை வருவதற்குள் வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு ராஜேஷ் திரும்பி வந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றைய நாள் அவனுக்கு சற்று வித்தியாசமாகத்தான் பட்டது. பைக்கில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலேட்டரை முறுக்கி கருப்பு பாய்போல் விரிந்து நீண்டு கிடந்த ரோட்டில் பைக்கை விரட்டிக் கொண்டு சென்றான்.

சிறிது தூரம் சென்றிருப்பான் ஒரு சிறுவன் சாலையோரத்தில் நின்று கொண்டு கையை ஆட்ட பைக்கின் வேகத்தை மெல்ல குறைத்து அந்தப் பையனின் அருகில் நிறுத்தினான். என்னடா தம்பி என்றான் பையன் அவனைப்பார்த்து அண்ணே என்னையும் அழைச்சிட்டு போறீங்களா போற வழியிலே நான் இறங்கிக்கிறேன் ப்ளீஸ் என்றான்.


மறுப்பேதும் சொல்லாமல் அந்த பையனை பைக்கில் ஏற்றிக்கொண்டு பைக்கை கிளப்பினான். பைக் பறக்க தொடங்கியது. பைக் எஞ்சினின் மெல்லிய சத்தத்தை தவிர வேறு சத்தம் எதுவும் இல்லை. பைக்கை ஓட்டிக்கொண்டே ராஜேஷ்" தம்பி உன்ன எங்க இறக்கிவிட "என்று கேட்டான். அண்ணே நீங்க எதுவரைக்கும் போறீங்க என கேட்டான் பையன். பதிலுக்கு

"பாரதிபுரம் போறேன்"என்றான் ராஜேஷ். அப்படின்னா என்ன துளசி பள்ளத்தில் இறக்கி விடுங்கண்ணே என்றான் பையன்.

அதிர்ந்து போனான் ராஜேஷ் பையனின் பதிலால். துளசி பள்ளம் எவ்வளவு பயங்கரமான இடம் பாரதிபுரம் போகும் வழியில் உள்ளது.


துளசி பள்ளம் ரோட்டின் அருகே உள்ள ஒரு பள்ளமான பகுதி அங்கே ஒரு காலத்தில் துளசி செடிகள் அதிகம் இருந்தது அதனால் அப்பெயர் அந்த இடத்திற்கு வந்திருக்கலாம் ஆனால் பிற்காலத்தில் அந்தப் பள்ளம் நிறைய உயிர்களை காவு வாங்கியிருக்கிறது அங்கிருந்த மரங்களில் நிறைய பேர் தூக்கு மாட்டிக் கொண்டு செத்து இருக்கிறார்கள் கொலை செய்து பிணத்தை அந்தப் பள்ளத்தில் வீசி விட்டுச் சென்றதையும் அவன் கேள்விப்பட்டிருக்கிரான். சாயந்தரம் ஆறு மணிக்கு மேல அந்த இடத்தில் நிறைய பேய்களும் ஆவிகளும் சுற்றுவதாகவும் ஆவிகள் பலரை அடித்து இருப்பதையும் கேள்விப் பட்டிருக்கிறான். அந்த இடத்தை கிராஸ் செய்து முடிப்பதற்குள்ளேயே ரத்தம் உறைந்து விடும் அந்த இடத்தில் போய் இறக்கிவிட சொல்கிறானே இவன்.பாவி .... தெரியாத்தனமாக இவனை ஏற்றிக் கொண்டு வந்து விட்டோம் என்று நொந்துகொண்டான்.,"டேய் தம்பி அங்கயா இருக்கு உன் வீடு?" என்று கேட்டான் ராஜேஷ். பையனிடம் இருந்து பதிலை காணோம். பைககை ஓட்டிய படியே பின்னால் திரும்பிப் பார்த்தான் ராஜேஷ். அதிர்ந்து போனான் பின் சீட்டில் பையனை காணோம்.....

தொடரும்.



Rate this content
Log in

Similar tamil story from Horror